Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஆண்களை கடனாளி ஆக்கும் பெண் !


    மேஷராசி துவங்கி ராசி சக்கரத்தில் ஆறாவது இடத்தில் வருவது கன்னிராசி ஆகும். இந்த ராசியின் வடிவம் கன்னிப்பெண் பொதுவாக ஜாதகத்தில் ஆறாம் இடத்தை எதிரிகளை குறிக்கும் இடமாகவும் நோய் மற்றும் கடன் தொல்லையை குறிக்கும் இடமாகவும் ஜோதிட நூல்கள் கருதுகின்றன. 

ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி கன்னித்தன்மை என்பது மிகவும் புனிதமானதாக இந்திய மரபில் கருதபடுகிறது. மனிதனாக பிறந்த எவனும் தனது அறிவு வளர்ச்சியை கன்னி பருவத்திலேயே பெற்றுவிட வேண்டும். அப்படி பெறாதவன் எந்த வயதிலும் சரியான முழுமையான அறிவை பெற்றுவிட முடியாது. அதோடு மட்டுமல்ல மனதில் எழும்புகின்ற உடல்சார்ந்த உணர்வுகளை கன்னிபருவத்தில் கட்டுபடுத்த தெரியாதவன் தனது வாழ்நாள் முழுவதும் வேதனையை அனுபவிக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளபடுவான். மேலும் கன்னிபருவம் என்பது எதிர்பாலினத்தை ஈர்க்க கூடியது எதிர்பாலினத்தோடு சார்ந்து போகக்கூடியது. 

இந்த இடத்தில் கன்னி ராசிக்கு கன்னி பெண்ணின் உருவம் கொடுக்க பட்டதற்கு ஆழ்ந்த பொருள் உள்ளது. மோகம் என்ற கொடிய நோய் பெண்களை தாக்கி நாசம் புரிவது மிக குறைவு பெரும்பாலான ஆண்களே மோகம் என்ற மாய பிசாசின் கரங்களில் அகப்பட்டு தங்களை அழித்து கொள்கிறான். ஒரு ஆண்மகனை கன்னி பெண்ணின் வடிவமே மோக வலைக்குள் ஈர்க்க கூடியதாக இருக்கிறது. பெண்மோகமானது ஒருவனை எத்தகைய இழி செயலையும் தயக்கமில்லாமல் செய்ய தூண்டும். 

மோகத்தில் அகப்பட்டவன் தனது மோக வெறியை தனித்து கொள்ள விபரீதமான காரியங்களை துணிச்சலுடன் செய்வதனால் அவனுக்கு பொருள் இழப்பும் ஆரோக்கிய இழப்பும் சர்வ சாதாரணமாக ஏற்படுகிறது. அதனால் தான் கடன்களை நோய்களை காட்டுகின்ற ஆறாமிடத்திற்கு கன்னிபெண்ணின் வடிவம் தந்திருக்கிறார்கள். மேலும் ஒரு ஆண்மகனை கடனாளியாகவும் நோயாளியாகவும் ஆக்குவது பெண் மோகம் மட்டுமே என்பதை சற்று ஆராய வேண்டும். 

காம வசத்தில் அதிகமாக அகப்படதவன் கூட இல்லத்தை ஆளுகின்ற இல்லத்தரசியின் தவறான தேவைகளுக்காக வேறு வழியில்லாமல் அதிகபடியான செலவுகளுக்கு ஆட்பட்டு தகுதியை மீறிய கடன் சுமையை உருவாக்கி கொள்கிறான். பொதுவாக கடன் என்பதே ஆசைகளால் தான் ஏற்படுயறது என்பதை ஒத்துகொள்ள வேண்டும். தன்னிடம் ஒரு பொருள் இல்லை அந்த பொருள் மற்றவனிடம் இருக்கிறது என்றால் அது நமக்கு தேவையா? இல்லையா? என்பதை தீர சிந்தித்து யாரும் வாங்கி நுகர்வது கிடையாது. அவன் வைத்திருக்கிறான் அதனால் நானும் வைப்பேன் என்பதனாலையே பொருள் தேவைகள் அதிகரித்து கடன் ஏற்படுகிறது.

நாம் ஒத்துகொள்ள கஷ்டபட்டாலும் ஆண்களை விட பெண்களுக்கே சற்று அதிகபடியான ஆசை உண்டு என்பதை மறுக்க முடியாது. உலக முழுவதும் உள்ள பல ஆண்கள் மனைவியின் அருகாமை பறிபோய்விடுமோ என்ற அச்சத்தினால் மட்டுமே கடன் பட்டாவது வாழ்க்கை துணையை திருப்தி படுத்த வேண்டும் என்று முனைகிறார்கள். 

இதை போலவே பெண்ணுடைய மோகம் ஒரு ஆணை நிரந்தர நோயாளியாக ஆக்கி விடுகிறது. ஒருவனது உடம்பிலிருந்து சுக்கிலம் எந்த அளவு விரையமாகிறதோ அந்த அளவு அவனுக்கு நோய்தாக்குதல் அதிகமாக இருக்கும். இதை அறிந்து தான் நமது முன்னோர்கள் விந்து விட்டவன் நொந்து சாவன் என்று நமக்கு பழமொழி மூலம் எச்சரிக்கை செய்தார்கள். ஆனால் அந்த எச்சரிக்கையை பலரால் பொருட்படுத்த முடியவில்லை கடைபிடிக்க இயலவில்லை என்பது மறுக்க முடியாத எதார்த்தமாகும். 

இதுமட்டுமல்ல சக மனிதர்கள் மத்தியில் பகமை ஏற்படுவதற்கு மோகம் என்பதே மூல பொருளாக இருந்து வருகிறது. வரலாற்று காலத்தில் பல சாம்ராஜ்யங்கள் சீட்டு கட்டு மாளிகையை போல கலைந்து விழுந்ததற்கு மோகம் மட்டுமே காரணம் என்பதை நாம் நன்றாக அறிவோம். பாஞ்சாலி தனக்கு கிடைக்கவில்லையே என்ற கையாலாகாத மோகத்தாலேயே பாண்டவர்களை பகைத்து துரியோதனன் மடிந்தான். ராவணன் கதையும் இந்திரன் கதையும் எப்படி அழிந்தது என்று சொல்லாமலையே நமக்கு தெரியும். 

எனவே மோகம் காமம் வேகம் என்பவைகளே ஒரு மனிதனை கடன் சுமைக்கும் நோய் கொடுமைக்கும் பகைவர்களின் தொல்லைகளுக்கும் கொண்டுபோய் விடுகிறது. எனவே ஒருவன் கன்னித்தன்மையை கெடுப்பதற்கும் விடுவதற்கும் முனைய கூடாது. முறையானபடி இல்லறம் அமைந்தால் கூட மனையின் பாசத்திற்கு அடிமையாக இருக்கலாமே தவிர அவள் மீது கொள்கின்ற மோகத்திற்கு அடிமையாக இருக்க கூடாது என்பதை கன்னி ராசி சொல்லாமல் சொல்கிறது.



Contact Form

Name

Email *

Message *