Store
  Store
  Store
  Store
  Store
  Store

நாலு திசையின் நாயகனே !


ன்றாக ஒளியாக நின்றவனே !
ஓம்கார பொருளாக ஆனவனே !
இரண்டாகி உயிராக பிறந்தவனே !
இருளும் ஒளியுமென தெரிபவனே !
மூன்று குணமாய் நிற்பவன் நீ !
மும்மல விலங்கை ஓடிப்பவ்ன் நீ !
நான்கு வேதம் நீ ! நான்கு தர்மம் நீ !
நான்கு திசையின் நாயகன் நீ !
ஐந்து புலனின் ஆற்றல் திறன் நீ !
ஐந்து பூதத்தின் ஆத்ம ஒளி நீ !
ஆறு ஆதார வடிவாய் வந்தாய்
ஆறு சாஸ்திர அறிவாய் தெரிந்தாய்
ஏழு சுரமாய் எங்கும் விரிந்தாய்
ஏழு வண்ணமாய் எங்கும் நிறைந்தாய்
எட்டு திசையும் ஆட்சி செய்தாய்
எட்டு குணத்தால் உலகை ஆண்டாய்
ஒன்பது கிரகம் நீயே அன்றோ ...!
ஒன்பது வாசலின் உயிரும் அன்றோ ...!
பத்தும் பட்டு தெளிய வைப்பாய்
பத்தும் கொடுத்து புரிய செய்வாய்
எண்ணும் எழுத்தும் எழுதாப் பொருளும்
கண்ணுக்கு தெரியும் தெரியா அருளும்
மண்ணுக்குள் விழையும் மாதவ பிழம்பும்
விண்ணுக்குள் இருந்து ஆழும் அரசே !
பட்டினி கிடக்கும் பாலரை மறந்து
கட்டிய மனையாள் தன்னையும் மறந்து
எட்டிய செல்வம் எல்லாம் துறந்து
வெட்டிய குழிக்குள் விழுந்து கிடக்கும்
மூடனை காத்திடு உலகின் முதல்வா !
வேடனை நம்பும் மான்களை போல
ஜோடனை வார்த்தையில் மயங்கி மகிழும்
பேடை என்னை போற்றி காத்திடு !


http://1.bp.blogspot.com/_mXGon_GfcbA/TNmPG39FmyI/AAAAAAAADjk/to8aHGROZsE/s1600/sri+ramananda+guruj+3.JPG

Contact Form

Name

Email *

Message *