Store
  Store
  Store
  Store
  Store
  Store

கருகலைப்பை ஏசு மன்னிப்பாரா...?


    யர்லாந்து நாட்டில் இந்திய பெண் ஒருவருக்கு பரிதாபகரமான மரணம் ஏற்பட்டிருப்பது அனைவர் மனதையும் பாதிப்படைய செய்துள்ளது. என்பது உண்மை இந்த மரணம் பயங்கரவாதம் தீவிரவாதம் இனவாதம் போன்றவைகளை பேசும் மனசாட்சி அற்ற தனிமனிதர்களால் நிகழவில்லை சட்டத்தாலும் தர்மத்தாலும் நாட்டுமக்களை காப்பாற்ற வேண்டிய அரசாங்கத்தின் முன் யோசனை அற்ற ஒரு சட்டடத்தால் நடந்திருக்கிறது. 

கத்தோலிக்க மதத்தின் தர்மத்தின் படி கருசிதைவு செய்ய கூடாது என்பதை மனதில் வைத்து அயர்லாந்து அரசாங்கம் கருகலைப்பை சட்ட விரோதமாக பார்த்து அதை தனது நாட்டில் தடை செய்துள்ளது. ஒரு நாடு தன்னுடைய பாதுகாப்பிற்காகவும் மக்களின் நம்பிக்கைக்காகவும் பல்வேறு காரணங்களை மனதில் வைத்து சட்டங்கள் ஏற்றுவது தவிர்க்க முடியாது. அது அந்த நாட்டின் தனிப்பட்ட இறையாண்மை உன் நாட்டிலுள்ள இந்த சட்டம் எனக்கு பிடிக்கவில்லை அதை நீ மாற்று என்று வேறொரு நாடு அந்த நாட்டை பார்த்து கேட்க உரிமை இல்லை அப்படி உரிமை இருப்பதாக கூறுவது வடிகட்டிய சர்வாதிகாரத்தனம்.

அயர்லாந்து மக்களின் சமூக பழக்க வழக்கங்கள் ஒழுக்கத்தை மீறி போய்விட கூடாது அதனால் நாட்டின் பண்பாடு கெட்டுவிட கூடாது சமூகத்தின் இதய பகுதியான குடும்பங்கள் சீரழிந்து விட கூடாது. என்பதற்காக அந்நாடு கருகலைப்பு தடை சட்டத்தை நடைமுறையில் வைத்திருப்பதை தவறு என்று கூறுவதற்கு இல்லை ஆனால் அந்த சட்டத்தை நடைமுறை படுத்தும் போது ஏற்படும் சிக்கல்களை மனதில் வைத்து சில உட்பிரிவுகளை அவர்கள் ஏற்படுத்தி இருந்தால் இத்தகைய உயிர் சேதம் ஏற்பட்டு இருக்காது. 

ஒரு உயிரின் உருவாக்கம் என்பது மனிதனால் ஆனது அல்ல அது இறைவனால் ஆனது நம்மால் ஒரு உயிரை புதியதாக படைத்து விட முடியாது. அப்படி பட்ட உயிரை கருவிலேயே அழிப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. குழந்தையாக பிறந்த போது அதை சாகடிப்பது பெரிய பாவமாக கருதும் மனித சமூகம் அதே குழந்தை கருவறையில் கரு என்ற பெயரில் உயிரோடு இருக்கும் போதே சாகடிப்பதை பாவமாக கருதுவது இல்லை காரணம் குழந்தையை போல் கரு கண்ணுக்கு தெரிவதில்லையாம் இது என்ன விந்தை கருவை கண்ணால் பார்க்காமலா மருத்துவர்கள் கருகலைப்பு நடத்துகிறார்கள்? உண்மையில் கருகலைப்பு என்பது சட்டபூர்வமான கொலை என்றே சொல்லலாம். 

அதே நேரம் ஒரு கரு வயிற்றில் தங்கினால் அது தாயினுடைய உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனும் நிலை வரும் போது அதை கலைப்பது தவறு அல்ல இங்கே இறந்து போன பெண்ணின் வயிற்றில் உள்ள கரு மறித்து போன கரு அதை வெளியே எடுப்பது எந்தவகையிலும் கருகலைப்பு என்ற வரையறைக்குள் வராது. ஒரு சரியான மருத்துவ சிகிச்சை என்றே பார்க்க வேண்டும். எதற்கெடுத்தாலும் மனிதாபிமானம் மனித உரிமைகள் என்று பேசுகின்ற வெள்ளைக்கார மனிதர்கள் இப்படி பட்ட விஷயங்களை கவனத்தில் கொள்ளாதது அலட்சியமா? அல்லது உயிருக்கு போராடுவது வேற்று நாட்டு பெண்தானே என்ற பாகுபாட்டின் உணர்வின் உச்சமா என்பது நமக்கு தெரியவில்லை 

இன்று இந்திய பெண்ணுக்கு ஏற்பட்ட கோளாறு வேறு எந்த அயர்லாந்து பெண்ணுக்கும் ஏற்பட்டிருக்காது என்று கருத இயலாது. காரணம் கர்ப்பமான பெண்களின் நூற்றுக்கு பத்து பேருக்காவது இந்த மாதிரியான துர்பாக்கிய நிலை ஏற்படுகிறது. அது அயர்லாந்து பெண்ணாக இருந்தாலும் இந்திய பெண்ணாக இருந்தாலும் விலக்கல்ல இந்த பெண்ணிருக்கு ஏற்பட்டதை போலவே இதற்கு முன் பாதிப்படைந்த பெண்களுக்கு மரணம் மட்டும் தான் பரிசாக கொடுக்க பட்டதா அல்லது வேறு மாதிரியான சிகிச்சை முறைகளால் நிவாரணம் வழங்க பட்டதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு அயர்லாந்து அரசாங்கத்திற்கு இருக்கிறது. அந்த அரசாங்கமே முன்வந்து இதற்கான விளக்கத்தை தருமென்றால் உலக சமூகம் அதை மன்னிக்கலாம். இல்லை என்றால் தக்க பதிலை அயர்லாந்து சொல்லும் வரை அதை விட்டு விட முடியாது.

கத்தோலிக்க மத கருத்துப்படி கருகலைப்பை அவர்கள் அங்கிகரிக்காமல் இருக்கட்டும் அதை பற்றி நமக்கு கவலை இல்லை ஆனால் கருகலைக்க பட்டே ஆகவேண்டும் என்ற நிலையில் உள்ள தாய்மார்களை காப்பாற்றுவதற்காக அந்த சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும். கத்தோலிக்க மத சட்டம் என்பது ஏசு நாதரோ கன்னிமரியாளோ போட்டது அல்ல வாடிக்கன் நகரத்து அரண்மனையில் இருக்கும் போப்கள் உருவாக்கியதே ஆகும். அதை மாற்றுவதில் தவறும் அல்ல மாற்றினால் மட்டுமே ஏசு மன்னிப்பார்.


Contact Form

Name

Email *

Message *