( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

பயணம் செல்ல எளிய பரிகாரம்     ன் கணவருக்கு அடிக்கடி வெளியூர் செல்லுகின்ற வேலை அவர் அலுவலகத்தில் வெளியூரில் முடிப்பதற்கான பணிகள் எதுவாக இருந்தாலும் இவர்தான் செய்ய வேண்டும். கடமை என்று வந்த பிறகு வெளியூர் உள்ளூர் என்றெல்லாம் பார்க்க கூடாது பாடு பட்டால் தான் பலன் உண்டு என்று அவர் அடிக்கடி சொல்வார். எப்போதுமே தனது பணியின் நிமித்தம் அவர் சலிப்படைந்தது  கிடையாது ஆனால் எனக்கு அவர் வெளியில் சென்று வீடு திரும்புகிற வரை மனம் படபடப்போடு இருப்பேன். என் குழந்தைக்கும் எனக்கும் அவரை விட்டால் வேறு நாதி கிடையாது. அவரை மட்டுமே நாங்கள் நம்பி இருக்கிறோம். அதனால் குருஜி அவர்கள் வெளியூர் செல்லும் என் கணவர் நலமோடு திரும்பி வருவதற்கு நான் ஏதாவது பிராத்தனைகள் செய்ய வேண்டுமா? என்பதை தயவு செய்து விளக்குமாறு அன்போடு கேட்கிறேன். இந்த பெண்ணின் மனதை புரிந்து கொண்டு வழிகாட்டுவீர்கள் என்று நம்புகிறேன்.
இப்படிக்கு
கிரிஜா மாதவன்
வேளச்சேரி
சென்னை    மது தமிழ்நாட்டு தாய்மார்களுக்கு தங்களது குழந்தைகளை ஆங்கிலத்தில் படிக்க வைக்க வேண்டும் பேச வைக்க வேண்டும் என்ற அலாதியான ஆசை உண்டு ஒரு மொழியை கற்று கொள்வது தவறு இல்லை என்றாலும் கூட அந்த குறிப்பிட்ட மொழியை மட்டும்தான் கற்று கொள்ள வேண்டும் என்று நினைப்பது புத்திசாலி தனமல்ல. மொழியை கற்றுக் கொண்டால் கூட தவறில்லை அந்த மொழியை பேசுகின்ற மக்களின் பண்பாட்டையும் நமக்கு பொருந்தி வருகிறதோ இல்லையோ அதையும் சேர்த்து கற்று கொள்ள வேண்டும் நடைமுறை படுத்த வேண்டும் என்று நினைப்பது வடிகட்டிய அசட்டுத்தனம்.

ஆங்கில பள்ளிகளில் ரயின் ரயின் கோ அவே என்ற பாடல் பிஞ்சு குழந்தைகளை வைத்து சொல்ல படுகிறது இதன் பொருளை அறிந்தே அதனுடையை விளைவுகளை உணராமல் குழந்தைகளுக்கு கற்பிற்க படுகிறது. ஒரு வார்த்தை சொல்லாக வெளிப்படுகிற போது அதுவும் கள்ளம் கபடம் இல்லாத குழந்தைகளிடமிருந்து வெளிவருகிற போது அதற்கு தனி சக்தி உண்டு. நமது நாட்டில் மழை வருவது குறைந்து போனதற்கு பல காரணங்களில் இதுவும் ஒன்றாக கருதலாம்.

இந்த பாடலை போலவே நமது குழந்தைகளுக்கு வீட்டிலிருந்து யாரவது வெளியூருக்கு சென்றால் அவர்களுக்கு டாட்டா காண்பிக்க கற்று தருகிறோம். இது மிகவும் தவறுதலான அமங்கலமான பழக்கமாகும். ஒருவருக்கு டாட்டா காட்டுகிறோம் என்றால் நீ மீண்டும் வராதே இத்தோடு போய்விடு என்பது அர்த்தம். இந்த அர்த்தத்தில் வேண்டப்பட்டவர்களை வழியனுப்பினால் நன்றாகவா இருக்கும்? எனவே பயணமாக செல்பவர்களிடம் மங்கலமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் பயன்படுத்த கற்று தர வேண்டும்.

இதே போலவே வெளியில் சென்றவர்களுக்கு அது நேர்ந்து விடுமோ இது நேர்ந்து விடுமோ என்று வீணாக கற்பனை செய்து மனதை குழப்பி கொள்ள கூடாது. எதுவும் நேராது எல்லாம் நல்லபடியாக இருக்கும் கடவுள் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையோடு இருக்க வேண்டும். அவநம்பிக்கை கொள்ளுகின்ற போது அதன் தாக்கம் மற்றவர்களையும் சென்றடைந்து சில பதட்டமான சூழ்நிலைகளை உருவாக்கி விடலாம். எனவே வீண் கற்பனையை தவிர்க்க வேண்டும்.

வெற்றியூருரை வேதிய ராவர்நல்ஒற்றி யேறுகந் தேறும் ஒருவனார்நெற்றித் கண்ணினர் நீளர வந்தனைபற்றி ஆடுவர் பாசூர் அடிகளே

         என்ற திருநாவுக்கரசு சுவாமிகளின் திருபதிகத்தை நூற்றியெட்டு முறை ஓதி குங்குமத்தால் அம்பாள் படத்திற்கு அர்ச்சனை செய்து இந்த குங்குமத்தை வெளியூர் பயணத்தை மேற்கொள்பவர்களிடம் கொடுத்தனுப்பினால் பயணத்தின் போது எந்த அபாயமும் ஏற்படாது என்று நமது முன்னோர்கள் அனுபவத்தால் கண்டறிந்து இருக்கிறார்கள். நீங்களும் இதை பயன்படுத்தி நல்ல பலனை அடையலாம் உங்கள் மனதும் திடமடையும்.

Next Post Next Post Home
 
Back to Top