Store
  Store
  Store
  Store
  Store
  Store

பரிகாரங்கள் உடனே பலன் தருமா...?


     கிரக தோஷங்களுக்கப் பரிகாரம் செய்தபின் அந்தத் தோஷங்கள் நிவர்த்தி ஆகிவிட்டன என்பதை எதை வைத்து முடிவு செய்வது? இப்படி பட்ட சந்தேகம் பலருக்கு உண்டு

  தீராத வயிற்றுவலி வருகிறது.  அதற்கு நாம் மருந்து சாப்பிடுகிறோம்.  சாப்பிடும் மருந்து வேலை செய்கிறதா இல்லையா என்பதை நோய் குணமாகும் அனுபவத்திலிருந்து தான் தெரிந்து கொள்ள முடியும்.  அதே போன்று தான் தோஷங்களுக்கான பரிகாரங்களும் ஆகும்.


  
  குறிப்பிட்ட தோஷ நிவாரணத்திற்காகச் செய்யப்படும். பரிகாரம் காலச்சூழலில் பலன் தருவதை வைத்து தான் உணர்ந்து கொள்ள முடியும்.  ஆனால் உடனடியாகப் பலன்கள் ஏற்பட்டு விடும்.  என்று பலர் நம்புகிறார்கள்.  இது தவறான எதிர்பார்ப்பாகும். எந்தத் துயரமும் உடனடியாக நம்மைத் தாக்குவதில்லை.  நிதானமாகத் தான் நம்மை கஷ்டத்திற்கு உள்ளாக்கும்.

   நிதானமாகத் தான் விடுதலையும் செய்யும்.  10 வருடப் பிரச்சினை ஒரே நாளில் எந்தப் பரிகாரத்தாலும் தீராது.  சற்று காலம் பிடித்து தான் தீரும்.  எனவே கிரக பரிகாரங்கள் பலன் தருவதற்குக் குறைந்த பட்சம் 3 மாதங்களாவது ஆகலாம்.  3லிருந்து 6 மாதத்திற்குள் பிரச்சினையின் வேகம் குறைய அரம்பிக்கவில்லை என்றால் பரிகாரம் பலன் தரவில்லை அல்லது சரியான பரிகாரம் செய்யப்படவில்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.


Contact Form

Name

Email *

Message *