Store
  Store
  Store
  Store
  Store
  Store

வைகுண்டநாதன் அழைக்கிறான் !

 


மாதவன் கேசவன் கோவிந்தன் 
மாதவ முடிவில் வந்தவன் 
ஆதவன் யாதவன் கோபாலன் 
ஆத்ம தெளிவில் தெரிந்தவன் 
காதலன் கள்வன் ஸ்ரீனிவாசன் 
கருமை நெஞ்சை மடித்தவன் 
ஓத அரியவன் ஒமென்ற 
ஒலியில் நிற்பவன் அன்பன் 

விண்ணின் நாயகன் மனிதநெஞ்சில் 
வினையை அறுத்து முடிப்பவன் 
மண்ணில் நீராய் பெருகியோடி 
வளங்களை நலன்களை தந்தவன் 
கண்ணில் தைத்த மாயமுள்ளை 
கீதை பாடலால் எடுத்தவன் 
எண்ணில் எழுத்தில் அடங்காத 
இதய சுமையை தீர்ப்பவன் 

காய்ந்த பயிர்கள் செழித்தோங்க 
கருமுகில் மழையாய் வருபவன் 
சாய்ந்த வாழ்வு நிமிர்ந்தெழவே 
சத்திய அமுதை பொழிபவன் 
ஓய்ந்த கரங்கள் உழைத்தெழவே 
உதயக் கதிராய் பிறந்தவன் 
மாய்ந்த எங்கள் மனம்சிலிர்க்க 
வைகுண்ட பதியில் சிரிக்கிறான் 

தர்மம் என்ற முரசெடுத்து 
தரணி எங்கும் ஒலிப்பான் 
கர்ம தொழில்கள் நிறைந்திடவே 
கனிவளம் நிறைய தருவான் 
மர்ம மான வஞ்சகரை 
மயக்கம் கொள்ள செய்வான் 
கர்வம் கொள்ளும் பாதகரை 
கலங்க வைத்தே மீட்பான் 

இல்லை என்று சொல்பவர்க்கும் 
இன்ப காற்றை தருவான் 
கல்லா கடவுள் என்பவர்க்கும் 
கல்லும் கடவுள் என்பான் 
புல்லை தின்னும் உயிரினமும் 
புலாலை ஏற்கும் மனிதனும் 
முல்லை பூவும் நானென்பான் 
முடிவே இல்லாத முகுந்தன் 

கங்கை சூடிய பெருமானும் 
கணபதி முருக வடிவமும் 
மங்கை திருமகள் திருவடியும் 
வளரும் கலையின் தேவியும் 
சங்க நாத ஒலியாக 
சதூர்மறை பிரம்ம தேவனும் 
வங்கம் தந்த காளியென 
வைகுண்ட வாசனே அழைக்கிறான்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCAwzxeRuGcMhVu5ZS5871oEWWb56mzihiKmW0q9kzYye_GRgiKYx-KXOBIXGb2N1A3VSUnJ3-_LElDG1n_-sG8w3cCR4s_zT60ZuvEZSZ6aQZac-LgAT-lBuGTaD0dE-K1HjfeeKSBXQ/s1600/sri+ramananda+guruj+3.JPG

Contact Form

Name

Email *

Message *