( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

கனவுகள் பலிக்குமா...?
      குருஜி ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கம் என் பெயர் சுதர்சனம் எனக்கு நாற்பது வயது நடந்து கொண்டிருக்கிறது. திருமணம் முடிந்து மூன்று குழந்தைகள் பிள்ளைகள் அனைவருமே நன்றாக படிக்கிறார்கள் எனக்கும் அப்பா அம்மா தந்துவிட்டு போன சொந்த வீடும் நல்ல வேலையும் இருக்கிறது கடவுள் கிருபையால் நன்றாக இருக்கிறேன் என்றே சொல்ல வேண்டும் ஆனாலும் எனக்கொரு பிரச்சனை இருக்கிறது கடந்த இரண்டு வருடமாக இரவில் உறங்கினாலே பயங்கரமான கெட்ட கனவுகள் வருகிறது கனவுகளை இன்னெதென்று சொல்ல முடியாவிட்டாலும் கனவு வரும் அந்த நேரத்தில் என் உறக்கம் கலைந்து விடுகிறது படபடப்பும் இனம் புரியாத திகிலும் வந்து மீண்டும் உறங்க முடியாமல் அவதிபடுகிறேன். மனநல மருத்துவர் வரையிலும் சென்று பார்த்துவிட்டேன். உங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை நார்மலாகவே இருக்கிறீர்கள் என்கிறார்கள் ஜோதிடரிடம் சென்று பார்த்தால் அவரும் அதே பதிலை தான் தருகிறார் ஆனாலும் எனது கனவு தொல்லை தொடர்கிறது. அதை தீர்க்க தெய்வீகமான முறையில் பரிகாரம் ஏதாவது இருந்தால் தயவு செய்து சொல்லி எனக்கு வழிகாட்டுமாறு உங்கள் பாதங்களை தொட்டு வேண்டுகிறேன். 
இப்படிக்கு 
சுதர்சனம் 
மலேசியா 
     னவுகள் என்பது ஆழ்மனதிற்குள் புதைந்து கிடக்கும் நினைவுகளின் வெளிப்பாடு என்று மருத்துவ விஞ்ஞானம் சொல்கிறது. நாம் கண்டு கேட்டு அனுபவித்த எதிர்பார்க்கும் விஷயங்களை மட்டுமே கனவுகளில் காண முடியும் பார்த்தே அறியாத பொருளை அல்லது கேள்வி பட்டே இல்லாத பொருளை கனவில் காண முடியாது எனவே அது மனம் சம்மந்தப்பட்ட விஷயம் என்று அதற்கு விளக்கமும் தருகிறார்கள். பல கனவுகளையும் கனவு கண்டவர்களையும் காணுகிற போது மருத்துவ விஞ்ஞானம் சொல்வது சரியென்றே தோன்றுகிறது. 

ஆனால் நமது முன்னோர்களான மெஞ்ஞானிகள் கனவுகளை வெறுமனே மனதோடு சம்மந்தப்பட்ட விஷயமாக கருதவில்லை கனவு என்பது நமது வாழ்க்கையில் நடைபெற போகிற எதிர்கால நிகழ்வுகளின் குறியீடுகள் அவற்றை ஊன்றி கவனித்தால் நடைபெற போகின்ற வாழ்க்கை சம்பவங்களை முன்கூட்டியே உணர்ந்து கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.

உதாரணமாக சுவர்மீது உட்கார்ந்து அல்லது திண்ணையில் அமர்ந்து விருந்து சாப்பாடு சாப்பிடுவது போல கனவு கண்டாலும் அல்லது சமுத்திரத்தை தாண்டுவது போன்று கனவு கண்டாலும் விஷேசமான உயர்ந்த வேலை அல்லது பதவி கிடைக்கும் என்கிறார்கள் அதே போல வீட்டை சாணத்தால் மெழுகி சுத்தம் செய்வது போன்று கனவு வந்தால் வீட்டில் விரைவில் திருடு நடக்கும் என்றும் சொல்கிறார்கள்.

கனவுகளின் மூலம் தனது வாழ்நாளில் பல விஷயங்களை முன்னதாகவே அறிந்து சில ஆபத்துகளிலிருந்து தப்பியதாக சிலரும் கனவில் வந்ததை பொருட்படுத்தாமல் விட்டதனால் சில ஆபாயங்களை சந்திக்க நேரிட்டதாகவும் சிலர் சொல்கிறார்கள் இவைகள் எல்லாம் வீண் கற்பனை காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக இருக்கும் என்று மறுத்தும் சிலர் பேசுகிறார்கள்.

எனது அனுபவத்தை பொருத்தவரை சில கனவுகள் பலித்தும் இருக்கிறது பல கனவுகள் பலிக்காமலும் போயிருக்கிறது நீ சுபமான கனவு கண்டபோது அது பலித்திருக்கிறதா? இல்லையே பிறகு எப்படி அசுப கனவு பலிக்குமென்று நம்புகிறாய்? நீ கனவு கண்டாலும் சரி காணாவிட்டாலும் சரி நடப்படுது நடந்தே தீரும் அதை தடுக்க யாராலும் முடியாது எனவே அதை நினைத்து கொண்டு வருத்தபடுவதை விட்டு விட்டு ஆகவேண்டிய வேலையை பார் என்று அடிக்கடி என் தந்தையார் எனக்கு கூறி வளர்த்ததனால் கனவுகளின் பேரில் எனக்கு அவ்வளவாக அக்கறையில்லாமல் போய்விட்டது அதனால் என்னால் கனவுகளை வாதப்படி நம்பமுடியவில்லை அனுபவப்படி நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.


எனவே பயங்கர கனவு கெட்ட கனவு என்று கனவுகளை பதம் பிரித்து நினைத்து நினைத்து அச்சபடுவதை விட்டு விட்டு வேறு சிந்தனையில் மனதை திருப்பினால் நன்றாக இருக்கும் என்பது எனது எண்ணம். மேலும் இந்த வாசகர் வார்த்தைகளை எழுதியிருக்கும் விதத்தை பார்க்கும் போது  இவருக்கு ஆங்கில திரைப்படங்கள் சண்டை காட்சிகள் போன்றவற்றை பார்ப்பதிலும் பத்திரிக்கைகளில் வெட்டு குத்து செய்திகளை விரும்பி படிப்பதிலும் இளம் பருவத்தில் ஆர்வம் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. எனவே அந்த நினைவுகளை மனதிலிருந்து மாற்றுவதற்கு கண்ணதாசம் கல்கி சாண்டில்யன் பார்த்தசாரதி போன்ற எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை படித்தால் நல்ல பலன் ஏற்படும் என்பது எனது சொந்த அபிப்ராயம்.

இருந்தாலும் தெய்வீகமான பரிகாரங்களை இவர் கேட்டிருக்கிறார் இவருக்காக சில பழைய சுவடிகளை தேடி பிடித்து பார்த்ததில் கெட்ட கனவுகள் வந்தால் தினசரி அனுமார் கோவிலுக்கு சென்று வழிபட்டாலும் தினம் நூற்றி எட்டு முறை ராம நாமம் ஜெபித்தாலும் நல்ல பலனுண்டு என்று அறிய முடிகிறது. எனவே இந்த பரிகாரத்தையும் நம்பிக்கையோடு செய்து வாருங்கள் கடவுளை வணங்குகின்ற எந்த பரிகாரமும் கண்டிப்பாக பலனை தரும்.

+ comments + 3 comments

குருஜி அவர்களுக்கு, வணக்கம்.இறைவனின் திருநாமங்களை ஜெபிக்க ஜெபிக்க - உருஎறத் திருஏறும் என்ற பொய்யாமொழிக்கு இணங்க- உடலுக்கும் மனதிற்கும் ஆன்மாவிற்கும் அற்புதமான பலன்களை சாதகர்கள் பெறுவது திண்ணம். விடாமுயற்சி தேவை. எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர் திண்ணியராகப்பெறின்.

ஐயா வணக்கம் . நான் தினமும் உறங்கும் போது விழித்திருக்கும் போதும் வேலை செய்து கொண்டு இருக்கும் போதும் என் உடல் மட்டும் ஆடிக்கொண்டே இருக்கிறது , இது ஏன் என்று எனக்கு புரியவில்லை ,உறங்கும் போதும் நன்றாக உறங்குவது போலவே தோன்றும் அனால் உடல் மட்டும் முச்சி வாங்குவது போல இருக்கும் . தயவு செய்து இது எதனால் என்று சொல்லமுடியுமா

கனவு பலன்களின் இதுவும் நல்ல தகவல்


Next Post Next Post Home
 
Back to Top