Store
  Store
  Store
  Store
  Store
  Store

மத்திய அரசின் காட்டுத் தர்பார்


திர் கட்சிகள் நடத்திய பாரத் பந்த் வெற்றியா? தோல்வியா?

    டந்தது என்னவோ பாரத் பந்த் அதில் சந்தேகம் இல்லை வணிகர்களின் கூட்டமைப்பு இதில் கலந்து கொண்டதனால் தமிழகத்திலும் சரி இந்தியா முழுமைக்கும் சரி வணிக நிறுவனங்கள் மூடி கிடந்தன. அவைகளை பார்க்கும் போது முழு வெற்றி என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இந்த பந்த்தை பல முன்னணி தலைவர்கள் நகைச்சுவை நாடகமாக ஆக்கி விட்டார்கள் என்பதையும் நினைத்து பார்க்க வேண்டும். 

தை வைத்து நகைச்சுவை நாடகம் என்று சொல்கீறீர்கள்?

     மேற்கு வங்கத்தில் பந்த் முழு தோல்வி என்று மம்தா சொல்கிறார் ஆனால் அவரே நடந்த ஹர்த்தாலால் மேற்கு வங்க பொருளாதாரம் சிதைந்து விட்டது என்றும் சொல்கிறார்கள் தோல்வியை தழுவிய முழு அடைப்பு எப்படி பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் இது ஒரு நகைச்சுவை 


மத்திய அமைச்சரவையிலிருந்து மம்தா பேனர்ஜியின் அமைச்சர்கள் சிறுவணிகத்தில் அந்நிய முதலிடு டீசல் விலை உயர்வு ஆகியவையே அவரது வெளியேற்றத்திற்கு முக்கிய காரணம் அதே விஷயங்களுக்காக தான் முழு அடைப்ப்பும் நடைபெறுகிறது அதை அவர் எதிர்க்கிறார் இது இன்னொரு நகைச்சுவை நம் தமிழ்நாட்டி எந்த மத்திய அரசில் இடம்பெற்று அமைச்சரவை தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு செயல்படுகிறதோ அந்த திமுக பாரத் பந்தை ஆதரிக்கிறது. மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டிக்கும் தமிழக முதல்வர் பந்த்தை எதிர்க்கிறார். இது வேறுமாதிரியான நகைச்சுவை. பொதுவாக இந்த நகைச்சுவைகளை ரசிக்க முடியவில்லை காரணம் ரோமாபுரி பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல நமது தலைவர்களின் நகைச்சுவை உணர்ச்சி குரூரமானது 

  ந்நிய நிறுவனங்கள் சிறுவணிகத்தில் ஈடுபட்டால் என்ன தவறு? வியாபாரத்தில் போட்டி என்று வந்தால் அது வாடிக்கையாளர்களுக்கு நன்மையை தான் தருமல்லவா? 

     ரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்வார்கள் கூத்தாடிகளுக்கு மட்டுமல்ல கலைநாட்டமுடைய அனைவருக்குமே அது கொண்டாட்டமாக அமையும் இங்கு அந்நிய முதலீடு வந்தால் நமது வியாபாரிகளுக்கும் அவர்களுக்கும் போட்டி நடக்காது யுத்தம் நடக்கும் அந்த யுத்தத்தின் முடிவு நவீன வசதிகள் கொண்ட அந்நிய முதலாளிகள் நம்மவர்களை கொல்வதில் தான் முடியும் 


மத்திய அரசு சொல்வதை போல இந்தியா வளம்கொளிக்கும் நாடாக வராது உள்நாட்டு தொழிலாளர்கள் தொழில்கள் படுத்து கொள்ளும் விவசாயிகள் மட்டுமல்ல விவசாயமும் கூடவே தூக்கில் தொங்கிவிடும் இப்படி தான் வால்மார்டுகள் சென்ற நாடு எல்லாமே ஆகியிருக்கிறது. அது நம் நாட்டிலும் நடக்க வேண்டாம் என்பதே மக்களின் விருப்பம் 

   ண்மையாகவே நம் அரசு மக்கள் மீது கருணை வைக்கவில்லையா?

     ந்நிய முதலிட்டுக்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டம் நடக்கிறது அந்த போராட்டம் நடந்த சிலமணி நேரத்திலே அந்நியர்களுக்கு ஆதரவான இந்த செயல் திட்டம் சட்டபடி நடைமுறைக்கு வர அரசு உத்திரவு பிறபிக்கிறது மக்களின் உணர்வுகளை அரசாங்கம் புரிந்திருந்தால் இச்செயலை செய்யுமா? 


 அலைகற்றை ஊழலாக இருக்கட்டும் நிலக்கரி சுரங்க ஊழலாக இருக்கட்டும் இப்போது சிறு வணிகத்தில் அந்நிய முதலீட்டை கொண்டு வந்த செயலாக இருக்கட்டும் எவற்றிலுமே மக்களின் உணர்வுகளை அரசு புரிந்து கொண்டதாக தெரியவில்லை இந்த திட்டம் அவசர அவசரமாக இந்த நேரத்தில் கொண்டுவரபட்டதற்கு உலக வணிக நிறுவனங்களிடம் கணிசமான கையூட்டுகளை பெற்றிருந்தாலும் ஆச்சரியபடுவதற்கு ஒன்றுமில்லை.இந்திய சரித்திரத்தில் இதுவரை ஆட்சி செய்த எந்த அரசுமே இந்த அளவு மக்களின் உணர்வுகளை புறம் தள்ளி அரசாட்சி நடத்தியது இல்லை உண்மையில் மன்மோகன் சோனியா ஆகிய இருவரின் கூட்டு தர்பார் ஒரு அவமான சின்னமாகவே வருங்காலத்தில் கருத்தபட்டாலும் விந்தையில்லை.


Contact Form

Name

Email *

Message *