Store
  Store
  Store
  Store
  Store
  Store

சாமி மட்டும் தீட்டா...?


ங்கம்ம்மா சேலையும்
எங்கம்மா சேலையும்
ஒன்றேபோல் கிழிசல்தான்
உங்கப்பா மேனியும்
எங்கப்பா மேனியும்
ஒன்றேபோல்
வியர்வை நாற்றம்தான்

உங்க பள்ளிக்கூடமும்
எங்க பள்ளிக்கூடமும்
கூரையில்லா
மொட்டை சுவர்தான்.
சத்துணவு வாங்க
நீ கொண்டு போறதும்
நான் கொண்டு போறதும்
ஓட்டை அலுமினிய தட்டு தான்.

பென்சிலும் நோட்டும் வாங்க
நீயும் நானும் ஒன்றாகவே
அடம்பிடித்து அழுகிறோம்
தீபாவளி வந்தால்
புதுத்துணி கிடைக்காதா என்று
இருவருமே ஏங்குகிறோம்

பண்டிகை நாட்களிலும்
பலகாரம் இல்லாமல்
இருவருமே தூங்குகிறோம்.
நம் வீட்டு அடுப்புகள்
அணைந்து கிடப்பதில்
சமமாக இருப்பது போல்
உனக்கொரு சாமி என்று
எனக்கொரு சாமியென்று
வித்தியாசம் பார்ப்பது ஏன்?
உன் ஓலை கோவிலுக்குள்
நானுளைந்து
வணங்குவதால்
தீட்டு என்று தடுப்பது ஏன்?
புரியாத கேள்விக்கு
தெளிவாக பதில்சொல்ல யார் இங்கே?http://1.bp.blogspot.com/_mXGon_GfcbA/TNmPG39FmyI/AAAAAAAADjk/to8aHGROZsE/s1600/sri+ramananda+guruj+3.JPG

Contact Form

Name

Email *

Message *