Store
  Store
  Store
  Store
  Store
  Store

மறுமணம் வேண்டாம் !


   குருஜி ஐயா நான் மதுரையில் இருந்து எழுதுகிறேன். என் பெயர் பா.சரஸ்வதி எனக்கு ஒரே மகள் இருக்கிறாள் அவளுக்கு இப்போது வயது 30 ஐந்து வருடங்களுக்கு முன்பு அவளுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தேன். சந்தோசமாகவே வாழ்ந்தாள் கடவுளின் சோதனையோ அல்லது எங்களுடைய துரதிஷ்டமோ என் மகளின் கணவர் மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் அகால மரணம் அடைந்து விட்டார். அது முதல் எங்கள் குடும்பமே நிலை குலைந்து போய்விட்டது. 


என் மகளுக்கு குழந்தைகள் எதுவும் கிடையாது. பெரிய அளவில் அவள் படிக்கவும் இல்லை இப்போது எனது பராமரிப்பில் இருந்து வருகிறாள். எனக்கும் கணவர் கிடையாது. எனது காலம் வரை என் மகளை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்வேன். அதற்கு பிறகு அவள் வாழ்க்கையை நினைத்தால் மிகவும் பயமாக இருக்கிறது. இந்த காலத்தில் ஒரு பெண்ணால் தனியாக வாழ்வது என்பது பல கஷ்டம் என உங்களுக்கு தெரியும் அவளுக்கு மறுவிவாகம் செய்து வைக்க விரும்புகிறேன். ஆனால் என் மகள் மறுக்கிறாள். தனது வாழ்நாள் மீண்டும் இன்னொரு சோதனையை சந்திக்க இயலாது என்கிறாள். 


அவளை வலுக்கட்டாயம் செய்ய எனக்கு மனமில்லை அதே நேரம் அனாதையாக அவளை விடுவதற்கும் மனம் கேட்கவில்லை இன்னொரு கல்யாணம் செய்து கொள்ள என் மகள் சம்மதிப்பாளா? மறுவிவாகம் அவளுக்கு எந்த குறையும் இல்லாமல் நடக்குமா? என்று தெரியவில்லை ஐயா அவர்கள் தயவு செய்து என் மகளின் ஜாதகத்தை கணித்து பார்த்து இந்த அபலை பெண்ணுக்கு வழிகாட்டுமாறு தாழ்மையோடு வேண்டுகிறேன். 

இப்படிக்கு 

பா.சரஸ்வதி 
மதுரை 
   னக்கு தெரிந்த ஒரு பெரியவர் அவருக்கு மூன்று மகன் இரண்டு மகள் கடேசி மகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து விட்டார். கடந்த வருடம் அவர் மனைவி நோய்வாய் பட்டு இறைவனடி சேர்ந்து விட்டார். இந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு என்னை காணவந்த அவர் ஒரு அதிர்ச்சியான தகவலை சொன்னார். வேறு ஒன்றுமில்லை அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போகிறாராம். 

அவர் கூறியது எனக்கு அதிர்ச்சியாக மட்டுமல்ல அவமானமாகவும் இருந்தது. காரணம் அறுபது வயதை கடந்தவர் பேரன் பேத்திகளை கண்டவர் முப்பது வருட இல்லற வாழ்க்கை வாழ்ந்த பிறகே மனைவியை பறிகொடுத்திருக்கிறார் இந்த நிலையில் அவர் தனது மக்களோடு அமைதியான முறையில் வாழ்வதை விட்டு விட்டு வேறொரு திருமணம் செய்து கொள்கிறார் என்றால் அவர் குழந்தைகளின் மனநிலை தான் எப்படி இருக்கும் தாத்தாவுக்கு திருமணம் என்ற செய்தியை பேரக்குழந்தைகள் தான் எப்படி எடுத்து கொள்ளும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சாகபோற வயதில் கிழவனுக்கு சல்லாபம் கேட்கிறது பார். என்று பேச மாட்டார்களா? இவைகளை தவிர்த்து வயதானவரை கரம் பிடிக்கும் அந்த பெண்ணின் மனது என்ன பாடு படும் ஒருநிமிடம் யோசித்து பாருங்கள் நினைக்கவே சங்கடமாக இருக்கும். 

நமக்கு உள்ள இந்த யோசனை அந்த பெரியவருக்கு இருக்காதா என்ன? நிச்சயம் இல்லாமல் இருக்காது. ஆனால் தான் ஆண் என்ற ஆணவம் நான் ஒரு பெண்ணை விட்டு இன்னொரு பெண்ணோடு வாழ்ந்தால் ஒழுக்கம் கெட்டவன் என்று சமூகம் ஒதுக்காது என்ற மமதை இதை தவிர வேறு என்ன சொல்ல முடியும். ஆனால் ஒரு பெண்ணின் நிலைமை இப்படி அல்ல இளம் வயதில் கணவனை பறிகொடுத்து வேறொரு திருமணம் முறைப்படி செய்தாலும் அவளை இளக்காரத்தோடும் பரிகாசத்தோடும் மட்டுமே இந்த சமூகம் பார்க்கிறது. இந்த மனபாங்கு இந்தியாவில் மட்டும் இருப்பதாக சொல்லிவிட முடியாது. உலகம் எங்குமே பெண்களின் நிலை ஆண்களை விட பலமடங்கு குறைவாக இருக்கிறது. 

இதை மனதில் வைத்து உங்கள் மகள் மறுவிவாகத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் நிச்சயம் அதை ஏற்றுகொள்ள இயலாது. காரணம் தனிவொரு மனிதன் துன்பப்படும் போது அவனுக்கு ஆறுதல் சொல்ல இந்த சமூகம் வராத போது அவன் தனக்கென்று ஒரு வாழ்வை அமைத்து கொண்டால் அதை சமூகம் பரிகசிக்குமேயானால் அதை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை சூரியனை பார்த்து குறைக்கும் ஜீவன்களை போல் அவர்களையும் ஒதுக்க வேண்டும். மாறாக மனதிலே கணவனை பற்றிய நினைவுகள் பசுமையாக இருக்கிறது. அவன் இருந்த இடத்தில் வேறொருவனை வைத்து பார்க்க என்னால் இயலாது என்று ஒரு பெண் நினைத்தால் அதை மறுக்கும் தகுதி யாருக்கும் இல்லை. 

உங்கள் மகளின் ஜாதகம் களத்திர பாவம் மிகவும் பாதிப்படைந்து உள்ளது. அசுப கிரகங்களின் பார்வையும் சேர்க்கையும் இருப்பதனால் உங்கள் மகளுக்கு மாங்கல்ய தோஷம் வலுவாக ஏற்பட்டு விட்டது. அந்த தோஷம் இனி நீங்கி நல்லபடியாக இருக்குமா? அதற்கான பரிகாரங்கள் செய்யலாமா என்றால் என்னால் நல்ல பதிலை சொல்ல முடியவில்லை அதாவது உங்கள் மகள் ஜாதகப்படி இன்னொரு திருமணம் நடந்தாலும் அவள் கணவனோடு நிரந்தரமாக வாழ்வார் என்று உறுதியாக சொல்ல இயலாது. மீண்டும் சோதனையே ஏற்பட வாய்ப்புள்ளது. 


பொருள்களை சோதித்து பார்க்கலாம் ஆனால் வாழ்க்கையை பரிசோதனை செய்து பார்க்க முடியாது. காரணம் மறுமுறையும் தோல்வி அடைந்தால் அதை தாங்கும் சக்தி உங்கள் மகளுக்கு இல்லை எனவே நீங்கள் செய்ய வேண்டியது அவளுக்கு நல்ல தொழில் கல்வியை குறிப்பாக கணினி துறையில் கற்று கொள்ள வழி செய்யுங்கள் அது அவளின் எதிர்காலம் நல்லபடியாகவும் பாதுகாப்பாகவும் இருக்க உதவி செய்யும் தான் மட்டுமல்ல பிறரையும் வாழவைக்கும் தகுதி அவளுக்கு வரும். நீடித்த நல்ல உறவுகளும் உறவின் மூலமான பாதுகாப்பும் இல்லாத போது பொருளாதார பலம் மனித மனதிற்கு ஆறுதலையும் தெம்பையும் தரும்.


Contact Form

Name

Email *

Message *