Store
  Store
  Store
  Store
  Store
  Store

சித்தர்களின் அருளை பெண்கள் பெற...    மது நாட்டில் வாழ்ந்த சித்தர்களில் பலர் பெண்களை ஒதுக்கி வைத்தே வாழ்ந்திருக்கிறார்கள் பெண்களோடு எந்த வகையிலும் உறவு பாராட்ட அவர்கள் விரும்பியது இல்லை. இந்த நிலையில் தெய்வமாக நிற்கின்ற சித்தர்களின் அருளை பெறுவதற்கு பெண்களுக்கு தகுதி இல்லையா? அவர்கள் அதை பெறமுடியாதா? 

வசந்தி 
பழையவண்ணார்பேட்டை 
சென்னை 
    தினெட்டு சித்தர்களின் பாடல்களில் பெண்களை பற்றி வருகின்ற கருத்துக்களை மேலோட்டமாக படித்து விட்டு சிலர் சித்தர்கள் பெண்களை ஒதுக்கினார்கள் வெறுத்தார்கள் ஆன்மீக வாழ்க்கைக்கு பெறும் தடையென கருதி புறக்கணித்தார்கள் என்று கூறி வருகிறார்கள். இவர்களின் கூற்று சித்தர்களை பற்றிய அறியாமையில் வந்து என்றே சொல்ல வேண்டும். 

சித்தர்கள் காடு மலையை நேசித்தார்கள் சீரும் பாம்பையும் பாய்ந்துவரும் புலியையும் அன்போடு பார்த்தார்கள் இயற்கையின் அனைத்து வெளிப்பாடுகளையும் இறைவனின் அம்சமாகவே கண்டார்கள். அப்படி பட்டவர்கள் மனிதகுலத்தின் ஒருப்பாதியான பெண்ணினத்தை வெறுத்தார்கள் என்று சொல்வது அவர்களை இழிவு படுத்துவதாகும். 

பெண்களையும் அவர்களது உடல் அமைப்பையும் விமர்சித்து சித்தர்கள் பாடி இருப்பதை நான் மறுக்கவில்லை ஆனால் அந்த விமர்சனம் பெண்கள் மீது அவர்கள் கொண்ட கருத்தா என்பதை சிந்திக்கும் போது அப்படி அல்ல என்ற பதில் கிடைக்கிறது. பெண்களை பற்றிய சித்தர்களின் கருத்துக்கள் பெண்கள் மீது கொள்ளுகின்ற காமம், மோகம் போன்றவற்றை சாடுவதேயாகும் என்பதை உணர வேண்டும். அதாவது அவர்கள் பெண் மோகத்தை வெறுத்தார்களே தவிர பெண்களை வெறுக்கவில்லை. அவர்கள் பெண்களை சாடுவதாக வருகின்ற பாடல் வரிகளில் பெண் மோகத்தை மனதில் வைத்து படித்து பாருங்கள் உண்மை நிலை தெளிவாக தெரியும்.

சித்தர்களின் அருள் ஆண்களுக்கு எப்படி உண்டோ அப்படியே பெண்களுக்கு உண்டு என்பதை மறக்க கூடாது. நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் சமதரையிலிருந்து பார்ப்பதை போன்ற பார்வை உடையவர்கள் எனவே நமது கண்களில் ஏற்ற தாழ்வுகள் எளிதாக தெரியும். ஆனால் சித்தர்களின் பார்வை அப்படி அல்ல அவர்கள் ஆகாயத்திலிருந்து பூமியை பார்ப்பது போன்ற பார்வை உடையவர்கள். அவர்களுக்கு அனைத்தும் சமமாகவே தெரியும் சித்தர்களின் அருளை பெற நினைப்பவர்கள் சுந்தரர் அருளிய 


நீரும் மலரும் நிலவும் சடைம்மேல் ஊரும் அரவம் உடையான் இடமாம் வாரும் அருவி மணிபொன் கொழித்துசேரும் நறையூர் சித்தீச்சரமே 

என்ற பாடலை தினசரி பக்தி பெருக்கோடு ஓதி வந்தால் ஆண்களை விட பெண்கள் அதி சீக்கிரத்தில் சித்தர்களின் அருளை பெறலாம்.

Contact Form

Name

Email *

Message *