Store
  Store
  Store
  Store
  Store
  Store

வாழ்க வையகம்! வாழ்க மனித குலம்!!


     லைகற்றை ஊழல் செய்தவர்களின் கதை என்னவென்று தெரியவில்லை. 

ஆசிய விளையாட்டு போட்டியில் நடைபெற்ற நிதி முறைகேட்டுக்கு நிவாரணம் இதுவரை இல்லை. 

லோக்பால் மசோதாவும் மகளிருக்கான இட ஒதுக்கிடு மசோதாவும் என்ன ஆனது என்று தெரியவில்லை. 

பெரியார் அணை விவகாரம் எப்படி முடியுமென்ற அறிகுறியே தென்படவில்லை. 

காவேரியில் சொட்டு தண்ணீர் கூட கர்நாடகம் முறைப்படி தரவில்லை. 

தமிழ்நாட்டில் மின்சார பற்றாகுறை எப்போது தீருமென்று புரியவில்லை. 

இலங்கையில் முள்வேலிக்குள் கிடக்கும் தமிழன் இன்னும் வீடுவந்து சேரவில்லை. 

சிறு வணிகத்தில் அந்நிய முதலீட்டால் யார் யாரெல்லாம் வயிற்று பிழைப்புக்கு வழியில்லாமல் அலைவார்கள் என்று சொல்ல முடியவில்லை. 

அப்பாவி பெண்களை பாலியல் வன்கொடுமைகளிருந்து. இன்னும் காப்பாற்ற முடியவில்லை.

ஊருக்கே சோறுபோடும் உழவனின் தற்கொலையை நிறுத்த முடியவில்லை. 

மண்மாதாவின் மடி முழுவதும் ரசாயன உரங்களால் விஷமாகி போனதற்கு இன்னும் விடியல் ஏற்படவில்லை. 

இத்தனை கொடுமைகளும் தொடர்ந்து கொண்டே இருக்க ஆங்கில வருடம் பிறந்து விட்டதாம். 

ஊர் உலகமெல்லாம் கொண்டாட்டமும் குதூகலமும் கொடிகட்டி பறக்கிறது. 

தனக்கு நிகழ போவது என்னவென்று அறியாத இந்த அப்பாவி ஜீவன்கள் இன்று ஒருநாள் மட்டுமாவது சந்தோஷமாக இருக்கட்டும். 

அதற்காகவே தமிழ் புத்தாண்டை கொண்டாடுவது நமது மரபு என்றாலும் ஆங்கில புத்தாண்டுக்கும் ஒரு வாழ்த்து சொல்லலாம். 

வாழ்க வையகம்! வாழ்க மனித குலம்!!Contact Form

Name

Email *

Message *