( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )மிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

ஒரே வீட்டில் அப்பா மகள் ஆவி !


   


          னது சொந்த ஊர் திருநெல்வேலிக்கு பக்கத்தில் உள்ள ராமன்குடி எனது பூர்வீக கிராமம் அதுவென்றாலும் கடந்த பதினைந்து வருடங்களாக அங்கு நான் வாழவில்லை அங்கு எனக்கு சொந்தமான ஒரு வீடு இருக்கிறது. என் தாத்தா பிறந்து வளர்ந்தது முதல் எனது மூத்தமகள் பிறந்தது வரையும் கண்ட வீடு அது. நாலு கட்டுடைய ஓட்டுவீடு என்றாலும் மிகவும் விஸ்தாரமானது காற்று வசதி உடையது என் இளம் பிராயத்தை பற்றிய கனவு வந்தாலும் அல்லது வீடுகளை பற்றிய கனவு வந்தாலும் அந்த வீட்டில் தான் நான் இருப்பது போல கனவு காணுவேன். என் நினைவிலும் கனவிலும் என் வீடு என்னோடு ஒட்டிகொண்டது இனி அதை பிரித்துவிட முடியாது மிக விரைவில் அந்த வீட்டிற்கு சென்று வாழவே நான் விரும்புகிறேன்.

அந்த வீட்டிலிருந்து இப்போது நான் பெங்களூரில் வாழ்வது ஒரு சோககதை என் தாத்தா அவர் அப்பாவுக்கு ஒரே வாரிசு என் அப்பாவும் தாத்தாவுக்கு ஒரே வாரிசு என் தகப்பனாருக்கு மட்டும் தான் நானும் எனது தங்கையும் பிறந்தோம் எங்கள் வர்க்கத்தில் இரண்டு குழந்தைகளை பெற்றவர் என் தகப்பனார் மட்டுமே அவருக்கு என் தங்கை மீது அளவிட முடியாத அன்பு உண்டு வயதுக்கு வந்த பெண்ணாக அவள் ஆன பிறகு கூட அவள் பள்ளிகூட புத்தக பையை இவர் தான் சுமந்து கொண்டு கொடுப்பார். அவளுக்கு உடம்புக்கு எதாவது சிறியதாக வந்துவிட்டால் கூட அவரால் தாங்க முடியாது. துடிதுடித்து போவார். கல்யாணம் முடிந்து வேறு வீட்டுக்கு போகவேண்டிய பிள்ளையின் மீது இத்தனை பாசம் கூடாது அது அந்த குழந்தையின் எதிர்காலத்தை கூட பாதிக்கும் என்று அம்மா எடுத்து சொன்னாலும் அவர் கேட்டதில்லை.

தங்கையின் மீது அப்பா வைத்திருந்த பாசம் ஒரு வயது வரையில் அவளுக்கு புரிந்தது பருவம் வந்து அறிவு வளரும் போது தகப்பனாரின் பாசமும் பரிவும் அவளுக்கு புரியாமல் போயிற்று அப்பாவின் பாசம் இடைஞ்சலாக கூட அவளுக்கு இருந்தது காரணம் தன்னோடு படிக்கும் ஒரு பையனோடு கொண்ட காதல். தங்கையின் காதல் முற்றி வெடித்த போது எனது தகப்பனார் அதிர்ந்தே விட்டார். இவளா? என் மகளா? காதலித்தாள்? இருக்கவே இருக்காது யாரோ என் மகளின் மனதை கெடுத்துவிட்டார்கள் என்று புலம்பினார். நடந்தது நடந்து விட்டது அவள் விரும்பிய பையனையே திருமணம் செய்து வைத்து விடுவோம் என்று நானும் அம்மாவும் சொன்னோம் அப்பாவும் தலையாட்டி விட்டார். அவள் படிப்பு முடியட்டும் கல்யாணத்தை நடத்துவோம் என்று கூறினார் இந்த விஷயம் என் தங்கைக்கும் தெரியும். திருமணம் முடியும் வரை அனாவசியமாக இருவரும் எங்கும் சுற்ற வேண்டாம் என்று அறிவுரையும் கூறினோம்.

ஆயிரம் அறிவுரைகள் கூறினாலும் இளம்வயது அதை கேட்பதில்லை ஒருநாள் இருவரும் சென்னைக்கு சென்று உல்லாசமாக இருக்கலாம் வருகிறாயா என காதலன் கேட்டிருக்கிறான் இவளும் பள்ளியில் தோழிகளோடு உல்லாச பிராயணம் போகிறோம் என்று வீட்டில் பொய் சொல்லி விட்டு அவனோடு கிளம்பி விட்டாள். போனவள் ஐந்து நாட்களாகியும் வரவில்லை இரண்டு நாளிலிருந்தே தேட ஆரம்பித்துவிட்டோம் பையனையும் பெண்ணையும் காணவில்லை என்ற விஷயம் ஊர் முழுவதும் பரவி விட்டது. வயதுக்கு வராத பெண் என்பதினால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம் ஆறாவது நாள் காவல் நிலையத்திற்கு வந்த தகவல் என் தங்கை பிணமாக ரயில் நிலையத்தில் கண்டெடுக்க பட்டாள் என்று அவளை தன்னோடு அழைத்து சென்ற அந்த பையன் தானும் அனுபவித்து தனது நண்பர்களுக்கும் அனுபவிக்க கொடுத்து எங்கள் குலவிளக்கை அனைத்து விட்டார்கள். விஷயம் தெரிந்தவுடன் மயங்கி விழுந்த எனது தந்தையார் நான்கு நாட்கள் நினைவு திரும்பாமலேயே இருந்து காலமாகி விட்டார்.

அதன் பிறகு அந்த ஊரில் வாழ்வதற்கான துணிச்சல் எனக்கு வரவில்லை மாமா ஒருவரின் தயவால் பெங்களூரில் வேலை ஒன்று பார்த்து கொண்டு அம்மாவையும் என்னோடு அழைத்து கொண்டேன். அப்போது என் மகள் பிறந்து இரண்டே மாதமே ஆகி இருந்தது இப்போது அவள் வளர்ந்து விட்டாள் தாத்தாவின் வீட்டை பற்றியும் அவர் ஊரில் வாழ்ந்த விதம் பற்றியும் என் மகளுக்கு கதையாக சொல்லி வளர்த்து வந்தேன் அவளும் தாத்தா வாழ்ந்த வீட்டை பார்க்க வேண்டும் என்று ஆசைபட்டாள் தன் மகளின் மீது குருட்டுதனமான் பாசம் என் அப்பா வைத்திருந்தது போல் நான் என் மகள் மீது வைக்கவில்லை என்றாலும் அவள் என் குழந்தை அவள் ஆசையை நிறைவேற்றுவது என் கடமை அதனால் கிராமத்தில் உள்ள வீட்டுக்கு அவளை அழைத்து செல்வது என்று முடிவு செய்தேன்.

தற்போது கிராமத்தில் உள்ள அந்த வீட்டில் யாரும் இல்லை என்றாலும் அங்கிருக்கும் என் அம்மாவின் தங்கை சின்னாமாவிடம் தினசரி வீட்டை சுத்தபடுத்தி விளக்கேற்றுமாறு சொல்லிவந்தேன் அவரும் அதை தட்டாமல் செய்து வந்தார். ஆரம்பத்தில் சில மாதங்கள்  என் சின்னம்மாவும் அவர்களின் மகனும் இரவு நேரம் அந்த வீட்டிலேயே தங்கி வந்தனர் பிறகு எதற்காகவோ அதை விட்டு விட்டனர் நானும் சின்னமாவுக்கு போன் செய்து என் மகளின் ஆசையை தெரிவித்து வீட்டிற்கு சிறிது சுண்ணாம்பு அடித்து வையுங்கள் பள்ளி விடுமுறையில் வருகிறோம் என்றேன் அப்போது என் சித்தி நீ மட்டும் வருவதாக இருந்தால் வா குழந்தையை அழைத்து கொண்டு வரவேண்டாம் என்று சொன்னார்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது எதற்காக குழந்தையை அழைத்து வரவேண்டாம் என்று கேட்டேன் நானும் என் மகனும் முன்பு இரண்டு மாதங்கள் உன் வீட்டில் தான் இரவு தங்கினோம் அப்போது எங்களுக்கு சரியாக உறக்கம் வராது நடு இரவில் யாரோ நடமாடுவது போன்ற உணர்வு தெரியும் காலடி சத்ததும் தொண்டை செருமும் சத்தமும் கேட்கும் தீடிரென்று கண்ணாடி வளையல் சத்தம் வரும் வளையல் சத்தம் வரும் போது மல்லிகை பூ வாசம் நன்றாக வீசும் எனக்கு அது பயமாக தெரியவில்லை என்றாலும் என் மகனுக்கு பயமாக இருந்தது அவன் அங்கு உறங்க வர மாட்டேன் என்று சொல்லிவிட்டான். நம் ஊர் அம்மன் கோவில் பூசாரியை அழைத்து வந்து காட்டிய போது அந்த வீட்டில் உன் தகப்பனாரும் தங்கையும் ஆவி வடிவில் வாழ்வதாக கூறினார். அதற்கு சில பரிகாரங்களை செய்தால் சரியாகி விடும் என்றும் சொன்னார். நானும் சம்மதித்து செய்தேன் ஆனால் எந்த பலனும் இல்லை தகப்பன் தங்கை இருவரையும் பறிகொடுத்து விட்டு இருக்கும் உன்னிடம் சொல்லி வீணாக வருத்தப்பட வைக்க வேண்டாம் என்பதற்காகவே உன்னிடம் இந்த தகவலை சொல்லவில்லை. இப்போது நீ குழந்தையோடு வந்தால் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு வந்து விடுமோ என்ற அச்சத்திலே சொல்கிறேன் என்று சித்தி காரணம் சொன்னார்.

அவர் சொன்னதை நான் நம்பவில்லை நான் விரும்பியபடியே சென்றவருடம் என் மகளையும் கூட்டி கொண்டு அம்மாவோடு பூர்வீக வீட்டிற்கு போனேன் பத்து நாட்களாவது தங்கவேண்டும் என்று போன நான் ஐந்தே நாளில் திரும்பி விட்டேன். காரணம் தங்கிய ஐந்து இரவுகளும் நாங்கள் அனுபவித்தது அப்படி. பகல் நேரமோ இரவு நேரமோ என்ற பேதம் கிடையாது தீடிரென்று விட்டிற்குள் சாமபிராணி வாசனை வீசும் கொலுசு சத்தம் தெளிவாக கேட்கும் நடு இரவில் ஆழமான பெருமூச்சி சத்தம் எங்கள் தூக்கத்தை கலைக்கும் சென்ற மறு நாளிருந்தே என் மகளுக்கு காச்சல் வந்துவிட்டது மாத்திரை ஊசி என்று வைத்தியம் பார்த்தும் நோய் குறையல்லை ஐந்தாவது நாள் இரவு என் மகள் உறக்கத்தில்ரிருந்து கத்தி கொண்டே எழும்பினாள் மஞ்சள் தாவணியும் நீலநிற பாவாடையும் அணிந்திருந்த ஒரு பெண் தன் கழுத்தை நெரிக்க வருவதாக பயத்தோடு கூறினாள் நான் உண்மையாகவே அதிர்ந்து விட்டேன் என் தங்கை இறப்பதற்கு முன் சென்னை செல்லும் அன்று இதே ஆடையை தான் அணிந்திருந்தாள் அதற்கு மேல் என் மனைவி அங்கே தங்க விரும்பவில்லை உடனடியாக புறப்பட்டு பெங்களூர் வந்து விட்டோம்.

எனது முன்னோர்கள் வாழ்ந்த அந்த வீட்டில் நானும் வாழ வேண்டும் எனது கடேசி மூச்சி அந்த வீட்டில் தான் போகவேண்டும் என்று விரும்புகிறேன் அதற்கு இந்த மாத்திரியான இடைஞ்சல்கள் இருந்தால் நிச்சயம் என் மனைவி சம்மதிக்க மாட்டாள். ஒருவரின் சந்தோசத்திற்காக ஒருவர் விட்டு கொடுப்பது என்பது குடும்ப வாழ்க்கைக்கு அழகு என்றாலும் இன்னொருவரை சிரமபடுத்துகிறோமே என்ற வருத்தம் நமக்கு இருக்கும் உள்ளுக்குள் வருத்தத்தை வைத்து கொண்டு வெளியில் சந்தோசமாக இருப்பது போல் நடிப்பது மிகபெரிய கொடுமை அந்த கொடுமை எனக்கு வேண்டாம் என்று நினைக்கிறேன் எனவே குருஜி அவர்கள் அந்த வீட்டில் நாங்கள் நலமோடு வாழ்வதற்கு எதவாது வழிமுறை இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள் நீங்கள் கூறும் பரிகாரம் என் மனதிற்கு மருந்தாக அமையும்.
அன்புடன் துரைராஜ்
பெங்களூர்
     ங்கள் நீண்ட கடிதமே படிப்பதற்கு ஆர்வத்தை தூண்டுவாதாக இருக்கிறது எனவே இது குறித்த விளக்கங்கள் அதிகம் சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். இருந்தாலும் ஒரு மனிதனின் உயிர் உடம்பை விட்டு சென்று விட்டாலும் அது தான் விருப்பத்தோடு வாழ்ந்த பகுதிகளில் சில காலம் சுற்றி திரியும் என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன். உங்களது தந்தையார் மற்றும் தங்கையின் ஆவி நிறைவேறாத பல ஆசைகளோடு இருப்பதை அறிய முடிகிறது. மேலும் நீங்கள் அவர்கள் ஆத்மாவிற்க்காக செய்த சாந்திகள் போதாது என்று நினைக்கிறேன் எனவே ராமேஸ்வரம் அல்லது காசி சென்று மூன்று தலைமுறையினருக்கும் முறைப்படியான தர்ப்பணம் செய்யுங்கள் அதன் பிறகு அந்த வீட்டில் ஆவிகள் தொல்லை குறைந்து விடும். நீங்கள் குடியேறுவதற்கு முன்பாக கணபதி ஹோமம் சண்டி ஹோமம் போன்றவைகளை கண்டிப்பாக செய்யவும். எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

Next Post Next Post Home
 
Back to Top