Store
  Store
  Store
  Store
  Store
  Store

கேஜ்ரிவால் என்ற கோமாளி !     ரசியல் வாதிகளின் மீது ஊழல் புகார்களை சொல்வதும் அவர்கள் குற்றவாளிகள் தேச நலனுக்கு குந்தகம் விளைவித்தவர்கள் என்று பேசுவதும் நமது நாட்டில் விடுதலைக்கு பிறகு சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. ஒரு கட்சி ஆட்சியில் ஊழல் நடந்தால் மறு கட்சி ஆட்சிக்கு வந்து அந்த ஊழலை விசாரிக்க கமிஷன் அமைப்பார்கள் செய்தி தாள்களும் வெகுஜன ஊடகங்களும் அதை பற்றி பக்கம் பக்கமாக எழுதுவார்கள் பேசுவார்கள் கடேசியில் எதுவுமே நடக்காது எழுதியவர்களும் மறந்து போவார்கள் அதை படித்து காரசாரமாக விவாதம் செய்தவர்களும் மறந்து விட்டு அடுத்த வேலையை பார்ப்பார்கள். சில நேரங்களில் யாராவது பழைய குப்பையை கிளறி எழுதினால் ஒ! இப்படி ஒரு ஊழல் நடந்ததல்லவா மறந்தே போய்விட்டோம் என்று ஆச்சரிய படுவதோடு எல்லாம் முடிந்து விடும். 

மிக அதிகமான காலத்திற்கு பின்னோக்கி செல்ல வேண்டாம் சமீபத்தில் நடந்த அலைகற்றை உழலை எடுத்து கொள்வோம் ராஜா கைதானார் கனிமொழியும் சிறைபட்டார் அடுத்த குறி பிரதமரும் நிதி அமைச்சரும் தான் என்று நாடெங்கும் கோடைகாலத்து மழையில் இடி இடிப்பதை போல பேச பட்டது. பாராளுமன்றம் தொடங்கி பட்டிகாட்டு தேனீர் கடை பெஞ்சு வரையிலும் அலைக்கற்ற ஊழல் அனலை கிளப்பியது. அப்படி அனலாக வீசிய சூறை காற்றில் தமிழகத்தை ஆண்ட கருணாநிதி அவர்களும் துடிக்க துடிக்க தூக்கி எறியபட்டார் அத்தோடு போனது அந்த விவகாரம். இன்று அப்படி ஒரு ஊழலை பற்றி பேசினால் சொன்னேதையே சொல்லி போரடிக்காதே வேறு எதையாவது புதுக்கதை சொல்லு என்று மக்கள் ஒதுங்க ஆரம்பித்து விட்டார்கள்.


 அலைகற்றை முடிந்த கையேடு அடுத்த பூதமாக நிலகரி சுரங்க ஊழல் வந்து குதித்தது. அவ்வளவு தான் இதில் பிரதமரே நேரடியான தொடர்பில் உள்ளார் இந்திய அரசியலின் சக்கரமே மாற்றி சுழல போகிறது வாட்டர் கேட் ஊழலில் அமெரிக்க அதிபர் பதவி இழந்து வீட்டுக்கு போனது போல பஞ்சாப் சிங்கம் மன்மோகன் சிங்கும் பெட்டியை கட்டி கொள்ள போகிறார் என்று எல்லோரும் பேச ஆரம்பித்தார்கள். இப்போதாவது உருப்படியாக எதவாது நடக்குமா? ஊழல் செய்தவர்கள் மக்கள் அரங்கத்திற்கு கொண்டு வரப்படுவார்களா? என்று அப்பாவி தனமாக சில இந்தியர்கள் எதிர்பார்த்தார்கள் ஆனால் வழக்கம் போலவே எதுவும் நடக்கவில்லை ஆனை தோலில் எறும்பு கடித்தது போல சம்மந்தப்பட்ட அரசியல் தலைவர்கள் துடைத்து விட்டு விட்டு அடுத்த கட்ட வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். 


இதற்கிடையில் வங்காளத்து சிங்கம் மம்தா பானர்ஜி அரசாங்கத்து குடுமியை பிடித்து ஆட்டுவது போல ஆர்பரித்தார்கள். சரிதான் அடுத்த கட்டமாக தேர்தல் வரபோகிறது இனியாவது இப்படி பட்ட எதற்கும் உதவாத அரசாங்கம் வராமல் சுறுசுறுப்பான ஓரளவாவது மக்களுக்கு தொண்டு செய்யும் புதிய அரசாங்கம் வரும் என்று சிலர் எதிர்பார்த்தார்கள் ஒன்றும் ஆகவில்லை எல்லாமே பழையபடி சகஜமாக நடக்க துவங்கி விட்டது. இந்த கூத்துகளுக்கு மத்தியில் கேஜரிவால் என்ற ஒரு ரச்சகன் தோன்றினார் அரசியலில் நேர்மை தூய்மை ஒழுக்கம் இவைகளை பற்றி பேசிய அவர் ஆளும் வர்க்கத்தின் மீது அடுக்கடுக்கான குற்ற சாட்டுகளை சுமத்தினார். சோனியா கும்பல் கதிகலங்கி போய்விட்டது இந்த கேஜரிவால் பாரதிய ஜனதா கொம்பு சீவிவிட்ட காளையாக இருக்குமோ? நம் குடலை முட்டி கீழே சரித்து விடுமோ என்று அஞ்சி நடுங்கியது கேஜரிவால் பாஜகவின் ஊதுகுழல் என்று புழுதி வாரி தூற்றியது 


உண்மையில் கேஜரிவாலுக்கு உற்சாகம் பற்றி கொண்டது என்று தான் சொல்ல வேண்டும். அடடே நாம் விளையாட்டு தனமாக பேசுவது கூட காங்கிரஸ் கட்சியை கதிகலங்க வைத்திருக்கிறதே நாம் அடித்தல் கூட அவர்களுக்கு வலிக்கிறதே எதிர்த்த பெஞ்சு மாலினியை மட்டும் தான் கிள்ள வேண்டுமா? பக்கத்து பெஞ்சு சாலினியையும் கிள்ளி பார்த்தால் இருவரும் சேர்ந்து போடும் சத்தம் ஜாலியாக இருக்குமே என்று பாஜகவின் தலையிலும் குட்ட துவங்கி விட்டார். காங்கிரஸ் அண்ணாச்சிகளுக்கு ஆனந்தத்தை அடக்க முடியவில்லை நாம் செய்ய வேண்டிய வேலையை தம்பி செய்கிறாரே என்று பூரித்து போகிறார்கள். நாங்கள் மட்டும் தான் சேற்றில் கிடக்கிறோமா? நீங்கள் என்ன உத்தம ஜாதியா? என்று பதிலுக்கு பதில் ஆர்பரிக்க ஆரம்பித்து விட்டார்கள். 


போகிற போக்கை பார்த்தால் கேஜரிவால் தன்னை நடுநிலையாளர் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவர் என்று காட்டி கொள்ள தன்மீது தானே கூட ஊழல் புகாரை சொல்ல ஆரம்பிப்பார். அதையும் நம்பி அவரே தனக்கு எதிரான போராட்டத்தை தானே தலைமையேற்று நடத்துவார் என்று தோன்றுகிறது. அந்த அளவு அவர் இப்போது என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? சமூதாய பாதிப்புகள் என்ன? என்பதை பற்றி கிஞ்சித்தும் அக்கறை இல்லாத அரசியல் கோமாளி போல தென்படுகிறார். அன்று ஆங்கில அரசை எதிர்த்து நின்றது பணபலம் படைத்தவர்கள் மட்டுமல்ல அடுத்த வேளை சோற்றுக்கே வழியில்லாத அன்றாடம் காச்சிகள் கூட எதிர்த்து நின்றார்கள் அவர்களாலும் வெல்ல முடிந்தது. காரணம் அவர்கள் போராட்டத்தில் தெளிவு இருந்தது உறுதி இருந்தது எதற்கும் அஞ்சாத மனோதிடம் இருந்தது. ஆனால் இன்று அரசாங்கத்தை விமர்சனம் செய்வது போல் செய்து நல்ல பெயர் சம்பாதித்து கொள்ள விரும்புகின்ற கேஜரிவாலிடம் தெளிவு இல்லை உறுதி இல்லை தானும் பெரிய மனுஷன் ஆக வேண்டும் என்ற விளம்பர மோகம் மட்டுமே இருக்கிறது. 


பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே போன்றோர்களின் உறுதியற்ற போராட்டம் கடேசியில் எந்த நிலையில் அடைந்ததோ அதே நிலையை அதைவிட சீக்கிரமாக கேஜரிவாலும் அடைவார் என்பதில் சந்தேகமில்லை காரணம் போராட்டத்தையே வாழ்வாக எடுத்து கொள்ளும் பொதுநல தொண்டர்களுக்கு கொள்கை பிடிப்பும் உறுதியும் இல்லாவிட்டால் அவர்களால் நிலைத்து நிற்க முடியாது. இவர் கதையும் அப்படிதான் முடியும். அந்த அளவு அரசாங்கமும் அதை எதிர்பவர்களும் எதிர்க்க காரணமாக இருப்பவர்களும் உறுதியற்ற நிலையில் இந்த காலகட்டத்தில் இருக்கிறார்கள். 

ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் இந்த நிலையில் இருக்க ஊழல் செய்து செய்தே பழக்கப்பட்டு இனியும் அதிலிருந்து மீளமுடியாது என்ற உறுதிக்கு வந்துவிட்ட காங்கிரஸ் கட்சியோ எரிவாயு சிலிண்டரின் எண்ணிக்கையை குறைத்தும் விலையை ஏற்றியும் சிறு வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கியும் மக்களின் அதிருப்தியையும் வளர்த்து வருகிறது. போதுமானவரை ஊழல் பெரிச்சாளிகளை வளர்த்தாகி விட்டது. சலிக்கும் வரை கொள்ளையும் அடித்தாகி விட்டது. கஜானாவும் விரைவில் காலியாக போகிறது. இனியும் ஆட்சி செய்து எந்த பிரயோஜனமும் இல்லை தயவுசெய்து எங்களை வீட்டுக்கு அனுப்புங்க என்று கெஞ்சி கூத்தாடி பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க வர சொல்லி பட்டுக்கம்பளம் விரித்து வைக்கிறது. 


ஆனால் பாஜக நீ என்ன வாழை பழத்தை உரித்து என் வாயில் வைப்பது நான் விழுங்க மாட்டேன் போ என்று அடம்பிடிக்கும் குழந்தையை போல முரண்டு பிடிக்கிறது. எடியூரப்பா ஒருபக்கம் மத்தளம் தட்டுகிறார். சுஸ்மா வேறோருபக்கம் வீணை மீட்டுகிறார் நரேந்திரமோடியோ எந்த ராகத்திற்கும் பொருந்தி வராத தனிப்பாட்டு பாடுகிறார் எக்கேடாவது கெட்டு போங்கள் என்று அத்வானி பாராமுகம் காட்டுகிறார். சுருக்கமாக சொல்வது என்றால் பாஜக கூடாரமே ஒரு சந்தை கடை போல இருக்கிறதே தவிர ஆட்சி அமைத்து அரசாங்கம் நடத்துகிற லட்சணம் அதனிடம் ஒரு துளி கூட இருப்பதாக சொல்ல முடியாது. ஆக மொத்தத்தில் ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் குழப்பத்தில் கிடக்கிறது. சாதாரண ஜனங்களோ என்ன நடந்தாலும் நமக்கென்ன ஒட்டு போட காசும் போட்ட பிறகு இலவசமும் கிடைக்கிறதா அது வரையிலும் போதும் என்று சுயநலத்தில் கிடக்கிறார்கள். இவைகளை எல்லாம் பார்க்கும் போது நமக்கு இந்த நாட்டை ஆண்டவன் வந்தால் கூட காப்பாற்ற முடியுமா? என்ற சந்தேகம் வலுவாகவே வருகிறது. யாரவது அதை தீர்பார்களா?


Contact Form

Name

Email *

Message *