Store
  Store
  Store
  Store
  Store
  Store

மாடிப்படி அமைக்க வேண்டாம் !   குருஜி அவர்களுக்கு வணக்கம் நானும் என் மனைவியும் வருகின்ற வருமானத்தில் சிறிது சிறிதாக சேமித்து ஒரு மனை வாங்கி அதில் வீடு கட்ட துவங்கி உள்ளோம். அது கிழக்கு பார்த்த மனை அந்த மனையின் அமைப்பு படி வடகிழக்கு அல்லது தென் கிழக்கு பகுதியில் தான் மாடிப்படி அமைக்க வேண்டிய நிலை இருக்கிறது. வீட்டிற்கு வரைப்படம் கொடுத்தவர் வடகிழக்கு பகுதியில் படிக்கட்டை அமைக்கலாம் என்கிறார். கட்டிடம் கட்ட வந்த மேஸ்த்திரியோ அந்த பகுதியில் படிக்கட்டை அமைக்கவே கூடாது அப்படி அமைத்தால் வீட்டில் ஒரு நாள் கூட நிம்மதியாக இருக்க முடியாது என்று கூறுகிறார். எங்களுக்கு யார் சொல்வதை எடுத்து கொள்வது என்பது புரியவில்லை. எதை செய்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவே குருஜி அவர்கள் தயவு செய்து எந்த பகுதியில் மாடிபடியை அமைக்கலாம் என்பதை தெரிவிக்குமாறு பணிவோடு வேண்டுகிறேன்.

இப்படிக்கு 

இரத்தினசாமி 
திண்டுக்கல்     மது நாட்டில் பலவிதமான குழப்பங்களுக்கு மூலகாரணமே ஒவ்வொருவரும் தான் சொல்வது தான் சரி தனது நினைப்பு தான் நியாயமானது தனது முடிவுதான் புத்திசாலித்தனமானது என்று கருதுவது தான். யாருமே நாம் சொல்வதில் தவறுதல் இருக்கலாமோ? சற்று பொறுத்து தீர்க்கமாக ஆலோசனை செய்து கருத்துக்களை வெளியிடலாமே என்று சிந்திப்பது இல்லை. எனக்கு  தோன்றுகிறது எனவே அதை அனைவரும் ஏற்றுகொள்ள வேண்டும் என்ற மனோபாவத்தின் பிடியிலேயே இருக்கிறோம். 

இதுவொரு வேதனை என்றால் இன்னொரு வேதனை இருக்கிறது. சில பெரிய மனிதர்கள் தங்களுக்கு ஒரு விஷயத்தை பற்றி அறிவு இருக்கிறதா? இல்லையா? என்பதை சிந்திக்காமலே அது சம்மந்தமான கருத்துக்களை கூறிவிடுவார்கள். யாரவது விஷயம் தெரிந்தவர்கள் உங்கள் கருத்து தவறு என்று கூறிவிட்டால் போதும் அணையை உடைந்தது கொண்டு வெள்ளம் பாய்வதை போல் கோபம் பொத்து கொண்டு வந்துவிடும். தனது கருத்தை நிலை நிறுத்துவதற்காகவே  பல தகிடுதத்த வேலைகளையும் செய்ய துவங்கி விடுவார்கள். 

பெரிய மனிதர்கள் சொல்கிறார்கள் என்பதனாலையே கண்மூடி தனமாக அதை நம்பி செயல்படுகின்ற மனிதர்களும் இந்த நாட்டில் ஏராளமாக இருக்கிறார்கள். இத்தகைய மனிதர்களால் தான் ஒன்றுமே தெரியாதவர்கள் கூட அறிஞர்கள் என்றும் மேதாவிகள் என்றும் புகழப்பட்டு இல்லாத தகுதி அவர்களுக்கு இருப்பதாக சரித்திரத்தில் பதியவைத்து விடுகிறார்கள். 

வாஸ்து சாஸ்திரம் தெரியவேண்டும் என்ற அவசியமில்லை சாதாரணமாக சில கட்டிடங்களை கட்டி அனுபவம் இருந்தாலே எந்த பகுதியில் படிக்கட்டு வைக்க வேண்டும் எங்கே வைக்க கூடாது என்பது தெரிந்து விடும். நீங்கள் வரைப்படம் தயாரிக்க கொடுத்தவர் முதல் முதலாக உங்களுக்கு தான் வரைப்படம் தயாரித்திருக்கிறார் மற்றவர்களுக்கு இனிமேல்தான் தயாரிக்க வேண்டுமென்றால் வடகிழக்கு பகுதியில் மாடிபடிகட்டு அமைக்க வேண்டும் என்ற அவரது சொல்லை பாவம் தெரியாமல் சொல்கிறார் நாலு இடத்தில் அனுபவபட்டால் சரியாகி விடுவார் என்று மன்னித்தும் மறந்து விடலாம். அது இல்லாமல் அவருக்கு அனுபவம் இருக்கிறது என்றால் நிச்சயமாக அவர் கூறுவதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது அவருக்கு கட்டிடங்களை பற்றிய அடிப்படை அறிவு இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளவும் முடியாது.

கட்டிட கட்டுமானம் வாஸ்து சாஸ்திரம் போன்றவைகளை முறைப்படி கற்றுக்கொள்ள வில்லை என்றாலும் உங்களது மேஸ்திரி சொல்வது முற்றிலும் சரியான கருத்தாகும். வடகிழக்கு மூலையில் மாடிப்படி வைத்தால் அந்த பகுதியில் அழுத்தமும் பாரமும் அதிகமாகும். வீட்டின் ஈசான்ய மூலை என்பது பாரம் இல்லாமல் காற்று வரக்கூடிய பகுதியாக அமையவில்லை என்றால் அந்த வீட்டில் வாழ்பவர்களுக்கு ஆரோக்கிய குறைபாடும் வீணான வழக்குகளும் அரசாங்க தொல்லையும் அமையும். எனவே வடகிழக்கு மூலையில் நீங்கள் மாடிப்படி அமைக்க வேண்டாம்.

Contact Form

Name

Email *

Message *