Store
  Store
  Store
  Store
  Store
  Store

குழந்தைகளை கைது செய்யாதீர்கள்...!


  ன்றைய பெற்றோர்களுக்கும் இளைஞர்களுக்கும் உள்ள பிரச்சனைகளில் மிக முக்கியமானது கல்வி கற்பதில் உள்ள இடர்பாடுகள் பல ஆயிரம் பல லட்சம் செலவு செய்து படிக்க அனுப்பும் பிள்ளைகள் தீய பழக்க வழக்கங்கள் தீய நண்பர்கள் போன்றவற்றாலும் இவை எதுவுமே இல்லை என்றாலும் ஞாபக மறதியாலும் உடல் சோர்வாலும் கற்க முடியாத சூழலுக்கு உள்ளாகி நிற்கிறார்கள் இவற்றில் இருந்து வெளிப்படுவது விடுதலை அடைவது எப்படி என்ன வழி என்று நிறைய பேருக்கு புரியவில்லை 

   நமது குருஜி பிள்ளைகளை வழிநடத்துவோம் என்ற புத்தகம் எழுதி புகழ் பெற்றவர் பல்வேறு பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு நேரடி விளக்கம் கொடுத்து அனுபவபட்டவர் அவரிடம் இது சம்பந்தமான என் சந்தேகங்களை கேட்டேன் அதற்கு அவர் தந்த பதில்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் 


படிப்பதில் உள்ள பிரச்சனைகளை சிக்கல்களை தீர்த்து கொள்வதற்கு சுலபமான வழி என்ன?

வாழ்க்கையில் பிரச்சனைகள் வராமலும் வந்தால் தடுத்து கொள்ளவும் தான் படிக்கிறோம் ஆனால் இன்று படிப்பதை ஒரு பிரச்சனையாக இருக்கிறது இதற்கு காரணம் மாணவர்களின் குற்றம் என்று நான் சொல்ல மாட்டேன் என் கணக்கு படி என் அனுபவப்படி கல்வியில் குறையுடைய குழந்தைகள் என்று யாருமே இல்லை அவர்களுக்கு புரியும் வண்ணம் அவர்கள் விரும்புகிற வண்ணம் கற்பிப்பதற்கு தான் ஆட்கள் கிடையாது 

காலையில் பள்ளிக்குடம் போகும் குழந்தையின் முகத்தை பாருங்கள் பெரிய புத்தக மூட்டைகளை ஏசு நாதர் சிலுவையை சுமப்பது போல் தூக்க முடியாமல் தூக்கி கொண்டு தூக்கு மேடைக்கு போவது போல் சோகமாக போவார்கள் அவர்களே மாலையில் வீடு திரும்பும் போது முகத்தில் களைப்பு இருந்தாலும் விடுதலை பெற்ற பட்டாம் பூச்சியாக வருவார்கள் என்னை கேட்டால் குழந்தைகளின் சிறைச்சாலை பள்ளிக்கூடம் என்பேன் நமது பள்ளிக்கூடங்கள் ஆறு மணிக்கு மணியடித்தால் சோறு கிடைக்கும் என்று ஒரு நாய் குட்டியை பழக்குவது போல் தான் குழந்தைகளை பார்க்கிறார்கள் 

பாடமெடுக்கும் ஆசிரியர்கள் தங்களை இதமாக பதமாக குழந்தைகளின் மனமறிந்து போதிக்கும் குருவாக நினைப்பதே இல்லை பல ஆசிரியர்களுக்கு குழந்தைகளின் மன நிலயை பற்றி அரிச்சுவடி கூட தெரியாது ஆடு மாடுகளை பார்ப்பது போல் தான் பிள்ளைகளை பார்க்கிறார்கள் கைநிறைய வருமானம் வந்தாலும் கூட அதற்கான உழைப்பை கொடுக்கவேண்டுமென்ற எண்ணம் பல ஆசிரியர்களுக்கு கிடையாது மிரட்டி உருட்டி மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாக குழந்தைகளை ஆக்கிவிடுகிறார்கள் 

இதன் விளைவு தான் படிப்பின் மீதே வெறுப்பு என்பது பிள்ளை பருவ முதல் பதிந்து விடுகிறது அல்லது மனப்பாடம் செய்வது தான் படிப்பின் ஒரே வழி என்ற சிந்தனையும் உறுதிப்பட்டு விடுகிறது இந்நிலையில் கல்லூரிக்கு வரும் போது பழைய எண்ணங்களே நம்பிக்கைகளே தொடர்வதனால் படிப்பில் சிக்கல் ஏற்படுகிறது 

இதை மாற்ற குழந்தை பிராயம் முதலே ஆர்வத்தை தூண்டுகிற வண்ணம் கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும் மனப்பாடம் செய்பவன் தான் சிறந்த மாணவன் என்ற நிலை மாறி புதிய சிந்தனைகளை உருவாக்குபவனே சிறந்த மாணவன் என்ற நிலை வரவேண்டும் அப்படி வந்தால் படிப்பதில் ஏற்படும் சிக்கல்கள் தானாக விலகிவிடும் 


அந்த நிலை வரும்போது வரட்டும் ஆனால் அதுவரை படிப்பவன் படிக்காமல் இருக்க முடியாது எனவே இன்றைய கல்வி முறைப்படி சுலபமாக ஞாபக சக்தியை வளர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? 
நமது குழந்தைகளுக்கு கைவீசம்மா கைவீசு என்று பாடம் எடுக்கிறோம் அந்த பாடத்தை குழந்தைகள் கைகளை கட்டியவண்ணமே படிக்கின்றன முதலில் அதை மாற்ற வேண்டும் தினசரி ஓடி ஆடி விளையாடும் பழக்கத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும் அடுத்ததாக ஆரோக்கியம் மிகுந்த உணவுகள் கண்டிப்பாக குழந்தைகளுக்கு தேவை பொதுவாக குழந்தைகளும் இளைஞர்களும் சுவை மிகுந்த உணவின் மீது கொள்ளுகின்ற நாட்டத்தை ஆரோக்கிய உணவின் மீது செலுத்துவது கிடையாது நமது சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு உள்ள அரிசி கோதுமை ராகி போன்றவற்றால் செய்யப்படும் உணவுகளையும் கீரைகள் பழங்கள் காய்கறிகள் போன்றவற்றையும் உண்ண பழக வேண்டும் 

நாகரீகம் என்ற போர்வையில் பதப்படுத்த பட்ட உணவுகளையும் பேக்கரி அயிட்டங்களையும் சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் குளிர்பானங்கள் போன்றவைகளை அளவுக்கு மீறி அருந்த கூடாது மிக முக்கியமாக எளிமையான உடல் பயிற்சிகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் அதிகாலை கண்விழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் 

யோகாசனம் பிரணாயாமம் போன்றவைகளை கற்றுக்கொடுக்க வேண்டும் வாய்விட்டு சத்தமாக படிக்க வேண்டும் அப்படி செய்வதனால் உச்சரிப்பும் தெளிவாகிறது மீண்டும் மீண்டும் சொற்கள் கேட்க படுவதனால் மனதிலும் சுலபமாக பதிந்து விடுகிறது குளிர்ந்த நீரில் குளிப்பதனால் மூளையின் சூடு குறைந்து நிதானப்பட்டு ஞாபக சக்தி அதிகரிக்கிறது இந்த பழக்கங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தாலே மனப்பாடம் செய்வதில் உள்ள சிக்கல்கள் தீர்ந்து விடும் 


தீய பழக்கங்கள் ஏற்படாமல் தடுப்பது எப்படி?

பொதுவாக குழந்தைகள் தங்கள் பெற்றோர்களையே ரோல் மாடல்களாக எடுத்துக்கொள்வார்கள் நான் என் மகன் முன்னால் சிகரட் பிடித்தால் அவனுக்கும் அதன் மீது ஆசை வரும் அதில் என்னத்தான் சுகம் இருக்கிறது என்று பார்ப்போமே என்று அவன் மனம் நிச்சயம் நினைக்கும் எனவே நமது பழக்க வழக்கங்களை நல்ல முறையில் அமைத்துக்கொள்ள வேண்டும் குறைந்த பச்சம் குழந்தைகள் முன்பு ஒழுக்கமாக நடக்க முயற்சிக்க வேண்டும் 

கணவன் மாணவி தகராறை பிள்ளைகள் முன்னால் நடத்தினால் அவைகளுக்கு நிச்சயம் மன உளைச்சல் ஏற்படும் இதானால் தங்கள் மன கஷ்டத்தை பகிர்ந்து கொள்ள இதமாக பேசும் நண்பர்களை நாடுகிறார்கள் அவர்கள் நல்லவர்களாக இருந்தால் சிக்கல் கிடையாது வேறுமாதிரி அமைந்து விட்டால் நிலைமை விபரீதமாகி விடும் 

அடுத்ததாக குழந்தைகள் கேட்பதை வாங்கி கொடுக்கிறோம் நினைத்தப்படி செயல்பட அனுமதிக்கிறோம் இது தான் குழந்தை வளர்ப்பு இது போதும் என்று பல பெற்றோர்கள் நினைக்கிறார்கள் இது தவறு பெற்றோரின் கடமை இத்தோடு நின்று விடுவது அல்ல எது சரி எது தவறு என்பதை குழந்தையின் வயதுக்கு ஏற்ற வாறு புரியும் வண்ணம் சொல்ல வேண்டும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தெளிவான உறுதியான பதில்களை சொல்லி விளங்க வைக்க வேண்டும் 

பல குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை முட்டாள்களாகவே நினைக்கிறார்கள் இதற்கு காரணம் நாம் அவர்களுக்கு சரிவர பதில் சொல்லாததே ஆகும் நம்மால் சிறந்த பதிலை சொல்ல முடியும் என்றால் குழந்தைகள் நம்மை சிறந்த வழிகாட்டிகளாக ஏற்று கொள்வார்கள் அப்படி வளரும் குழந்தைகள் நிச்சயம் தீய பழக்கத்திற்கு ஆளாக மாட்டார்கள் 


இப்படி என் கேள்விக்கு விளக்கமான பதிலை குருஜி சொன்னார் இதில் எதாவது ஒன்றையாவது நாம் கடைபிடித்தால் நிச்சயம் நமது நாளைய தலை முறை நல்ல முறையில் உருவாகும்


பேட்டி A.
ஷகிலா பானு. M.B.B.S,MD
அரியலூர்




Contact Form

Name

Email *

Message *