Store
  Store
  Store
  Store
  Store
  Store

வீடு கட்டலாமா...?


    ன்புள்ள குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் சில வருடங்களாக பாடுபட்டு சிறிது பணம் சேர்த்துள்ளேன் இன்னும் கொஞ்சம் வங்கியில் கடன்வாங்கி சொந்தமாக வீடுகட்ட விரும்புகிறேன் என் மனைவி ஜாதகப்படி நேரம் காலம் சரியாக இருக்கும் போது தான் சொந்த வீடு கட்ட வேண்டும் அது சரியாக இல்லாத போது வீடு கட்டினால் முழுமையாக முடிப்பது சிரமமென்று சொல்கிறாள் அவள் அறிவுரைப்படி என் ஜாதகத்தை உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன் தயவு செய்து கணித்து பார்த்து நான் இப்போது வீடு கட்டலாமா? வேண்டாமா என்று சொல்லவும் நீங்கள் சொல்வதில் தான் என் முயற்சி அடங்கி இருக்கிறது தயவு செய்து தெளிவாக வழிகாட்டவும்.

கோகுலகிருஷ்ணன், தாம்பரம்


    காட்டில் வாழுகின்ற பறவைக்கும் சொந்தமாக கூடு வேண்டும் கூடுகட்ட தெரியாத குயில்களை போல மனிதர்கள் வாழ முடியாது உணவு உடை போன்ற அத்தியாவசிய விஷயங்களில் உறைவிடம் என்ற வீடும் ஒன்றாக இருக்கிறது அதனால் மனித வாழ்வில் திருமணம் குழந்தைபேறு போன்ற முக்கிய நிகழ்வுகளில் வீடும் முக்கிய பங்கு ஆற்றுகிறது.

சிறிது சிறிதாக பணத்தை சேகரித்து செங்கல் மண் என்று பொருள்களை வாங்கி கண்ணெதிரே வீடு ஒரு குழந்தையை போல எழுந்து நிற்கும் அழகை பார்க்கும் போது ஒவ்வொரு மனிதனும் ஆத்மபூர்வமாக சிலிர்த்து போகிறான் அந்த சிலிர்ப்பை பெற எந்த சவால்களையும் சந்திக்க தயாராகி விடுகிறான் நீங்களும் அப்படி ஒரு பெரும் பேரை பெற தயாராக இருக்கிறீர்கள்.

நீங்கள் அனுப்பிய உங்கள் ஜாதகத்தை துல்லியமாக கணித்து பார்த்ததில் அடுத்த வருடம் குரு பெயர்ச்சிக்கு பிறகு சொந்த வீடு கட்ட துவங்கினால் அது நல்லபடியாக நடைபெறும் என்று தெரிகிறது. எனவே இதுவரை பொறுத்திருந்த நீங்கள் இன்னும் சிறிது காலம் காத்திருங்கள் இறைவன் அருளால் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.




Contact Form

Name

Email *

Message *