Store
  Store
  Store
  Store
  Store
  Store

இளமை வண்டி பாரம் தாங்கும்


     குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் நான் செண்பகராமன் பிறந்த நாள் முதல் இன்றுவரையிலும் துன்பத்தை தவிர வேறு எதையும் அனுபவித்தது இல்லை பத்து வயதில் தந்தை போய்விட்டார். இருபது வயதில் அம்மாவும் போய்விட்டார் ஒரே ஒரு அக்கா அவருக்கு திருமணம் செய்ய படிப்பை விட்டு விட்டு வேலைக்கு போனேன் என்னால் முடிந்ததை வைத்து அவர் திருமணத்தையும் நடத்தினேன் திருமணம் முடிந்த ஒரே வருடத்தில் கணவனை பறிகொடுத்து வீட்டுக்கும் வந்து விட்டார்கள் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை சொந்தமாக வீடு இல்லை நல்ல வேலையில்லை இப்படி இல்லை என்பது மட்டுமே என் சொத்தாக இருக்கிறது. இந்த நிலையில் என் வாழ்க்கை பாதை எப்படி அமையும் என்று தெரியவில்லை தனிமனிதனாக இருந்தால் தற்கொலை செய்திருப்பேன். அக்காவை காப்பதற்கு யாருமே இல்லை என்பதனால் வாழ்கிறேன் என் கதை என்னவாகும் தயவு செய்து விளக்குங்கள் என் வாழ்வில் வெளிச்சம் வருமா இருள் மட்டுமே தொடருமா? என்பதை தெளிவுபடுத்துங்கள்.

செண்பகராமன்.
ஸ்ரீரங்கம்   


   செண்பக ராமன் என்பதே எவ்வளவு அழகான பெயர் அதை மனதிற்குள் ஒருமுறை உச்சரித்து பாருங்கள் நாம் தேடியும் கிடைக்காத அமைதி கிடைப்பதை உணர்வீர்கள் ஆனால் பாவம் அந்த பெயரை கொண்ட இவருக்கு அமைதி இல்லை ஆனந்தம் இல்லை அரவணைத்து அன்புகாட்டி நம்பிக்கை ஊட்டும் சொந்தமில்லை இது தான் இறைவனின் திருவிளையாடல் அவன் சிலரை மட்டும் எதற்க்காக அதிகப்படியாக சோதிக்கிறான் துன்பத்தை மட்டுமே கொடுத்து பார்க்கிறான் என்பது புரியாத புதிராக இருக்கிறது. இதற்கு விடை கண்டு விட்டால் மனிதன் இறைவனாகி விடுவான்.

இந்திய வரலாற்றில் செண்பகராமன் என்ற பெயர் அழியாத பொன் எழுத்துகளால் பொறிக்கபட்டதாகும்/ ஜெய்ஹிந்த் என்ற வீர மந்திரத்தை நமக்கு தந்த சரித்திர புருஷன் செண்பகராமன் பிரிட்டிஸ் அரசாங்கத்தின் பிடரியை பிடித்து உலுக்குவது போல எம்டன் கப்பலில் வந்து சென்னை மீது குண்டு வீசிய மாபெரும் வீரன் அவன் அவனது பெயரை கொண்ட இவர் சங்கடங்களை மட்டுமே சந்திக்க பிறந்தவர் அல்ல இப்போது இவர் சந்திக்கும் சங்கடங்கள் நிரந்தரமானதும் அல்ல

இவர் ஜாதகத்தில் நாங்காவது இடத்தில் குரு உச்சமாக இருக்கிறார் நாங்காம் இடம் என்பது சுகஸ்தானம் ஆகும் . இதில் குரு உச்சம் பெறுவது மிகவும் விஷேசமான தன்மையாகும் இப்போது இவர் அனுபவிக்கும் கஷ்ட நஷ்டங்கள் தற்காலிகமானது/ தனது முப்பத்தி ஐந்தாவது வயதில் பல சிறப்புகளை வாழ்வில் பெறுவார் என்று பல ஜாதக நூல்கள் இவரது கிரக நிலையை வைத்து சொல்கிறது.

எனவே இன்னும் ஐந்து வருடங்கள் பொறுமையோடு இருங்கள் எத்தனை துயரம் வந்தாலும் சோதனை வந்தாலும் அமைதியோடு தாங்கி கொள்ளுங்கள் தங்கம் மின்னுவதற்கு அடி விழத்தான் செய்யும் அதை தாங்கி கொண்டு தான் ஆக வேண்டும் .இன்று இளமையில் கஷ்டபடுவது ஒருவிதத்தில் நல்லது காரணம் துயரம் என்பது பல அனுபவங்களை தந்து நம்மை செம்மையாக்கும் எனவே கவலை வேண்டாம் நாராயணன் துணை செய்வான்.
Contact Form

Name

Email *

Message *