Store
  Store
  Store
  Store
  Store
  Store

பாகப்பிரிவினை செய்வது எப்படி...?


   னிதன் செத்துப் போனால் அவனுக்கு தேவை ஆறடி நிலம் ஆனால் அவன் உயிரோடு இருக்கும் போது ஒரு அங்குல நிலத்துக்கு கூட வாழ்நாள் முழுவதும் போராடுகிறான் அந்த போராட்டம் அந்நிய மனிதர்களோடு மட்டும் அல்ல தனது சொந்த ரத்த பந்தங்களோடும் போராட தயாராக இருக்கிறான் அப்படி பட்ட ஒரு போராட்டத்தின் நெடிய கதைதான் மகாபாரதம் என்பது நாம் அனைவரும் அறிந்த சங்கதி 

மகாபாரத கதையின் பங்காளி சண்டை குருஷேஷ்திர யுத்தக்களத்தோடு முற்று பெறவில்லை நம் காலத்திலும் நம் சொந்த குடும்பத்திலும் கூட மண்ணுக்காக அண்ணன் தம்பிகள் அடித்துக்கொண்டு நிற்பதை காண்கிறோம் என் தாய்வழி பாட்டனாருக்கு நான்கு சகோதர்களாம் அவர்களில் ஒருவர் கூட என் தாயாரின் விவரம் தெரிந்த காலம் முதல் ஒற்றுமையாக இல்லையாம் ஒரே ஒரு ஏக்கர் நிலத்திற்காக சாகும் வரை போராடியிருக்கிறார்கள் பகையாளியாகவே காலமாகியும் விட்டார்கள் இப்படி எத்தனையோ குடும்பங்களின் பழைய கதையும் புதிய கதையும் நடந்தது நடந்து கொண்டும் இருக்கிறது 

இன்று நீதி மன்றங்களில் தேங்கி கிடக்கும் பல வழக்குகள் நிலசம்பந்த பட்டதாகவே இருக்கின்றன அந்த இடம் நல்ல இடம் அதை அண்ணன்காரன் அநியாயமானமுறையில் பிடுங்கி கொண்டான் எனக்கு அதை எப்படியாவது வாங்கி தாருங்கள் என்று அண்ணனுக்கு எதிராக தம்பியும் தம்பிக்கு எதிராக அண்ணனும் மல்லுக்கட்டிக்கொண்டு நிற்பதை நாளும் காண்கிறோம்



அட ஏனப்பா அடித்துக்கொண்டு மாய்கிரீர்கள் ஒருவனுக்கு ஒருவன் விட்டு கொடுத்து போங்கள் என பெரியோர்கள் சொன்னாலும் மண்ணாசை கொண்ட மனிதர்கள் விடுவதில்லை பாட்டன் போட்ட வழக்கிற்காக பேரன் கூட நீதிமன்ற வாசலில் கடுந்தவம் செய்கிறார்களே தவிர சாகும் போது தூக்கி கொண்டா போகிறோம் என்று எண்ணி பார்க்க எவருக்கும் அவகாசம் இல்லை மனிதனின் ஆசைகள் விவரீதமானது அவற்றை சுதந்திரமாக செயல்பட விட்டால் பயங்கர விளைவுகள் ஏற்படும் என்பதை நன்றாக அறிந்திருந்த நமது முன்னோர்கள் சொத்துக்களை பிரிப்பதற்கு சில நியாய முறைகளை கண்டிப்பாக கையாண்டார்கள் அந்த முறைகள் நடைமுறையில் இருக்கும் காலம் வரை நிலத்தகராறுகள் கிராமத்து எல்லைகளைவிட்டு வெளியேறியது இல்லை 

அண்ணன் தம்பி எத்தனை பேரோ அத்தனை பேரிலும் மூத்தவனுக்கு கடேசி பகுதியும் இளையவனுக்கு முன் பகுதியும் பகிர்ந்து கொடுப்பது அந்நாளைய வழக்கம் மூத்தவனுக்கு கடேசி பகுதியை கொடுப்பதற்கு காரணம் இருந்தது எதிலும் அடியாக இருப்பதுதான் வலுவாக இருக்கும் அண்ணன் என்பவன் அஸ்திவாரமாக இருந்து அதாவது அடியாக இருந்து எல்லாவற்றையும் தாங்க வேண்டும் என்பதே அதன் உள்ளார்ந்த அர்த்தமாகும் 

ஆதிகால அண்ணன்கள் இதை ஏற்றுக்கொண்டு நடந்தனர் தகப்பனுக்கு பின்னர் தான் தானே தலைமகன் தம்பிகளுக்கு வழிகாட்ட வேண்டிய கடமை எனக்கு தானே உண்டு என்று பொறுப்பை உணர்திருந்தனர் தம்பிகளும் தமயனின் அடிபணிந்து நடந்தனர் அதனால் ஊரும் உலகமும் அமைதியாக இருந்தது பொதுவுடமை என்பது சட்டமாகமாலே கடைபிடிக்கப்பட்டது



ஆனால் காலம் செல்ல செல்ல மனித அறிவு வளர வளர ஆசையும் வளர்ந்தது வலுவுள்ளவனுக்கே நல்ல பங்கு அது இல்லாதவனுக்கு பிச்சை பாத்திரமே சொந்த பங்கு என்ற நிலை வந்தது நெறிமுறைகள் காற்றில் பறந்தன மனசாட்சி என்ற பசுமை வயல் வறண்டு போய் விட்டன போட்டியும் பூசலுமே சமூகத்தின் அன்றாட செயலாகின அடித்த சுயநல சூறாவளியால் கூட்டுக்குடும்ப வீட்டுக்கூரைகள் பறந்து போய்விட்டன நீதிமன்ற வாசல்களே பங்காளிகளின் நிரந்தர வாசஸ்தலமாகி விட்டன 

நிலம் மற்றும் மண் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களுக்கும் சரியான நெறிமுறைகளை வழிமுறைகளை கூறுகின்ற வாஸ்து சாஸ்திரம் அண்ணன் தம்பிகள் பாகபிரிவினைக்காக அடித்துக்கொண்டு சாகக்கூடாது பஞ்சாயத்தார் முன் கை கட்டி நிற்க கூடாது என்ற நல்ல எண்ணத்தில் சில வழிவகைகளை சொல்லியிருப்பது உண்மையாகவே ஆச்சரியம் தான் காரணம் மனிதன் சட்டம் போட்டு சில நல்ல விஷயங்களை சொன்னால் அதை ஏன் நான் செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்பான் அதையே சாஸ்திரம் என்று சொல்லிவிட்டால் வாயை மூடிக்கொண்டு கேட்டு நடப்பான் இதை உணர்ந்த நமது பெரியவர்கள் குருடர்களான நமக்கு நல்ல வழியை காட்டியிருக்கிறார்கள் 

ஒரு வீடு இருக்கிறது அதை அண்ணன் தம்பிகள் தங்களுக்குள் பங்கிட்டு கொள்ள விரும்பினால் அண்ணனுக்கு மேற்கு பக்கமும் தம்பிக்கு கிழக்கு பக்கமும் பிரிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது இது இருவர் மட்டுமே இருந்தால் சரியாக வரும் இருவருக்கு மேல் இருந்தால் மூத்தவன் தென்மேற்கிலும் அடுத்தவன் வடமேற்கிலும் மூன்றாமவன் தென்கிழக்கிலும் நான்காவது உள்ளவன் வடகிழக்கிலும் இருக்குமாறு பங்கிட வேண்டும் என்று வகுக்கப்பட்டிருக்கிறது அதே போல பெண் வாரிசுகளுக்கும் பங்கிட வேண்டுமென்றால் சகோதரர்கள் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளிலும் சகோதரிகள் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளிலும் பங்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறது ஒரே குடுபத்தில் நான்கு பேருக்கு மேலே இருந்தால் அவர்கள் ஒரே வீட்டை பங்கிட்டு கொள்ள விரும்பினால் நான்கு பேர் தவிர மற்றவர்கள் தங்கள் பங்காக பணத்தை பெறவேண்டுமே தவிர இடத்தை பெறக்கூடாது என்றும் சொல்லப்பட்டுள்ளது




இது மட்டும் அல்ல ஒரே தெருவில் சகோதரர்கள் வாழ நேரிட்டால் அடுத்தடுத்து பக்கத்தில் வீடுகட்டி கொள்ளலாமே தவிர எதிரே எதிரே மனைகளை அமைக்க கூடாது என்றும் வாஸ்து சாஸ்திரம் வரையறுத்து கூறுகிறது இதன் படி பங்கிட்டு கொண்டு வாழ்பவர்களில் யாரும் கெட்டுப்போனதாக சொல்ல முடியாது சாஸ்திரத்தை மதிக்காமல் மீறி நடப்பவர்கள் கஷ்டத்தை அனுபவிப்பதை தான் காண முடிகிறது
நீதிமன்றம் சொன்னாலும் கேட்டக மாட்டோம் பஞ்சாயத்தார் கரடியாக கத்தினாலும் காதுகொடுக்க மாட்டோம் என்பவர்கள் சற்று நிதானமாக சிந்தித்து வாஸ்து முறையை நம்பி அதையே கடவுளின் தீர்ப்பாக ஏற்று நடந்தால் சண்டை சச்சரவு மட்டும் அல்ல வாழ்வில் எப்போதுமே சங்கடங்களை சந்திக்காமல் வாழலாம் இது உறுதி. 




 

Contact Form

Name

Email *

Message *