( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

படிப்பை தரும் காயத்ரி மந்திரம்
    குருஜி அவர்களுக்கு வணக்கம் எனது ஜாதகத்தில் புதன் கிரகம் நீசம் அடைந்து பலம் குன்றி இருப்பதாகும் அதனால் தான் எனது படிப்பில் தடைகள் ஏற்படுகிறது என்றும் அதை நிவர்த்தி செய்ய புதன் கிரக காயத்ரி மந்திரத்தை தினசரி நூற்றி எட்டு முறை ஜெபித்து வருமாறு ஒரு ஜோதிடர் சொன்னார். எனக்கு மிக சரியான புதன் கிரக காயத்ரி மந்திரம் எது என்று தெரியவில்லை எனவே குருஜி அவர்கள் சரியான மந்திரம் எதுவென சொல்லிதருமாறு பணிவோடு வேண்டுகிறேன். இப்படிக்கு 
மூ.நாகராஜன் 
ஈரோடு 


    ந்திரங்களில் மிகவும் உயர்ந்தது காயத்ரி மந்திரம் தவத்தில் மிகச்சிறந்த விஸ்வமித்ர மகரிஷி தனது உடலையே திரியாக்கி பெற்ற மந்திரம் அது. ஒளிக்கடவுளை பிரார்த்தனை செய்யும் அம் மந்திரத்தை மன ஒருநிலைப்பாட்டோடு ஜெபித்து வருவோமானால் பெறமுடியாத பல பேறுகளை நாம் நிச்சயமாக பெறலாம். 

இத்தகைய பிரம்ம காயத்ரியை பின்பற்றி பிற்காலத்தில் பல நவக்கிரக காயத்ரிகளும் சகல தேவதைகளுக்கான காயத்ரிகளும் உருவாக்கப்பட்டன. ஆனாலும் அவற்றில் அடிப்படையான பீஜம் யாராலும் மாற்றப்படவில்லை எனவே பிரம்ம காயத்ரியை முறைப்படி ஜெபித்தாலே நாம் நினைக்கும் பலனை அடையலாம். இருந்தாலும் நீங்கள் குறிப்பிட்ட ஒரு காயத்ரியை விரும்பி கேட்பதனால் அதை சொல்ல வேண்டிய கடமை எனக்குள்ளது. 

ஓம் கஜ த்வஜாய வித்மஹே 
சுக ஹஸ்தாய தீமஹி 
தன்னோ புத ப்ரசோதயாத்

இம் மந்திரத்தை குறைந்தது தினசரி 108 முறையாவது ஜபம் செய்யுங்கள் நீங்கள் விரும்பியது நிச்சயம் நடக்கும் .


+ comments + 1 comments

ஓம் மஹாதேவ்யைச வித்மஹே
சுகீர்த்தனாயை தீமஹி
தந்நோ வித்யாலக்ஷ்மீ ப்ரசோதயாத்


Next Post Next Post Home
 
Back to Top