( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

சித்தர்கள் மலையில் தவம் செய்வது ஏன்?


     மது புராணங்களும், வேதங்களும் கைலாய மலையை சிவனின் வாஸ்த தலமாக சொல்கிறது.

   அதே போன்றே திருமாலின் அம்சமாக திருமலை கருதப்படுகிறது.

  திருவண்ணாமலை கூட அல்ல அல்ல அந்த ஊரில் உள்ள ஒவ்வொரு துளி மண் கூட சிவலிங்கமாக மதிக்கப்படுகிறது.

  ஒரு வைணவ பெரியவர் கால்களால் மிதிக்காமல் முழங்காலிட்டே திருமலை ஏறியுள்ளார்.

 காரைக்கால் அம்மையாரும் தலையால் ஊர்ந்தே கைலாச மலையை அடைந்துள்ளார்.

  திருநாவுக்கரசரும் திருவண்ணாமலையை கால்களால் தீண்டுவது பெரும் பாவம் என அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வர் ஆலயத்திலிருந்தே அண்ணாமலையை தரிசித்துள்ளார்.

  அன்னை ஆதிபராசக்திக்கு விந்தியா சல நிவாசினி என்று ஒரு பெயர் உள்ளது.   அதன் பொருள் என்னவென்றால் விந்திய மலையில் வாசம் புரிபவள் என்பதாகும்.

 உச்சி பிள்ளையாரும், ஐயப்பனும் மலையிலேயே இருக்கிறார்கள்.

 குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என வழிபடப்படுகிறது.

 பராம்பரியமான சந்நியாசகளின் ஒரு பிரிவினருக்கு கிரி என்ற மலை பெயரே சந்நியாச நாமமாக கொடுக்கப்படுகிறது.

 இவை எல்லாம் இந்து பராம்பயத்தில் மலைக்கு கொடுக்கும் முக்கியத்துவமாகும்.

 ஏசுநாதர் கூட கொல்கொதா மலையில் தான் முதல் பிரசங்கத்தை துவங்கினார்.

 கல்வாரி மலையில் தான் சிலுவையில் அறையப்பட்டார்.

   ஆகவே மலைகளுக்கும் ஆன்மீக உணர்விற்கும் மிக நெருக்கமான உறவு உலகம் முழுவதும் இருந்து வருகிறது.

   அதற்கு காரணம் என்ன? மலைகள் மனிதனால் அதிகமாக சஞ்சாரம் செய்யாத பகுதி ஆகும்.

    மனித மனதிலிருந்து உற்பத்தியாகும் பல வகையான எண்ண அலைகள் மலை பகுதிகளில் குறைவாகவே இருக்கும்.

   இதனால் தவம் புரிவதற்கும், தியானம் செய்வதற்கும் மலைகள் பேருதவி புரிகின்றன.  இதனாலேயே கடவுள் அம்சமாக மலை கருதப்படுகிறது.

     மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்

+ comments + 2 comments

குருஜி,
பதஞ்சலி யோக சூத்திரம் பற்றி விளக்கஉரை பதிவிட்டால் பலர் பயனடைவார்கள்.

மலையை பத்தி இவளவு விஷயம் இருக்கா!!!பகிர்வுக்கு மிக்க நன்றி.....

Did you get a chance to check the website www.ezedcal.com/ta to manage editorial calendar easily for your blog and show your editorial calendar in your blog easily (optional)
Thanks & Regards
Malar


Next Post Next Post Home
 
Back to Top