Store
  Store
  Store
  Store
  Store
  Store

பணத்தைப் பெற பகவானை வணங்கு     குருஜி அவர்களுக்கு வணக்கம் மலேசியாவிலிருந்து கணேசன் வணக்கத்துடன் எழுதுவது என் சொந்த ஊர் கும்பகோணம் கடந்த ஐந்து வருடமாக மலேசியாவில் வேலை செய்கிறேன். இரவு பகல் பாராமல் பாடுபடுகிறேன். என்ன காரணம் என்றே தெரியவில்லை கையில் பத்து பைசா கூட தங்க மாட்டேன் என்கிறது. சிறிது சிறிதாக சேமித்து சொந்த ஊரில் வீடு ஒன்று கட்ட விரும்புகிறேன். ஓரளவு பணம் கையில் சேர்ந்தவுடன் எதிர்பாராத செலவு வந்துவிடுகிறது. பிறகு ஆரம்பித்த இடத்திலிருந்தே சேமிப்பை துவங்க வேண்டிய நிலை வருகிறது. இதனால் என் மனம் மிகவும் சோர்வடைகிறது. ஆண்டவன் என்னை மிகவும் சோதிப்பதாக நினைக்கிறேன். எனக்கு விடிவுகாலம் உண்டா இல்லையா என்பதே தெரியவில்லை. தயவு செய்து என் ஜாதகத்தை பார்த்து வீடுகட்டும் யோகம் எனக்கு இருக்கிறதா என்பதை சொல்லவும். அதற்காக எதாவது பரிகாரம் செய்வதாக இருந்தாலும் அதற்கும் தயாராக இருக்கிறேன் தயவு செய்து வழிகாட்டுமாறு வேண்டுகிறேன். 

இப்படிக்கு 

கணேசன்
மலேசியா    ணம், பொருள் என்பது மனிதனுக்கு செருக்கையும் அகங்காரத்தையும் கொடுத்து கீழ்நிலை படுத்திவிடும் என்றாலும் பணமில்லாமல் எவாராலும் வாழ முடியாது. ஊரும் உலகமும் உற்றாரும் உறவினரும் வேண்டாம் என்று கசாயம் உடுத்தி சன்யாசியாக தேசாந்திரியாக போனாலும் கூட எதோ ஒரு சூழ்நிலையில் பணம் தேவை படுகிறது. அதற்காக தான் சித்தர்கள் கூட இரும்பை பொன்னாக்கும் ரசவாத கலையை கண்டுபிடித்தார்கள். 

வான்மறை தந்த வள்ளுவன் ஒரு மனிதனுடைய சிறப்பான வாழ்வு அவன் பெறுகின்ற அருளிலும் பொருளிலும் இருக்கிறது என்கிறார். அதாவது மனதிலே செயலிலே சொல்லிலே அருள் இல்லை என்றால் அவ்வுலகம் என்ற ஆண்டவனின் அருள் வீடு கிடைக்காது பொருள் இல்லை என்றால் இவ்வுலகில் அமைதியும் கிடைக்காது என்ற பொருள்பட அருள் இல்லாருக்கு அவ்வுலகில்லை பொருளில்லாருக்கு இவ்வுலகில்லை என்கிறார். 

பணம் இல்லாதவன் பிணம் பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்ற பழமொழிகளும் நாடுமுழுவதும் வழங்கி வருவதை காண்கிறோம். இவைகள் வெறும் பழமொழிகள் அல்ல வாழ்க்கையின் தரத்தை எதார்த்தமாக காட்டுகிற அனுபவ மொழிகள் பணத்திற்காக பெற்ற குழந்தையை விலைபேசி விற்பதும் பணமில்லாத பெற்றோர்களை அனாதைகளாக விடுவதும் அன்றாடம் நடைபெறுகின்ற நிகழ்வாக இருக்கும் போதே பணத்தின் அருமை நமக்கு தெளிவாக தெரியும். 

ஓரிடம் தனிலே நிலை இல்லாதுலகினிலே உருண்டோடிடும் பணம் காசெனும் உருவமான பொருளே என்று பணத்தை பாடுவார்கள். அதாவது செல்வம் என்பது செல்வோம் செல்வோம் என்று போய்க்கொண்டே இருக்குமே தவிர ஓரிடத்தில் நிலையாக இருக்காது என்பது இதன் பொருள் பணம் நிலையற்ற பொருள் என்பது ஒருபுறம் இருந்தாலும் அது ஒரு விசித்திரமான பொருளாகவே இருக்கிறது. இல்லாதவன் கையில் அவ்வளவு சீக்கிரம் வந்து சேர்வதில்லை சிலருக்கு வாழ்நாள் முழுவதுமே வருவது இல்லை. இருப்பவனிடம் அவன் அழைக்காமலே மீண்டும் மீண்டும் போய் சேர்ந்து கொண்டே இருக்கும். 

சிலரிடம் மலையளவு குவிந்து கிடந்தாலும் இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்ற ஆசையை தூண்டி விட்டு கொண்டே இருக்குமே தவிர என்னை வைத்து வாழ்வை ஆனந்தமாக அனுபவி என்று பணம் ஞானத்தை மனிதனுக்கு தருவதில்லை. புதையலை பூதம் காத்தது போல நாய் பெற்ற தெங்கம் பழம் போல வாழ்நாள் முழுவதும் பணபெட்டியை பாதுகாத்து கொண்டே இருப்பார்களே தவிர உடுக்க உடையை மாற்ற அடுத்த உடை வாங்க மாட்டார்கள். இப்படி பட்ட பரிதாப ஜீவன்களை தான் பணம் நேசிக்கிறது. 

திருட போனாலும் திசை வேண்டும் என்பார்கள் அதாவது மாட்டிகொள்ளாமல் திருடுவதற்கு கூட ஜாதகப்படி கிரகங்கள் உதவி செய்ய வேண்டும். ஒருவனுடைய ஜாதகத்தில் பத்தாவது இடமும் நான்கவது இடமும் சிறப்பாக அமைந்து விட்டால் அவர்களுக்கு பணதட்டுபாடு என்பது அதிகமாக ஏற்பாடாது என்பது எனது அனுபவ உண்மையாக இருக்கிறது. பத்தாமிடம் ஒருவனின் தொழில் திறமை குறிக்கும் நான்காமிடம் சுகஸ்தானம் என்று அழைக்கபட்டாலும் போதும் என்ற மனதிருப்தியை தருகின்ற இடமாகவும் அது இருக்கிறது. அந்த இரண்டு இடங்களிலும் குறைகள் இருந்தால் ஒன்று பணமிருந்தும் நிம்மதி இருக்காது அல்லது பணமில்லாமல் நிம்மதி இருக்காது. 

இந்த கேள்வியை கேட்ட அன்பரின் ஜாதகத்தில் நான் மேலே சொன்ன இரண்டு இடங்களிலுமே சில குறைபாடுகள் இருக்கிறது. அவைகளை நிவர்த்தி செய்ய இருபத்தேழு சனிக்கிழமைகள் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கோ கிருஷ்ணன் கோவிலுக்கோ சென்று பகவானை உள்ளன்போடு வழிபட்டு வணங்க வேண்டும். அதன் பிறகு கோமாதா என்ற பசுவிற்கு வாழைபழங்கள் வழங்கி வால்பகுதியை தொட்டு வணங்க வேண்டும். இதே போல தொடர்ச்சியாக செய்தால் கிரக குறைபாடுகள் விலகி தனலாபம் நிச்சயமாக கிடைக்கும்.

Contact Form

Name

Email *

Message *