Store
  Store
  Store
  Store
  Store
  Store

மீண்டும் புதிதாக பிறந்தோம்


   மிழ் நாட்டு தெருக்களில் முன்பு அடிக்கடி காணப்படும் மரச்சக்கரம் பொருத்திய மாட்டு வண்டிகள் இன்று ஏறக்குறைய காணமல் போய்விட்டது ஆசை ஆசையாக குதிரை வண்டியில் சவாரி செய்யலாம் என்றாலும் இன்று அவைகளும் கிடைப்பதில்லை இதே மாதிரி பல விஷயங்களை காலம் மறந்துகொண்டே வருகிறது. மாட்டு வண்டி குதிரை வண்டி காணமல் போகலாம் அவைகளுக்கு பதிலாக வேறு சில பொருள்கள் அந்த இடத்தை நிரப்ப வந்துவிடலாம் இதனால் மனிதவாழ்வு பெரிய பாதிப்புகளை சந்திப்பதில்லை.

ஆனால் வேறு சில விஷயங்கள் காணாமல் போய்விட்டால் மனித குலமே அழிவை நோக்கி போய்விடும் அப்படிப்பட்ட மிக முக்கியமான விஷயம் இன்று சிறிது சிறிதாக மறைந்துகொண்டே வருகிறது அதை பற்றிய கவலையும் அக்கறையும் பலருக்கு இல்லை அதன் விளைவு இன்று நாடு முழுவதும் துப்பாக்கி குண்டுகளின் சத்தமும் ஊழல்வாதிகளின் ஓய்யாரவாழ்வும் குதுகலமாக கொலோச்சிகின்றன.


ஆம் நாம் காந்தியை அவரின் உயர்ந்த கொள்கைகளை மறந்துவிட்டோம் மறைத்து விட்டோம் அன்பு அரவணைப்பு அஹிம்சை சகோதரத்துவம் ஆகியவற்றை அருகாட்சி சாலைகளில் மட்டுமே வைத்து அழகு பார்க்க துவங்கி விட்டோம் வருடம் தோறும் காந்தியின் பிறந்தநாள் வரும் போது ஒரு நாள் விடுமுறை கிடைக்கிறதே அதுவரை சந்தோசம் என்ற அளவில் மட்டுமே காந்தியை பார்க்கிறோம் இது நமது அலச்சியத்தின் அறிகுறி அல்ல அழிவின் அடையாளம். 

மீண்டும் புதிதாக பிறப்பது போல இந்த நாடு தலைநிமிர வேண்டுமென்றால் மீண்டும் காந்தி என்ற மகாசக்தி புத்தொளி கொண்டு நிமிர வேண்டும் அதற்கு முற்றி முறியும் அளவிற்கு பழுதாகி போன பெரியவர்களை அணிதிரட்ட முடியாது. அது தேவையும் இல்லை இளம் குருத்துக்களான குழந்தைகளை காந்தி என்ற மகாஜோதியின் பால் ஈர்க்க வேண்டும் புதிதாக அவதாரம் எடுத்துள்ள இளம் தலைமுறையினர் காந்திய கொள்கைக்குள் வரவேண்டும்.


அதற்கு காந்தியை மகாத்மா தேசபிதா சுதந்திர போராட்டத்தின் முதன்மை சாரதி என்று மட்டும் குழந்தைகளுக்கு அறிமுகபடுத்தினால் போதாது காந்தி என்றால் யார்? அவர் வாழ்நாள் முழுவதும் மேற்கொண்ட சக்திய நெறி என்றால் என்ன? அதன் படி வாழும் போது சாமான்ய மனிதனும் எப்படி கோபுரம் போல உயர்ந்த மனிதனாக மாறிவிடுகிறான் என்பதை குழந்தைகளுக்கு எடுத்து சொல்ல வேண்டும். சொல்வதோடு மட்டுமல்ல அவர்களை அந்த வழியில் நடத்தியும் செல்ல வேண்டும். அப்போது தான் அப்போது மட்டும் தான் நமது நாடு அல்ல அல்ல நமது உலகம் வருக்கால தலைமுறைக்கு தப்பி பிழைத்து முழுமையாக கிடைக்கும் 

அந்த அறப்பணியை அவர் வந்து செய்வார் இவர் வந்து செய்வார் என்று காத்திருக்காமல் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்று நமது குருஜி விரும்பினார் நேற்று இரவு அவரோடு பேசிகொண்டிருந்த போது நாளை காந்தி ஜெயந்தி என்ன செய்யலாம்? என்று கேட்டோம் விடிந்தால் கல்யாணம் பிடிடா பாக்கை என்று சொல்வது போல சொல்கிறீர்களே விடிவதற்குள் என்ன செய்ய முடியும். என்று அவர் எங்களிடம் கேட்டார். நியாயமான கேள்வி அது காந்தியின் கொள்கையை மக்கள் மத்தியில் குறிப்பாக குழந்தைகளிடம் கொண்டு செல்வது என்றால் அதற்கு சீரிய திட்டங்கள் வேண்டும். பல முன்னேற்பாடுகள் வேண்டும். அவைகள் எதுவும் இல்லாமல் என்ன செய்வது என்று குழம்பினோம்.


எங்கள் குழப்பத்தை உஜிலதேவி இணையதளத்தை பொறுப்போடு நடத்தி கொண்டிருக்கும் சதீஷ் குமாரிடம் தெரிவித்தோம் அவன் வயதால் சிறியவன் என்றாலும் எங்கள் கருத்தை கேட்டவுடன் கொஞ்சம் பொறுங்க ஜி இதோ வருகிறேன் என்று வெளியில் போனான் அப்போது இரவு மணி எட்டு அவன் திரும்பி வந்தபோது நமது தெருவில் உள்ள எல்லா குழந்தைகளையும் ஏற்பாடு செய்து விட்டேன் நாளை அவர்கள் காந்தியை பற்றி பிரமாதமாக நிகழ்சிகளை வழங்குவார்கள் என்றான். எங்களுக்கு நம்பிக்கை இல்லை சரி நடப்பது நடக்கட்டுக்கும் என்று அமைதியாக இருந்தோம். 

காந்தி பிறந்த அக்டோபர் இரண்டாம் தேதி எப்போதும் போல அமைதியாக விடிந்தது. குருஜியை காண சென்றோம் சென்ற எங்களுக்கு அதிர்ச்சியும் ஆனந்தமும் காத்திருந்தது வீட்டு திண்ணையில் தேசிய கொடியை அலங்காரமாக வைத்து அதனருகில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காந்தி படமும் இருந்தது. தெரு குழந்தைகள் ஒருவர் கூட விடாமல் அத்தனை பேரும் வந்திருந்தனர். அந்த குழந்தைகளுக்கு சொற்பொழிவாற்ற கட்டுரை படிக்க காந்தியின் பாடல்களை பாட விடியற்காலம் முதலே நல்ல பயிற்சிகள் கொடுக்கபட்டிருந்தன. 


அவர்களுக்கு பயிற்சியை கொடுத்து வரவழைத்திருந்தது ஓவிய சந்திரிகா என்ற பதினொன்றாம் வகுப்பு மாணவி தந்தை இல்லாத மிகவும் ஏழ்மையான அந்த மாணவி பிறந்த போது பெயர் வைத்ததும் குருஜி தான் இன்று அவர் படிப்பதற்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதும் குருஜி தான் குருஜி விரும்புகிறார் என்றவுடன் பம்பரம் போல சுழன்று குழந்தைகளுக்கு பயிற்சி கொடுத்தது மட்டுமல்லாமல் தானும் கூட போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக கட்டுரை படித்தார். 

உண்மையில் இவ்வளவு எளிமையாக விரைவாக நிகழ்ச்சி ஏற்பாடு ஆகும் என்று யாரும் நினைக்கவில்லை குருஜி வசிக்கும் இந்த தெருவில் ஒவ்வொரு குழந்தையுமே குருஜிக்கு நல்ல நண்பர்களே குருஜி அழைக்கிறார் என்றவுடன் அவர்களுக்கு சந்தோசம் தாளவில்லை பள்ளிகூட நாட்களில் கூட இழுத்து போர்த்தி தூங்கும் அவர்கள் இன்று விடிந்தும் விடியாத காலை பொழுதில் கூட்டமாக கூடிவிட்டார்கள். 


காலையில் குருஜியை காணவந்த நண்பர் டாக்டர் ஆடலரசன் அவர்களே நிகழ்ச்சிக்கு தலைமைதாங்கினார். வழக்கமாக ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் எல்லரோரையும் வரவேற்கும் குருமிஷன் அறகட்டளையின் விழா ஒருங்கிணைப்பாளர் மா.முருகன் இந்த விழாவிற்கும் குழந்தைகளை வரவேற்றார். நிகழ்சிகளை சந்தோஷ் குமார் தொகுத்து வழங்கினார். 

குழந்தைகள் காந்திஜியின் பொன்மொழிகளை மிக அழகாக சொன்னார்கள். அவரை பற்றிய பல தகவல்களை அவர்கள் சொன்னது பலருக்கும் உபயோகமாக இருந்தது. விழா மதிய வேளையில் நடந்தாலும் கூட சமையல் வேலைகளை பாதியிலேயே நிறுத்தி விட்டு தெருவில் உள்ள அனைத்து தாய்மார்களும் வந்திருந்தார்கள். அவர்கள் குழந்தைகள் பத்து பேர் முன்னால் பேசுவதும் பாராட்டை பெறுவதும் அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி தானே.

விழாவில் கலந்துகொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகளையும் இனிப்புகளையும் குருஜி வழங்கினார். காந்தி தனது வாழ்நாள் முழுவதும் அன்பையும் எளிமையையும் உறுதியாக கையாண்டார். அதை போல் நீங்கள் அனைவரிடமும் அன்பாக இருங்கள் குறிப்பாக உங்களிடம் சண்டை போடுபவர்களிடம் அன்பாக இருங்கள் என்று குருஜி பேசினார். குழந்தைகள் அனைவரும் காந்தி வழியில் தங்களால் முடிந்த வரை உண்மை பேசி வாழ போவதாக சொன்னார்கள். மனிதர்கள் தான் கொடுத்த வாக்கை மறப்பார்கள் தெய்வங்கள் மறக்காது. குழந்தைகளும் தெய்வங்கள் தானே. அவர்கள் நிச்சயம் மறக்க மாட்டார்கள் காந்தியோடு கைகோர்த்து வருக்காலத்தை செம்மையோடு சமைப்பார்கள்.

தொகுப்பு -; வி.வி.சந்தானம் 
                    ஆர்.வி.வெங்கட்

Contact Form

Name

Email *

Message *