Store
  Store
  Store
  Store
  Store
  Store

பாவமன்னிப்பு வேண்டாமா ?




   ருவன் அறியாமல் தவறு செய்கின்ற போது அவனை தண்டிப்பதை விட்டு விட்டு மன்னிப்பது தானே உயர்ந்த குணம் உங்கள் இந்து மதத்தில் பாவத்திற்கு கிடையாது என்று சொல்வது எந்த வகையில் சரியாகும்?

நெல்சன் 
திருச்சி 





   வறு என்பதற்கும் தப்பு என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது சரியா தவறா என்பதை அறியாமல் தவறுதலாக செய்வது தவறு. அதே நேரம் இது தவறு என்பதை அறிந்தே வேண்டுமென்றே ஆசை வயபட்டோ கோபம் கொண்டோ திட்டமிட்டோ செய்வது தப்பு. இந்த தப்பை மன்னித்தோம் என்று சொன்னால் அதை செய்தவன் திருந்த மாட்டான். மற்றவனும் அவனை போல் நாமும் செய்யலாமே என்று நினைப்பானே தவிர உணர்ந்து நடக்கமாட்டான். எனவே தண்டனை என்பது பல விஷயங்களுக்கு அவசியமானதாக இருக்கிறது.

தொடர்ந்து திருடுவதையே தொழிலாக கொண்ட ஒருவன் அதற்கான பாவ மன்னிப்பை பெற்ற பிறகும் திருடாமல் இருந்தால் பரவாயில்லை நேற்று செய்த பாவத்திற்கு மன்னிப்பு பெற்றாகி விட்டது நாளை செய்கின்ற பாவத்திற்கும் மன்னிப்பு பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் பாவங்களை செய்து கொண்டே போகின்றவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள்.

தப்பு செய்தால் தண்டனை உண்டு அந்த தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும் மீண்டும் தண்டனைக்கு ஆட்படாமல் இருக்க வேண்டுமானால் தவறுகளை தொடர கூடாது என்ற எண்ணம் வந்தால் மட்டுமே ஒருவனால் திருந்த முடியும். மேலும் எந்த ஒரு செயலுக்கும் எதிர் செயல் உண்டு என்பதே இந்து மதத்தில் உள்ள கர்ம கொள்கை ஆகும். சென்ற பிறவியில் செய்த பாவத்திற்கும் இந்த பிறவியில் செய்கின்ற பாவத்திற்கும் தண்டனையை அனுபவித்தால் மட்டுமே ஆத்ம சுத்தி கிடைக்கும் என்பது இந்துமத நம்பிக்கை மட்டுமல்ல நாம் அன்றாடம் பெறுகின்ற அனுபவமாகவும் இருக்கிறது.

தங்கத்தில் இருக்கின்ற கசடுகளை நீக்கினால் மட்டுமே ஆபரணம் செய்கின்ற பொன் கிடைக்கும். நமது வாழ்வில் கசடுகள் என்ற பாவங்கள் நிறையவே உண்டு அவைகளை நீக்கும் போது புண்னை சுத்தம் செய்தால் கிடைக்கின்ற வலியை போல வேதனை கிடைக்கவே செய்யும். வலி இருக்கிறது என்பதற்காக புண்னை அப்படியே விட்டு விட்டால் நிலமை விபரீதமாகி விடும். மனிதாபிமானம் பார்ப்பது என்பது வேறு மனிதனாக வாழ முயற்சிப்பது என்பது வேறு.

குற்றங்கள் மற்றும் சட்ட விரோத செயல்கள் மற்ற நாடுகளை விட நம் நாட்டில் குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணமே தப்பு செய்தால் தண்டனை உண்டு என்ற நம்பிக்கையே ஆகும். எந்த தப்பு செய்தாலும் மன்னிப்பு வாங்கி விடலாம் அதை ஒருமுறை அல்ல பலமுறையும் வாங்கலாம் என்று சுதந்திரம்  கொடுத்தால் மனிதனின் ஒழுக்க நெறிமுறைகள் சீர் குலைந்துவிடும். எனவே தான் இந்துமதம் பாவ மன்னிப்பை பற்றி பேசவில்லை.


Contact Form

Name

Email *

Message *