Store
  Store
  Store
  Store
  Store
  Store

செத்தவன் பிறப்பான் !
    ன்னுடைய பெரிய அண்ணன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நல குறைவின் காரணமாக இறந்துவிட்டார் , இப்பொழுது என்னுடைய சின்ன அண்ணனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து உள்ளது .எங்கள் கிராமத்தில் உள்ள நிறைய பேர் பெரிய அண்ணன் சிறு குழந்தையாக இருந்தபோது, இப்பொழுது பிறந்த குழந்தை மாதிரியே இருந்தார் என்கிறார்கள், குழந்தையும் பெரிய அண்ணன் போட்டோவை எப்பொழுதும் பார்த்தவண்ணம் இருக்கிறான். அண்ணனும் இறக்கும் தருவாயில் இந்த வீட்டில் தான் மீண்டும் பிறந்து கடமையை களிப்பேன் என்று கூறினார் .வீட்டில் நடந்த பல சம்பவங்கள் அதை உண்மையாக்கியது. அண்ணனுக்கு திருமணம் ஆகவில்லை . என்னுடைய சின்ன அண்ணன், பெரிய அண்ணனுக்கு இறக்கும் முன்பே காதல் திருமணம் செய்துகொண்டு ஒரு பெண் குழந்தைக்கு அப்பாவானார். பெரிய அண்ணன் தான் எங்களை படிக்க வைத்தார் வீட்டில் உள்ள அனைவரையும் அன்போடும் கட்டுப்பாட்டோடும் பார்த்து வந்தார்,அம்மாவும் அவருடைய பெயரையே குழந்தைக்கு வைத்து விட்டார்.இறந்தவர்கள் மீண்டும் பிறப்பார்களா?
இப்படிக்கு 

சரவணன்,
பாளையம்பட்டி.    ஹிந்து மதத்தின் ஆதார கருத்துகளில் மிகவும் முக்கியமானது மறுபிறப்பு என்பது அதாவது ஒரு மனிதன் மனிதனாக பிறந்த பிறகு அவன் செய்கின்ற பாவ புண்ணியங்களின் அடிப்படையில் இறந்த பிறகும் வந்து பிறப்பான் என்பதே மறுபிறப்பு கொள்கையின் ஆணிவேராகும். கையை தட்டினால் ஓசை வரும் வீணையை மீட்டினால் இசை வரும் இது ஒரு வினையின் எதிர்வினை என்றாலும் கூட ஒரு வினையின் பலன் என்றும் சொல்லலாம். நம்மால் நடக்கின்ற அல்லது நாம் நடத்தி வைக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுக்கும் அதற்கான பலாபலன்களை நிகழ்வுகளின் காரண கர்த்தா அனுபவிக்க வேண்டும் என்பது விதி. 

நீ ஒரு பெண்ணை காதலித்து கற்பவதியாக்கி விட்டு கல்யாணம் செய்துகொள்ள மாட்டேன் என்று ஏமாற்றினால் அது உனக்கு இப்போது சரியாகவும் புத்திசாலி தனமாகவும் தோன்றும். ஆனால் ஏமாற்றுவதனால் கிடைக்கும் பாவத்தை தண்டனையாக அனுபவித்தே ஆக வேண்டும். இந்த பிறவியில் அனுபவிக்காமல் தப்பி விட்டாலும் அடுத்த பிறவி எடுத்தாவது அனுபவிக்க வேண்டும். காரணமே இல்லாமல் கஷ்டபடுகிறேன் எனது வேதனைகளுக்கு காரணம் என்னவென்றே தெரியவில்லை. என்று அங்கலாகிப்பவர்களை நாள் தோறும் பார்க்கிறோம் அந்த காரணமே இல்லாத அல்லது தெரியாத துயரத்திற்கு மூல காரணம் கடந்த பிறவியின் நடந்ததன் விளைவே 

பாவம் செய்தாலும் சரி புண்ணியம் செய்தாலும் சரி அதன் பலன்களை அனுபவிக்க பிறவி எடுத்தே ஆகவேண்டும். பாவத்தின் பயனாக துன்பம் வந்தாலும் புண்ணியத்தின் பயனாக இன்பம் வந்தாலும் ஆன்மீக தத்துவப்படி இரண்டுமே மனிதர்களை கைது செய்யும் விலங்குகளே ஆகும். அதாவது பாவம் என்பது இரும்பு விலங்கு புண்ணியம் என்பது பொன் விலங்கு. மனிதன் பிறவி தழையை கடந்து முக்தி நிலையை அடைய வேண்டும். அப்படி அடைகின்ற ஞானத்தை பெறுகின்ற வரை பிறக்க வேண்டும்.

மறுபிறப்பு இல்லை என்று மற்ற மதங்கள் சொல்லலாம். விஞ்ஞானிகள் மேடைகள் ஏறி முழக்கமிடலாம் ஆனால் நிச்சயம் மறுபிறப்பு இருக்கிறது. மரணம் என்பது முடிவு அல்ல இன்னொரு அத்தியாயத்தின் துவக்கம். உயிர் சட்டையை களைந்து வேறு சட்டையை போட்டுகொள்வதை போல உடம்பை மாற்றி கொள்கிறது. அதனால் தான் நமது சித்தர்கள் உறங்குவது போல் சாக்காடு உறங்கி விழிப்பது போல் பிறப்பு என்கிறார்கள். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் சாதாரணன் உறக்கத்திலிருந்து விழிக்கும் போது அதே உடம்பில் விழிக்கிறோம் சாக்காடு என்ற உறக்கத்திலிருந்து விழிக்கும் போது வேறு உடம்பில் விழிக்கிறோம். எனவே சந்தேகம் வேண்டாம் இறந்த பிறகும் பிறப்பு உண்டு. 

அதே நேரம் இன்னொரு உண்மையை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு குடும்பத்தில் இறந்தவன் மீண்டும் அதே குடும்பத்தில் தான் வந்து பிறக்க வேண்டும் என்ற நியதி கிடையாது. பல நேரங்களில் அது சாத்தியமும் இல்லை. அத்தி பூத்ததை போல் எங்காவது எப்போதாவது ஒருமுறை நடக்கலாம். அப்படி நடப்பது கூட இறந்த ஆத்மாவின் விருப்பத்தை பொறுத்து அல்ல இறைவனின் கட்டளையை பொறுத்தே என்பதை மறக்க கூடாது


Contact Form

Name

Email *

Message *