Store
  Store
  Store
  Store
  Store
  Store

தந்தையும் மகனும் பிரியலாமா?




    குருஜி அவர்களுக்கு பாத நமஸ்காரம் குருஜி என் பெயர் வைஷ்ணவி தற்போது நானும் எனது கணவரும் சென்னையில் வசித்து வருகிறோம் எங்களுக்கு திருமணமாகி ஏழு வயதில் ஒரு மகன் இருக்கிறான் அவனுக்கு சரிவர படிப்பு வரவில்லை நினைவாற்றல் குறைவாக இருக்கிறது அதற்கு என்ன செய்வது என்பதை அறிந்து கொள்ள சென்னையில் புகழ்பெற்ற ஒரு ஜோதிடரை சந்தித்து ஆலோசனை கேட்டேன். அவர் என் மகன் ஜாதகத்தை கணித்து பார்த்து அவன் குறைகளுக்கான பரிகாரங்களையும் சொன்னார் அத்தோடு அவர் உங்கள் மகன் ஜாதகப்படி தந்தையாருக்கு கண்டம் இருக்கிறது எனவே தந்தை மகன் இருவரும் பிரிந்திருப்பது நல்லது என்று சொன்னார். எனக்கு மிகவும் கவலையாகி விட்டது. என் கணவருக்கு மகனின் மீது மிகவும் பாசம் அவனை பிரிந்து இருப்பது என்பது அவரால் இயலுமா? என்று எனக்கு தெரியவில்லை. எனது குழப்பத்திற்கு சரியான தீர்வை நீங்கள் மட்டுமே தர இயலுமென்று நினைக்கிறேன்.

இப்படிக்கு 
உஜிலாதேவி வாசகி வைஷ்ணவி 
சென்னை 





      புத்திரன் என்ற வார்த்தையின் அர்த்தமே நமது இரத்தத்தின் புதிய வடிவம் என்பதாகும். புத்திரனை பெறுவதும் அவனை வளர்ப்பதும் வளர்த்து ஆளாக்கி உயரிய அந்தஸ்தில் வைத்து பார்ப்பதும் ஒவ்வொரு தகப்பனின் கடமை மட்டுமல்ல தவமும் ஆகும். அதே போலவே புத்திரனும் தனது தந்தையின் செல்வாக்கை பல மடங்கு வளர்ப்பதில் பங்குபணி ஆற்றுபவனாகவும் இருக்கிறான் தந்தையை பாதுகாப்பவனாகவும் இருக்கிறான்.

இன்றைய புத்திரர்கள் தங்களது தாய் தந்தையரை சரியான முறையில் பராமரிக்கவில்லை பாதுகாக்கவில்லை என்ற ஒரு வருத்தம் எனக்கு உண்டு. ஒரு மகன் தன் பெற்றோருக்கு செய்யவேண்டிய கடமையிலிருந்து தவறுவதற்கு யார் காரணம்? என்ன காரணம்? என்று யோசிக்கும் போது பெருமளவு குற்றசாட்டை பெற்றோர்களின் மீதே வைக்க தோன்றுகிறது.

மகன் நினைத்ததை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் அவன் விரும்பும் படியெல்லாம் வளைந்து கொடுக்கவேண்டும் என்று மூடத்தனமான பாசத்தை வைத்திருக்கும் அனைவருமே குழந்தைகளால் புறக்கணிக்க படுவதை பார்க்கிறேன். அதற்காக குழந்தைகளின் மீது அன்பு வைக்க கூடாது என்று நான் சொல்லவில்லை அன்பு வைக்கும் அதே நேரத்தில் பிள்ளை பருவம் முதலே குடும்ப பாரம்பரியத்தையும் பொறுப்பையும் அவர்களுக்கு உணர்த்தியே வளர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு சொத்து சுகத்தையும் பணத்தையும் சேர்த்து வைத்தால் மட்டும் போதும் என்று நாம் நினைக்கும் போதே அவன் அவற்றை மட்டுமே பார்க்கிறான் நம்மை பார்க்க மறுக்கிறான்.

சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக குழந்தைகளை தற்காலிகமாக பிரிந்திருந்தால் அது தவறு இல்லை. திரைகடல் ஓடியும் செல்வம் தேடு என்று நமது பெரியவர்கள் சொல்வார்கள். அப்படி திரைகடல் ஓடும் போது குழந்தைகளையும் மடியில் கட்டி கொண்டா ஓடமுடியும்? சிறிது காலம் பிரிந்து தானே இருக்க வேண்டும். அதே குழந்தையே விடுதியில் தங்க வைத்து படிக்க வைத்தால் நானும் குழந்தையோடவே தங்குவேன் என்று அடம்பிடிக்கவா முடியும்? குழந்தைகளுக்கு பொறுப்பு வருவதற்காக பிரித்து வைத்தால் அது தவறல்ல.

ஆனால் உங்கள் நிலை வேறாக இருக்கிறது. ஜாதகத்தை காரணம் காட்டி குழந்தையை பிரிப்பது மிகவும் கொடுமை ஆனால் சில நேரம் அந்த கொடுமை தவிர்க்க முடியாததாக ஆகி விடுகிறது. ஒரு ஜாதகத்தில் சூரியன் செவ்வாய் ராகு ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று திரிகோணத்தில் இருந்தாலும் சூரியனுக்கு பனிரெண்டாவது இடத்திலும் ஐந்தாம் இடத்திலும் செவ்வாய் ராகு இருந்தாலும் தகப்பனுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் என்று ஜாதக அலங்காரம் என்ற நூல் தெளிவாக சொல்கிறது. எனவே ஒரு குழந்தையின் ஜாதகத்தில் அப்படி கிரகநிலை இருந்தால் குறிப்பிட்ட காலம் வரை தந்தையும் மகனும் பிரிந்திருந்தால் வருகின்ற அபாயத்தின் வேகம் சற்று தணியும்.

ஆனால் உங்கள் மகன் ஜாதகத்தை நன்றாக அலசி ஆராய்ந்து விட்டேன் அப்படி ஒரு கிரகநிலை இல்லவே இல்லை. எதை அடிப்படையாக கொண்டு அந்த புகழ்பெற்ற ஜோதிடர் கூறினார் என்பது எனக்கு விளங்கவில்லை. அதனால் உங்கள் மகனை அவன் தந்தையிடமிருந்து பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.



Contact Form

Name

Email *

Message *