Store
  Store
  Store
  Store
  Store
  Store

பிச்சை எடுத்தாலும் முக்தி அடைவான்


    யா அவர்களுக்கு வணக்கம் என் நண்பர் ஒருவருக்கு ஜாதகத்தில் லக்கினத்தில் எட்டு கிரகங்களும் ஏழாம் இடத்தில் ராகு மட்டும் அமைந்துள்ளது. எனக்கு ஓரளவு ஜோதிடம் தெரியும் இப்படி ஒரு ஜாதகத்தை முதல் முறையாக நான் பார்க்கிறேன். இந்த வகையில் கிரகங்கள் அமைந்தால் என்ன பலன் என்பது எனது சிற்றறிவிற்கு எட்டவில்லை தயவு செய்து தாங்கள் விளக்கம் தருமாறு பணிவோடு வேண்டுகிறேன்.

மாசிலாமணி,தேனீ     வ்வொரு மனிதனும் பூமியில் பிறக்கும் போது முற்பிறவி கர்மாவை சுமந்தவாறே ஜனனம் செய்கிறான். அந்த கர்மாவின் அடிப்படையில் தான் அவனவன் வாழ்வில் நல்லதும் கெட்டதும் சக்கரம் போல சுழன்று நடக்கிறது. ஒருவனுடைய கர்ம பலன் எப்படி அமையும் எப்படி பலன் தரும் என்று விளக்குவதே ஜோதிடத்தின் மிக முக்கிய பணியாகும். 


இன்று நமது கண்களுக்கு ஒருவன் பகட்டாக வாழ்வது தெரியும் ஆயிரம் அயோக்கியத்தனம் செய்தவனாக இருந்தாலும் கூட துயரம் என்பதே இல்லாத வாழ்வை வாழ்வான் வேறொருவன் நல்லவனாகவும் நற்செயல்களை மட்டுமே செய்பவனாகவும் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடப்பவனாகவும் இருப்பான். ஆனால் இவன் வாழ்வு முழுவதும் துயரங்களும் தோல்விகளும் மட்டுமே தொடர்ந்த வண்ணம் இருக்கும். உலக வாழ்வில் அன்றாடம் காணுகிற இத்தகைய காட்சிகளை பார்க்கும் போது நல்லவனுக்கு காலமில்லை என்று நமக்கு தோன்றும். இதனால் இறைவன் மீதும் இறைவன் சம்மந்தப்பட்ட விதியின் மீதும் சில சமயம் வெறுப்பும் அவநம்பிக்கையும் ஏற்படும். ஆனால் உண்மை அறிவு கொண்டு ஆராய்ந்து பார்த்தால் இதில் வருத்தபடுவதற்கு ஒன்றுமே இல்லை.கந்தசாமி என்ற மனிதன் வாழ்ந்ததாக எடுத்துகொள்வோம் இவர் வாழும் போது பலவித கஷ்டத்தோடும் துயரத்தோடும் வாழுகிறார். ஆனால் தனது துன்பத்தை விலக்கி கொள்ள குறுக்கு வழியை கடைபிடிக்காமல் நேர் வழியை மட்டுமே கடைப்பிடித்து கடேசி வரை துயரபட்டே மறித்து போகிறார். கந்தசாமிக்கு மறுபிறப்பு கிடைக்கிறது. அவர் தனது சென்ற பிறவியின் நற்கர்ம பலனாக வசதி மிகுந்த வாழ்வை பெறுகிறார். அப்போது அவர் முன்னால் இறைவன் நற்செயல் தீச்செயல் ஆகிய இரண்டையும் வைத்து இதில் எதையாவது ஒன்றை தேர்ந்தெடுத்து வாழும் சுதந்திரத்தை கந்தசாமிக்கு வழங்குகிறார். கந்தசாமி தனது வசதியை இன்னும் அதிகமாக ஆக்கி கொள்ள தீச்செயலை தனது பாதையாக தீர்மானித்து கொள்ளலாம். அல்லது நற்செயலை எடுத்து கொள்ளலாம். அதற்கு அவருக்கு பரிபூரண உரிமை உண்டு தனது தீர்மானத்தின் படி கெட்ட காரியத்தை தொடர்ந்து செய்வாரானால் அவருக்கு நிச்சயம் தண்டனை உண்டு அடுத்துவரும் பிறப்பு அவருக்கு இழி பிறப்பாகவே அமையும். நல்ல காரியத்தை எடுத்து கொண்டால் செளவுக்கியமாக அடுத்த பிறவியையும் தொடர்வார். இப்படி தனது சுதந்திரமான அறிவின் மூலம் நல்லதை மட்டுமே எடுத்து செயலாற்றி சுத்த ஞானத்தை பெறுகின்ற வரை கந்தசாமியின் பிறப்பு சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கும் அதாவது இறை ஞானத்தை பெறுகின்ற வரை ஒவ்வொரு மனிதனும் பிறந்தே ஆகவேண்டும். 


இதை தான் தனது பஜகோவிந்தம் பாடலில் ஜகத்குரு ஆதிசங்கர பகவத்பாதாள்

புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனீ ஜடரே சயனம்
இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே

 
என்று கவிதை அழகு சொட்ட சொட்ட பாடுகிறார். முராரே என்ற பகவானின் பாதார விந்தத்தை நினைக்காதவரை நினைத்து நினைத்து மனமும் உடலும் உருகி அதனோடு ஐக்கியமாகதவரை பிறவி பிணியை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது இந்த பாடலின் பொருளாகும். சுருக்கமாக சொல்வது என்றால் மனிதனாக பிறப்பெடுத்த ஒவ்வொருவனுமே இறுதி நிலையாகிய முக்தி என்ற பேரின்ப நிலையை எட்ட வேண்டும் இது தான் இறைவனின் படைப்பின் ரகசியம் இது தான் மனித பிறவியின் லட்சியம்.


ஒவ்வொரு மனிதனும் சுமந்து கொண்டு பிறக்கின்ற கர்மாவின் பலன்களை கிரகங்கள் மிக தெளிவாக காட்டுகிறது. அதன் அடிப்படையில் நீங்கள் குறிப்பிடும் உங்கள் நண்பரின் ஜாதகத்தை கோள்யோக ஜாதகம் என்று ஜாதக அலங்கார நூல் தெளிவாக சொல்கிறது. அதாவது இந்த மாதிரி கிரகங்கள் நிற்க பிறந்தவர்கள் நல்லவர்களாகவும் உத்தம வாழ்க்கையை வாழ்பவர்களாகவும் இருப்பார்கள் ஆனால் வறுமையும் பசி பட்டினியும் இவர்களை விட்டு விலகவே விலகாது. வறுமையின் காரணமாக உற்றார் உறவினர் அனைவரையும் இழப்பார்கள் ஏறக்குறைய பிச்சை எடுக்கும் நிலைக்கு நடுத்தெருவிற்கு வந்துவிடுவார்கள். இந்த நிலையிலும் இறைவனை மட்டுமே உறுதியாக பற்றி துறவு வாழ்க்கையை இவர்கள் மேற்கொண்டால் அற்புதமான முனிவராக வலம் வருவார்கள். இறைவனை பூத உடலோடு தரிசனம் பெறுகின்ற யோகத்தை அடைவார்கள். சம்சார சாகரம் என்ற பிறவி தழையிளிருந்து முற்றிலுமாக விடுபட்டு முக்தி நிலையை அடைவார்கள் இதுவே இப்படி பட்ட ஜாதகத்தின் பலனாகும்.


Contact Form

Name

Email *

Message *