( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

யாகம் செய்வோம் வாருங்கள் ...!     ஜிலாதேவி வாசகர்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் நன்றாக இருக்கிறேன் நீங்கள் அனைவரும் நன்றாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன் உங்கள் நலத்திற்காக நாராயணனை வேண்டுகிறேன். சென்ற முறை நான் உங்களோடு பேசிய போது அனைவருக்காகவும் யாகம் செய்யலாம் கூட்டு பிராத்தனை போல கூட்டு யாகம் என்ற ஒன்றும் இருக்கிறது என்று சொன்னேன். அதை படித்து விட்டு பலரும் மின்னஞ்சல் வழியாகவும் தொலைபேசி வழியாகவும் கடிதங்கள் மூலமாகவும் தொடர்பு கொண்டார்கள். 

அப்படி தொடர்பு கொண்ட அனைவருமே இது ஒரு நல்ல முயற்சி நாமும் செய்யலாம் பலருக்கும் இதனால் பயன் ஏற்படும் என்ற கருத்தையே வலியுறுத்தினார்கள். மிக முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற பகுதியில் உள்ள வாசகர்கள் கொங்குமண்டலத்திற்காக தனியாகவொரு யாகம் செய்யுங்கள் அதில் நாங்கள் கலந்து கொள்கிறோம் என்று சொல்லுகின்ற அளவிற்கு வரவேற்பு இருந்தது. இருந்தாலும் அனைவருக்கான யாகம் என்ற முறையில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்காக தனியே செய்யவேண்டும் என்பது தற்போதைய சூழலில் முடியாது என்பதனால் தமிழ்மக்கள் அனைவருக்குமான யாகம் ஒன்றை செய்வது என்று முடிவு செய்தேன்.

யாகம் செய்வது என்ற முடிவுக்கு வந்தவுடன் அடுத்ததாக நின்ற கேள்வி எதை முன்னிட்டு யாகம் செய்ய வேண்டும் என்பதே. இன்றைய காலக்கட்டத்தில் மக்களை அதிகமாக பாதிக்க கூடிய விஷயம் எது? அவர்களுக்கு அதிகமான மன அழுத்தத்தையும் மனக் கொதிப்பையும் கொடுப்பது எது? எப்படி தீர்ப்பது? எப்போது தீரும்? என்று எதை எண்ணி அவர்கள் வேதனை பட்டு கொண்டிருக்கிறார்கள். வருத்தத்துடன் மெளனமாக கண்ணீர் சிந்தி கொண்டு இருக்கிறார்கள்? என்பதை சிந்தித்து பார்க்க துவங்கினேன். சிந்திக்க சிந்திக்க புற்றீசல் புறப்பட்டு வருவது போல் மக்களின் துயரங்கள் அடுக்கடுக்காக கண்ணின் முன்னால் வந்து நின்று முதலில் என்னைக்கவனி என்று போட்டா போட்டி போட்டன. 

ஒரு பெண் என் வயது முப்பதை தொடுகிறது வீட்டுக்கு வந்து பெண் பார்க்கிறேன் பேர்வழி என்று நூறு குடும்பமாவது டிபன் காபி சாப்பிட்டுவிட்டு போயிருப்பார்கள் அவர்களுக்கு சமையல் செய்து கழைப்படைந்தே எனது தாயாருக்கு மூட்டு வலி வந்துவிட்டது ஆனாலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. எனக்கு மணவாழ்க்கை உண்டா? என் கரம்பிடிக்க மணமகன் ஒருவன் பிறந்திருக்கிறானா? என்று புலம்புவது நமது காதுகளில் எதிரொலிக்கிறது. நிலத்தை விற்று என் தகப்பனார் என்னை படிக்க வைத்தார் உழைத்து சம்பாதித்து அவரை உயரத்தில் வைத்து கெளரவ படுத்துவேன் என்று கனவு கண்டார் மூன்று வேளை உண்பதை கூட நிறுத்தி வைத்து இரண்டு வேளை உண்டு என் கை செலவுக்கு காசு கொடுப்பார் கனவில் மட்டுமே சுகம் கண்ட அந்த முதியவருக்கு நிஜத்தில் என்னால் ஆறுதலாக அறை வயிற்றுக்கு சோறு கூட போட முடியவில்லை. படித்து வருடங்கள் உருண்டோடியதே தவிர வேலை இன்னும் கிடைக்கவில்லை என்பவனின் ஏக்க மொழிகள் இன்னொரு காதில் ஈட்டியாக வந்து குத்துகிறது.

கல்யாணம் முடிந்தது மகிழ்வோடு மணவாழ்வில் அடியெடுத்து வைத்தோம் ஆண்டுகள் பத்து கடந்துவிட்டன அம்மா என்று கூப்பிட ஒரு பிள்ளை இல்லை தெருவில் போகும் பொம்மை வியாபாரியிடம் அதை வாங்கி கொடு என்று அடம்பிடித்து அழுவதற்கு ஒரு குழந்தை பிறக்காதா? என் குலபெருமை வளராதா என்று அனுதினமும் அறுபது நாழிகையும் ஆண்டவன் முன்னால் மண்டியிட்டு அழுகிறேன் அழுது அழுது புலம்புகிறேன். வேண்டாமென்று குப்பை தொட்டியில் குழந்தையை தூக்கி போடுபவகளுக்கெல்லாம் கூட குழந்தை பிறக்கிறது ஒரே ஒரு குழந்தை பிறக்காதா என்று தவியாய் தவிப்பவருக்கு இறைவன் அனுக்கிரகம் காட்ட மாட்டேன் என்கிறானே என் குறையை தீர்பதற்கு என் கவலை போக்குவதற்கு ஒரு முயற்சி செய்ய கூடாதா? என்று ஒரு அன்னை அழுவது நம் அடிவயிற்றை பிசைகிறது. 

முப்பது வருடமாக உழைத்து உழைத்து முக்கால் பணம் கூட மிஞ்சவில்லை திரும்பும் திசையெல்லாம் கடன்காரர்களின் முகம் மட்டுமே தெரிகிறது. ஆசை மனைவிக்கு அரைமுழ பூ வாங்கி கொடுத்தால் கூட கடனடைக்க துப்பில்லாத உனக்கு பெண்டாட்டி ஒரு கேடா? என்று வட்டிக்கு கொடுத்த்தவன் மானத்தை போக்கும் அளவிற்கு கேள்வி கேட்கிறான் பசியால் அழுகின்ற மகளுக்கு கூட பால் வாங்கி கொடுக்க வழி இல்லை உடலை வருத்தி எவ்வளவு உழைக்க வேண்டுமோ அவ்வளவும் உழைத்து விட்டேன் எந்த பயனும் இல்லை எனக்கு விமோசனம் கிடையாதா? ஒரு நாள் ஒரே ஒருநாள் மட்டுமாவது நிம்மதியாக உறங்க முடியாதா? என்பவரின் நியாயமான வருத்தமும் நமது செவியிலிருந்து தப்பவில்லை 

இப்படி மனிதர்கள் அனைவருக்கும் பலதரப்பட்ட பிரச்சனைகள் பலதரப்பட்ட கஷ்டங்கள் இதில் யார் கஷ்டமும் சிறியது என்றோ பிறகு பார்த்து கொள்ளலாம் தள்ளி போடலாம் என்றோ சொல்ல முடியாது. அவரவர் கஷ்டம் அவரவருக்கு முக்கியமானது அவசரமானது. எனவே இன்ன காரணத்திற்க்காக மட்டும் யாகம் செய்வோம் என்றால் அது அனைவரையும் அரவணைத்து செல்வது போல இருக்காது. யாருக்காவது ஒருவருக்கு மனதில் குறை இருக்கும் எந்த காரியத்தையும் முதலில் துவங்கும் போது மனக்குறையோடு துவங்கக்கூடாது. அப்படி துவங்கப்படும் காரியங்கள் நிறைவானதாக இருக்காது. எல்லோருக்குமானது என்று பொதுவில் யாகம் நடத்தினால் உலக நன்மைக்காக என்று சொல்லிவிட்டு போகலாம் ஆனால் அதுவும் சரியான வார்த்தையாக இருக்காது. உலக நன்மை என்று வருகின்ற போது அதில் தனிப்பட்ட மனிதர்களின் பிரச்சனைகளை சேர்ப்பது சரிவராது. சாஸ்திரமும் அதை ஒத்துக்கொள்ளாது.

எனவே இன்றைய நிலையில் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இயற்கைப் பேரழிவை தடுத்து நிறுத்தும் அஷ்டதிக் பாலகர்கள் ஹோமம், தனிமனிதர்களின் காரியங்கள் தடைகள் அடையாமல் இருக்க செய்யும் சங்கடஹர ஹோமம், மனிதர்களின் நோய்களை தீர்க்கும் தன்வந்திரி ஹோமம் வறுமையை நீக்கி செல்வச் செழிப்பை தரும் மகாலஷ்மி ஹோமம், எதிரிகளால் ஏற்படும் தொல்லைகளை நீக்கி வெற்றி தரும் சுதர்சன ஹோமம், குழந்தை பெறுவதில் தடை மற்றும் தோஷம் இருந்தால் அவைகளை விலக்கும் கோபால சந்தான லஷ்மி ஹோமம், திருமண தடையை விலக்கும் சுயம்வர பார்வதி ஹோமம், உயிருக்கு வருகின்ற ஆபத்துக்கள் எதிர்ப்புகளை விலக்கும் ஆயுஷ் ஹோமம் தொழில், வியாபாரம் எடுக்கும் முயற்சி அனைத்துமே வெற்றி பாதையை நோக்கி நடக்க செய்யும் வராகி ஹோமம் சகல காரிய சித்தி தரும் திர்யகம்பகர் ஹோமம் ஆகியவற்றை வரிசையாக ஒரே நாளில் செய்வது என்று முடிவு செய்துள்ளேன் இப்படி செய்தால் அனைவத்து தரப்பு மக்கள் பிரச்சனையும் ஓரளவு தீர்க்குவுக்கு கொண்டுவந்து விடலாம். என்பது என் எண்ணம் 

ஹோமம் செய்வது என்ற முடிவை எடுத்துவிட்டால் எதற்காக செய்றோம் என்ற தெளிவை பெற்றுவிட்டோம் என்றால் அடுத்ததாக அந்த ஹோமம் எந்த நாளில் நடத்தப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். காரணம் யாகங்களின் வெற்றியானது அது செய்யபடுகின்ற காலத்தை பொறுத்தே அமையும். அதன் படி நிகழும் நந்தன வருடம் மாசி மாதம் ஐந்தாம் தேதி சித்த யோகம் பரணி நட்சத்திரம் கூடிய ரத சப்தமி அன்று ஞாயிற்று கிழமை (17/02/2013)
அன்று காலை ஒன்பது மணிமுதல் யாகம் துவங்குவதற்கு சரியான நேரமாக எனக்கு படுகிறது. எனவே அந்த நாளில் நமது ஸ்ரீ நாராயணா மிஷன் பிராத்தனை மண்டபத்தில் மேற்குறிப்பிட்ட யாகங்களை நடத்துவது என்று தீர்மானித்துள்ளேன் 

வேத விற்பன்னர்களும் சில வேத பாடசாலை வித்தியார்த்திகளும் யாகத்தில் கலந்து கொண்டு நடத்தி வைக்க சம்மதம் தந்துள்ளனர் நல்ல மனது கொண்ட சில பெரியவர்களும் யாகத்தில் கலந்து கொள்வதாக வாக்கு தந்திருக்கிறார்கள் எனவே அன்றைய பொழுது இறைவன் அருளால் நல்ல பொழுதாக இருக்குமென்று நம்புவோம். இத்தனை யாகங்களை ஒருசேர நடத்துவது மிகவும் சிறப்பு என்றாலும் நடத்தி முடிப்பதற்கு நிறைய செலவாகும் அந்த செலவுகளை அனைவரும் தாங்கி பிடித்தால் சுமை என்பதே தெரியாது. யாகம் நடத்தும் செலவு போக வேறு ஒரு முக்கியமான செலவும் உண்டு அக்கால மன்னர்கள் யாகம் முடிந்தவுடன் ஏழைகளுக்கு தானம் கொடுப்பதை அறிந்திருப்பீர்கள் எனவே நாமும் அன்று தானம் கொடுத்தால் தான் யாகம் பரிபூரண நிலையை அடையும் அதன்படி வஸ்திர தானம் அன்னதானம் உட்பட சில தானங்களை செய்ய வேண்டும் என்பது என் விருப்பம் 

இந்த யாகத்தில் உஜிலாதேவி வாசகர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்மென்று நான் விரும்புகிறேன் அதனால் நமது ஆசிரமத்திற்கு அன்று நீங்கள் கட்டாயம் வரவேண்டும். தனியாக அல்ல குடும்பத்தோடு வாருங்கள். யாகத்தில் உங்களுக்காக சங்கல்ப்பம் செய்யவேண்டுமென்றால் உங்கள் பெயர் நட்சத்திரம் கோத்திரம் தாய் தந்தையர் மனைவி மக்கள் பெயர்களை கண்டிப்பாக உடனடியாக மின்னஞ்சல் வழியாகவோ கடிதம் வழியாகவோ தெரியபடுத்தவும் மேலும் கீழே கொடுக்கப்படும் வங்கி கணக்கு முகவரியில் உங்கள் சங்கல்ப்ப காணிக்கையாக உங்களால் முடிந்த தொகையை அனுப்பவும். நீங்கள் அனுப்பும் தொகையை எவ்வளவு என்று கண்டிப்பாக மின்னஞ்சலில் தெரியபடுத்தவும் நேரில் வர இயலாதவர்கள் அயல்நாட்டில் வாழ்பவர்கள் தங்களது முகவரியை தெரிவித்தால் யாக பிரசாதம் அனுப்பிவைக்க வசதியாக இருக்கும். எனவே அன்பர்கள் அனைவரும் இந்த ஆன்மீக பணியில் கலந்துகொண்டு பயன்பெற அழைக்கிறேன் மறந்து விடாதீர்கள் யாகம் நடக்கும் தேதி 17/02/20013 ஞாயிற்று கிழமை காலை ஒன்பது மணிக்கு.


  • வங்கி கணக்கு 


Name -Guruji
A/c no- 0106301000035874,
Lakshmi vilash bank,
Ifcs code - LAVB0000106
Arakandanallur


  • தபால் முகவரி 


யோகி ஸ்ரீஇராமானந்த குரு
4/76 c காமராஜ் சாலை 
அரகண்டநல்லூர் 605752
திருக்கோவிலூர் (தாலுக்கா)
விழுப்புரம் மாவட்டம்
தமிழ்நாடு


  • மின்னஞ்சல் முகவரி யாகம் சம்மந்தமாக விபரங்களை பெற விரும்புவர்கள் +91-9976459986 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

+ comments + 14 comments

good news Guruji

நல்ல செய்தி குருஜி.

good news guruji

gud news guruji

Anonymous
11:05

NALOUR ORUVAR ULALRAL OURPORUTO PAIUM MALAI
YELOR NALANUKAKA SAIUM INTHA YAGAM SERAPAKA NADI PARA ERIVANI VANDUKERAN

SRINIVASAN-RAJAHMUNDRY-533103 A.P

உங்களின் இந்த ஆன்மீக சேவைக்கு என் மனமார்ந்த நன்றிகள
குருஜி

Nice thought and use full to all people, allways we will with u
Ramesh K

hello Guruji
Many many thanks to u. Definetly we'll share some money. Ungalai pol oruvar irupathaal thaan nangal ellam sugamaga irukka mudigirathu. Nandri guruji.
Suguna
USA

hello Guruji
Many many thanks to u. Definetly we'll share some money. Ungalai pol oruvar irupathaal thaan nangal ellam sugamaga irukka mudigirathu. Nandri guruji.
Suguna
USA

hello Guruji
Many many thanks to u. Definetly we'll share some money. Ungalai pol oruvar irupathaal thaan nangal ellam sugamaga irukka mudigirathu. Nandri guruji.
Suguna
USA

Great

Great Homam


Next Post Next Post Home
 
Back to Top