Store
  Store
  Store
  Store
  Store
  Store

பதவி உயர்வு எப்போது...?


   ன்புள்ள குருஜி அவர்களுக்கு பணிவான நமஸ்காரம் நான் பத்துவருட காலமாக பொது பணித்துறையில் குமாஸ்தாவாக பணியாற்றி வருகிறேன். இதுவரையில் எனக்கு நியாயமான முறையில் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைக்கவில்லை எனக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்கள் பலவித சமார்த்தியங்களை பயன்படுத்தி உயர்ந்து விடுகிறார்கள். எனக்கு அவர்களை போல வளைந்து நெளிந்து போக தெரியவில்லை அதிகமான பணவசதியும் இல்லை இயற்கையாக பதவி உயர்வு கிடைக்கவில்லை என்றால் அதை பற்றி கவலைபடுவதில் அர்த்தமில்லை ஆனால் அனைத்து தகுதியும் இருந்தும் சிபாரிசும் பணமும் இல்லாததால் அது கிடைக்கவில்லை எனும் போது மனசங்கடமாக இருக்கிறது. குருஜி அவர்கள் தயவு செய்து என்ஜாதகத்தை பார்த்து பதவி உயர்வு கிடைக்குமா? அல்லது இந்த நிலையிலே தான் ஓய்வு பெறுவேனா? என்பதை சொல்லும் படி தாழ்மையுடன் கேட்கிறேன்.

இப்படிக்கு           
பாலதண்டாயுதபாணி
தேனீ               ரு நிறுவனம் நன்றாக வளரவேண்டுமென்றால் அதில் திறைமை வாய்ந்த பணியாளர்கள் இருக்க வேண்டும். ஊழியர்களின் திறமையை இதுவென்று கண்டறிந்து வேலைகொடுக்கும் நிர்வாகம் அந்த தொழிலாளர்களின் திறமைக்கு ஏற்ற அங்கிகாரமும் உயர்வும் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் தான் நிர்வாகமும் நன்றாக இருக்கும் நிர்வாகத்தால் அடையகூடிய பயன்பாடும் சிறப்பாக இருக்கும். துரதிஷ்டவசமாக நமது அரசாங்க நிறுவனங்கள் ஒருவித மந்த நிலையில் இயங்குவதற்கு இதுவே காரணம் திறமையை அறியும் நிர்வாகியும் கிடையாது திறமைக்கு ஏற்ற பாராட்டுதலும் கிடையாது. அதனால் நாட்டு மக்கள் எந்த பயனையும் அடைவதும் கிடையாது.

பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் தமிழக முதலமைச்சராக இருந்த போது மக்கள் பணிக்கான புதிய திட்டங்களை வகுப்பதற்கு முன்னால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளையும் நிபுணர்களையும் அழைத்து ஆலோசனை கேட்பாராம் அப்படி கேட்ட பிறகு ஏம்பா எந்த திட்டத்தையும் இது முடியாது, இதனால் நஷ்டம் வரும் அரசாங்கத்திற்கு அவப்பெயர் வரும் என்று சொல்வாரே அவரை கூப்பிடு என்பாராம் சம்மந்தப்பட்ட துரையின் கள அதிகாரியும் வந்து காமராஜர் சொன்னதை போலவே இந்த திட்டத்தை செயல்படுத்தினால் பெரிய நஷ்டம் வரும். என்று சொல்வாராம் உடனே முடியாது நடக்காது வேண்டாம் விட்டு விடுங்கள் என்று சொல்வதற்க்கா உன்னை அதிகாரியாக வைத்திருக்கிறோம். நஷ்டம் வராமல் எப்படி செய்வது என்று சொல்வது தான் உன் வேலையை தவிர முடியாதது வேண்டாம் என்பதற்கு நீ எதற்கு என்று பதில் சொல்வாராம்.

பணியாளர்களின் நிலையறிந்து அதற்கு ஏற்றார்போல செயல்பட்டததனால் தான் காமராஜரின் நிர்வாகம் இன்றளவும் சரித்திர ஏடுகளில் நிலையாக நிற்கிறது இன்று நிர்வாகவியலை பட்டப்படிப்பாக படிக்கும் கலை வந்து விட்டதே தவிர அனுபவபூர்வமாக நிர்வாகத்தை செய்ய பல பேர் கிடையாது. அதனால் தான் நன்றாக வேலை செய்பவனை பதவி உயர்வு கொடுத்து வேறு இடத்திற்கு மாற்றிவிடாதே இங்கேயே இருக்கட்டும் இதே பதவியிலேயே நிலைக்கட்டும் மனுஷனை கைத்தூக்கி விட்டால் நம் வேலையை யார் கவனிப்பது. அம்மாஞ்சி ஒருவன் கிடைத்து விட்டான் அவனை வைத்து இனாமாக வந்த மாட்டை நிலாவில் கட்டி ஒட்டு என்பதை போல கசக்கி பிழிந்து வேலை வாங்கி விடுவார்கள் ஆனால் வேலைக்காரனின் திறமையை பற்றியோ வாழ்க்கையை பற்றியோ யாரும் நினைத்து பார்ப்பதே கிடையாது.

தனியார் துறையில் நன்றாக வேலை செய்பவனுக்கு நிர்வாக வளர்ச்சிக்காக பதவி உயர்வு கொடுப்பார்கள். ஆனால் அரசாங்க துறை தலைகீழாக நமக்கு தெரிகிறது, யார் வேலை செய்கிறானோ அவனுக்கு மீண்டும் மீண்டும் வேலைகளை கொடுத்து அழுத்து வெளியில் விட்டு விடாதே என்பதே எழுதபடாத சித்தாந்தமாக இருக்கிறது. என்னை பொறுத்தவரை படித்த படிப்பை வைத்தது கொண்டு வேலைக்கு செல்வது என்பது தவறான காரியமென்று நினைக்கிறேன், திறமைக்கு ஏற்ற அறிவுக்கு ஏற்ற அனுபவத்திற்கு ஏற்ற சொந்த தொழிலை செய்வது மட்டுமே முன்னேற்ற பாதைக்கு மனிதனை அழைத்து செல்வதாகும். எத்தனை லட்சரூபாய் சம்பளமாக பெற்றாலும் உத்தியோகம் என்பது திறமைகளை வெளிக்காட்ட முடியாத மிக பெரிய திரை என்பதை ஒத்துகொள்ள வேண்டும் சவால் மிகுந்த வெளிவட்டார சுய தொழிலே ஒருவனை சுதந்திரம் உள்ளவனாகவும் திறமைசாலியாகவும் உயர்த்துகிறது.

எனது கருத்து இது என்பதனால் இந்த கேள்வியை கேட்ட நண்பரை அரசாங்க வேலையை ராஜினாமா செய்து விட்டு சொந்த தொழில் துவங்குங்கள் என்று சொல்ல வரவில்லை ஆயிரம் கலெக்டர் உத்தியோகம் பார்த்தாலும் அதுவும் ஒருவித அடிமை தொழிலே ஆகும். அதற்காக எல்லோரும் சுய தொழிலுக்கு வந்து விடுங்கள் என்றும் சொல்ல முடியாது அப்படி எல்லோரும் வந்துவிட்டால் அரசு நிர்வாகம் எப்படி நடக்கும் எனவே அந்த நண்பர் தொடர்ந்து அரசு பணியே செய்யலாம்.

பொதுவாக ஒரு ஜாதகத்தின் லக்னாதிபதி வலுபெற்று பத்தாமிடத்து அதிபதியோடு இணைந்தால் அரசு உத்தியோகத்தில் மேன்மை கிடைக்கும் இவர் ஜாதகமும் தை மாத முதல் இந்த நிலமையை அடைகிறது அதனால் வெகு விரைவில் இவருக்கு பதவி உயர்வும் சக பணியாளர்களின் இடைஞ்சல்களும் விலகும் கவலையை மறந்து மகிழ்வோடு இருங்கள் காலம் கனிந்து வருகிறது கண்ணபெருமானின் கருணையை பெற்று பதவியில் உயர்வு அடைவீர்கள்.Contact Form

Name

Email *

Message *