Store
  Store
  Store
  Store
  Store
  Store

மஞ்சள் அரளி கடனை தீர்க்கும்


    சுவாமிஜி அவர்களுக்கு நமஸ்காரம் எனது பூர்விகம் தமிழ்நாடு தான் என்றாலும் நான் பிறந்தது வளர்ந்தது தற்போது வாழ்வது அனைத்துமே மும்பையில் எனது தகப்பனார் மிக தீவிரமான தமிழ் பக்தர் என்பதனால் அந்நிய மாநிலத்தில் படிக்க வேண்டிய நிலை இருந்தாலும் கூட வீட்டில் வைத்து எனக்கு தமிழ் சொல்லி கொடுத்து வளர்த்தார். விட்ட குறை தொட்ட குறை என்பதை போல் எனக்கு தமிழின் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டு விட்டதனால் பல தமிழ் நூல்களையும் தமிழ் இணையதளங்களையும் தொடர்ந்து வாசித்து வருகிறேன். அதன் வழியில் உங்களது உஜிலாதேவி இணையதளத்தை படிக்கு வாய்ப்பு கிடைத்தது. மிகபெரிய வரமாக கருதுகிறேன். 

காரணம் உங்களது வலைதளத்தை படிக்கும் எவனும் சோர்ந்து போகமாட்டான். துக்கத்தாலும் தோல்வியாலும் துவண்டு கிடப்பவன் கூட நம்மாலும் முடியும் நமக்குள்ளேயும் எதோ ஒரு சக்தி மறைந்து கிடக்கிறது அதை தட்டி எழுப்பி போராடுவோம் வெற்றி பெறும்வரை ஓயாமல் உழைப்போம் என்று நிச்சம் எழுந்து விடுவான். காரணம் உங்கள் எழுத்துக்கள் எதையும் முடியாது ஆகாது நடக்காது என்று எதிர்மறை சிந்தனையை தோற்றுவிப்பது இல்லை இன்று முடியாவிட்டால் என்ன நாளை கண்டிப்பாக முடியும் என்ற நம்பிக்கை ஊற்றை திறந்துவிடுகிறது. உண்மையாகவே உங்களை பாராட்டுவது சூரியனை பார்த்து நீ வெளிச்சமாக இருக்கிறாய் என்று சொல்வது போல ஆனாலும் நானும் சூரியனை பாராட்டி இருக்கிறேன் என்ற மனநிறைவு எனக்கு ஏற்படும் அல்லவா? அதற்காகவே உங்களை பாராட்டுகிறான்.

குருஜி எனக்கொரு சந்தேகம் எனது நண்பனும் நானும் சென்றவாரம் இங்கே உள்ள ஒரு ஜோதிடரை பார்க்க போனோம். அந்த ஜோதிடர் சீக்கிய மதத்தை சார்ந்தவர் அவர் எனது நண்பனுக்கு மஞ்சள் அரளி பூவை கொண்டு சுவாமியை வழிபடு உன் கடன் தொல்லைகள் நீங்கும் என்று சொன்னார். அவர் சொன்னது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. வீட்டிலுள்ள பெரியவர்கள் நோய் விலக நினைத்த காரியம் நடக்க சில சுலோகங்களை பாராயணம் செய் அவைகள் நல்லபடியாக நடக்கும் என்று சொல்வார்கள். எனது சிறிய அனுபவத்தில் அது சரியாக இருப்பதையும் உணர்திருக்கிறேன். ஆனால் இந்த மலரால் பூஜை செய் இது நடக்குமென்று சொல்வது எனக்கு புதிய விஷயம் உண்மையாகவே தனித்தனியான மலர்களால் பூஜை செய்தால் நல்லது நடக்குமா? எந்த காரியத்திற்கு எந்த மலரை பயன்படுத்த வேண்டுமென்று தெளிவாக சொன்னால் பாருக்கு பயனுள்ளதாக இருக்கும். மீண்டும் உங்களை அன்போடு வணங்கி விடை பெறுகிறேன். 


இப்படிக்கு 
சிவகோகுலராஜன் 
கார்கர்,மும்பை மது சாஸ்திரங்கள் தெய்வ வழிபாட்டிற்கு மலர்களை மிக முக்கியமான அம்சமாக கருதுகிறது. கண்டிப்பாக மலர்களை பூஜையில் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை மலர்களில் உள்ள மெல்லிய இதழ்கள் நமது பார்வைக்கு சாதாரணமாக தெரிந்தாலும் அதனுள் நுணுக்கமான பல சக்திகள் மறைந்து கிடக்கிறது. மிக குறிப்பாக சொல்வது என்றால் மனிதர்களின் எண்ண ஓட்டங்களை கிரகித்து பிரபஞ்ச வெளியில் பரப்பும் சக்தி அதற்கு உண்டு அதாவது நமது பிராத்தனைகளை இறைவனிடத்தில் நேரடியாக சேர்க்கும் ஆற்றல் அக்னிக்கு இடுப்பது போல மலர்களுக்கும் உண்டு.

அந்தவகையில் செவ்வந்தி பூவை கொண்டு பூஜை செய்தால் ஜாதகத்தில் கெட்டு போன குருபகவானின் அருள் பூரணமாக கிடைக்கும் சிவப்பு அரளி பூவை கொண்டு பூஜை செய்பவர்களின் குடும்பத்தில் உள்ள சண்டை சச்சரவுகள் விலகி அமைதியும் ஒற்றுமையும் ஏற்படும். நீலநிறத்தில் உள்ள சங்கு பூவை கொண்டு பூஜை செய்யும் போது சனி கிரகத்தால் ஏற்படும் தொல்லைகளும் பீடைகளும் விலகும்.

வெண்தாமரை மலர்கொண்டு பூஜிப்பதினால் மன நிம்மதி ஏற்படும், செந்தாமரை மலரை பூஜையில் பயன்படுத்தினால் செல்வம் பெருகும். பொன்னிறமாக உள்ள அரளி பூ திருமண தடையை விலக்கும், ரோஜா மலர் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆரோக்கியத்தை தரும். பாரிஜாதக மலர் மகாலக்ஷ்மியின் அருளை வாரி வழங்ககும் மல்லிகை மலர் கண் சம்மந்தமான நோய்களை விரைவில் தீர்க்கும் அதை போலவே மஞ்சள் அரளி கடன் சுமையை கண்டிப்பாக குறைக்கும் உங்கள் நண்பருக்கு அந்த ஜோதிடர் மிக சரியான அறிவுரையே சொல்லி உள்ளார் வாழ்த்துக்கள்.


என்பதாகும். இந்த தாரக மந்திரம் எங்கே ஒலிக்கிறதோ எவன் மனதில் இடையறாது ரீங்காரம் இடுகிறதோ அங்கே ஆசை இருக்காது. மோகம் இருக்காது. கோபம் இருக்காது. லோபம் இருக்காது. அமைதியும், சாந்தமும், சகோதரத்துவமும் எப்போதும் விலகாது நிலையாக இருக்கும். சாந்தம் தவழுகின்ற மனதே பேரானந்தம் நிலவுகின்ற இடமாகும். பேரானந்தம் எங்கு உள்ளதோ அங்கு முத்தி என்ற பரிநிர்வாணம் தானாக தேடி வரும்.


Contact Form

Name

Email *

Message *