Store
  Store
  Store
  Store
  Store
  Store

எனது எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்?  • னது எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்?

மனோகரன், துபாய்    யா மனோகரன் அவர்களே ஒரு விஷயத்தை நன்றாக யோசனை செய்யுங்கள் நீங்கள் என்னை நேரில் பார்க்கவும் இல்லை உங்களது ஜாதகத்தை எனக்கு அனுப்பி வைக்கவும் இல்லை இவை எல்லாம் செய்யாமல் மளிகை கடைக்கு சென்று நாட்டு சக்கரை இருக்கிறதா என்று கேட்பது போல் எனது எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கேட்கிறீர்கள் பொதுவாக இப்படி கேட்கும் யார்க்குமே நான் பதில் சொல்லுவதும் இல்லை அவர்கள் தொலை பேசியில் பேசினால் கூட அதை நான் பொருட்படுத்துவதும் இல்லை ஆனாலும் உங்களுக்கு பதில் சொல்கிறேன் என்றால் அது உங்களுக்கு மட்டுமான பதில் அல்ல உங்களை போல் இப்படி கேட்கும் ஒரு சிலருக்கான பதிலும் ஆகும் 

காரணம் உங்களை போலவே பலர் என்னிடம் இப்படி பொத்தாம் பொதுவான கேள்வியை கேட்டு என் நேரங்காலத்தை வீணடிக்கிறார்கள் இவர்களுக்கு வாழ்க்கையை பற்றிய அக்கறையோ அல்லது உண்மையான ஈடுபாடோ இருக்கும் என்று நான் நம்பவில்லை நாம் தான் பெரியாள் நம்மை விட எவனுக்கு அதிகமாக மூளை இருக்க போகிறது என்ற மமதையில் ஒரு கேள்விதான் கேட்டு பார்ப்போமே என்ற தோரணையில் கேட்பதாகவே நான் நினைக்கிறேன் காரணம் இப்படி பட்டவர்களின் கேள்விக்கு பொறுப்போடு நாம் பதில் சொன்னால் கூட ஓகோ அப்படியா சரி பார்க்கலாம் என்று தான் அவர்களிடம் இருந்து பதில் வரும் 

உண்மையாகவே நீங்கள் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள ஆசை பட்டால் உங்களை பற்றிய விவரங்களை கொடுங்கள் அப்படி கொடுத்துவிட்டு கூட வருங்காலம் எப்படி இருக்கும் என்று பொதுவாக கேட்டால் நன்றாக இருக்கும் என்றோ இருக்காது என்றோ பொதுப்படையான பதிலை தான் சொல்ல முடியும் ஆகவே நான் இன்னது செய்ய விரும்புகிறேன் இன்னதுவாக முயற்சிக்கிறேன் அது நடக்குமா என்று குறிப்பிட்டு கேள்வி கேட்பது தான் முறையாகும் அதை விட்டு விட்டு இப்படி கேட்டால் என்னிடம் இருந்து பதில் வராது 

இன்னும் சிலர் இருக்கிறார்கள் ஜோதிடம் பார்க்க நேரடியாக வந்து உட்காருவார்கள் ஜாதக நோட்டை கையில் தந்துவிட்டு கல்லுபில்லையார் மாதிரி அமர்ந்திருப்பார்கள் நாம் எதுவுமே கேட்காமல் ஜோதிடர் பதில் சொல்லட்டுமே என்பது தான் அவர்களின் எதிர்பார்ப்பு அதில் என்ன தவறு இருக்கிறது மனிதன் வாய்விட்டு சொன்னால் தான் ஜோதிடருக்கு புரியுமா கிரகங்களை கணித்து பார்த்து அவைகள் சொல்லுகின்ற விஷயத்தை கேட்காமலே ஜோதிடர்கள் சொல்லலாம் தானே என்று சிலர் நினைக்கிறார்கள் அப்படியும் கேள்வி கேட்காமலே பதில் சொல்லக்கூடிய ஜோதிடர்களும் இருக்கிறார்கள் நான் இல்லை என்று சொல்லவில்லை 

ஆனால் அப்படி சொல்லும் ஜோதிடர்கள் கடந்த காலத்தை பற்றி துல்லியமாக கணித்து சொல்லும் திறமை பெற்றவர்களாக இருப்பார்களே தவிர வருங்காலத்தை பற்றிய அவர்களது கணக்குகள் பெருவாரியும் தவறாகவே இருக்கும் மேலும் ஜோதிடருக்கு இவர் அதை கேட்பாரோ இதை கேட்பாரோ என்ற தயக்கம் வந்து உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பலன் கிடைக்காமல் போய்விடும் நான் திருமணதிற்காக பார்க்க வந்திருக்கிறேன் அது முடியுமா முடியாத என்று வாய்விட்டு கேட்பதினால் ஜோதிடனும் கிரகநிலையை இலக்கை நோக்கி கணிக்கும் வாய்ப்பு உண்டு இல்லை என்றால் திசையை நோக்கி தேங்காய் உடைத்த கதையாகத்தான் இருக்கும் 

அதுவும் அல்லாமல் இப்படி கேட்பவர்களுக்கு துல்லியமான பதிலை கொடுக்கவேண்டும் என்ற ஆசையில் கணக்குகளை போட்டு பார்த்தால் ஒரு விசயத்திற்கான் பதிலை பெறுவதற்கே இரண்டு மணி நேரத்திற்கு மேல் செலவாகும் அப்படி செலவு செய்யும் அளவிற்கு நான் ஓய்வாக இல்லை எனவே எனக்கு கடிதங்கள் அனுப்பும் அன்பர்களும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் அன்பர்களும் தெளிவான கேள்வியை தயங்காமல் கேட்பது நல்லது என்று நினைக்கிறேன் அதை விட்டு விட்டு நீங்களும் குழம்பி என்னையும் குழப்பும் கேள்விகளை கேட்காதீர்கள் அதற்கு என்னிடம் பதில் இல்லை.

Contact Form

Name

Email *

Message *