Store
  Store
  Store
  Store
  Store
  Store

மாணவர்கள் போராடலாமா?


அரசியல் காரணங்களுக்காக நாட்டு நடப்புகளுக்காக மாணவர்கள் தங்களது படிப்பை நிறுத்தி வைத்து விட்டு போராட்டங்களில் ஈடுபடுவது சரியான செயலா? 

    ர்மத்திற்காக யுத்தம் நடத்துவதற்கு வயது வரம்பு ஏதும் கிடையாது தளிர்நடை பழகும் காலம் முதற்கொண்டு தண்டூன்றி நடக்கும் காலம் வரையிலும் போராடலாம் இதில் மாணவ பருவத்தை மட்டும் விதிவிலக்காக கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் மற்ற பருவத்தினரை விட மாணவ பருவத்தினருக்கு பொறுப்புகள் அதிகம். இப்படி நான் சொல்வது விந்தையாக இருக்கலாம் பள்ளிக்கூடம் போக வேண்டும் படிக்க வேண்டும் இவற்றை தவிர சம்சாரிகளை போல் தொழில் செய்ய வேண்டும் மனைவி மக்களை காப்பாற்ற வேண்டும் உற்றார் உறவினர்களுக்கு செய்யவேண்டியதை செய்ய வேண்டும் சமூகத்தில் ஆற்ற வேண்டிய கடமையும் நடத்த வேண்டும் இப்படி ஆயிரம் சுமைகள் இருக்கிறது. அதனால் மாணவர்களுக்கு மற்றவர்களை விட பொறுப்பு அதிகமென்று நான் கூறுவது தவருதலானதோ என்று எண்ணத்தோன்றும்.

குடும்பம் என்றால் என்ன அதில் வரும் சிக்கல் என்றால் என்ன அதிலிருந்து விடிவித்து கொள்வது எப்படி என்றெல்லாம் கற்று கொள்ளவேண்டிய பருவம் மாணவ பருவம். இதை இந்த வயதில் கற்காமல் காலம் கடந்த பிறகு கற்றால் சம்சாரிகளின் கடமைகளை ஒன்றை கூட உருப்படியாக செய்ய முடியாது. அதே போல இந்த நாடு எப்படி இருக்கிறது இதன் பிரச்சனைகள் என்ன இதனால் மக்கள் அடையும் இடர்பாடுகள் என்பது என்ன என்பதையும் அவன் இப்போதே தெரிந்து கொண்டால் தான் நாளைய சமூதாயத்திற்கு வழிகாட்ட முடியும். அகமும் புறமுமான இந்த இரும்பெரும் கடமைகளை கற்றுகொள்ளுகின்ற அதே நேரத்தில் தன்னை தனது அறிவை தனது ஆளுமையை தனது வாழ்க்கையை உயர்த்தி கொள்ளவும் அவன் பாடுபட வேண்டும். அதனால் தான் மாணவ பருவத்திற்கு பொறுப்புகள் அதிகமென்று சொல்கிறேன்.

இந்த வகையில் சிந்திக்கும் போது படிப்பை விட்டுவிட்டு போராட்டங்கள் கொள்கைகள் என்று தெருவில் இறங்குவது மாணவர்களுக்கு தேவையில்லாதது என்றே பொறுப்போடு சொல்லவேண்டும். ஆனால் அப்படி  சொன்னால் அது முழுமையான சுயநலத்திற்கு அச்சாரம் போடுவது போல் ஆகிவிடும். மெளனமாக இருக்க வேண்டிய நேரம் என்று ஒன்று உண்டு சத்தம் போட வேண்டிய நேரமும் உண்டு வலி தன்னையும் தன் சகோதரனையும் தாக்கும் போது அதை வெளிபடுத்துவதற்கு முணங்குவது கூட தவறு என்றால் அது சர்வதிகாரம் எனவே மாணவர்கள் தேவையான நேர்மையான போராட்டங்களில் ஈடுபடுவது தவறு அல்ல. அது அவர்கள் கடமையும் ஆகும்.




பல மாணவ போராட்டங்கள் அரசியல்வாதிகளின் சுயநலத்திற்காகவும் வேறு சில குறுகிய  நோக்கங்களுக்க்காகவும் தூண்டிவிட படுகிறதே போராட்டம் என்ற போர்வையில் மாணவர்கள் களமிறக்க பட்டு பலிக்கிடாக்கள் ஆக்கபடுகிறார்களே அதை எப்படி ஏற்றுகொள்ள முடியும்? 


     சில அரசியல்வாதிகளின் சில அரசியல் கட்சிகளின் சுயநல போராட்டங்கள் உரிமை போராட்டம் கொள்கை போராட்டம் என்ற வகையில் பிரபல படுத்தப்பட்டு மக்கள் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக பல நேரங்களில் மாணவ சமூதாயம் பலிகொடுக்க படுவதை நான் ஒத்து கொள்கிறேன். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்கள் கலந்து கொண்டு உணர்ச்சி வேகமாக போராடியதை இந்த வகையில் சேர்க்கலாம். தனிப்பட்ட ஒரு கட்சி வளர்ச்சிக்காகவே இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது  உண்மையில் தமிழர்களையும் தமிழையும் வளர்ப்பதற்காக நடந்தது அல்ல தமிழை வைத்திருக்கின்ற நிலையில் ஆங்கிலத்தை கொண்டுவந்து வைத்து வடக்கிற்கும் தெற்கிற்கும் நிரந்தரமான பிளவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு நடந்த போராட்டமது. அதில் கலந்து கொண்ட மாணவர்கள் பலர் வருங்கலத்தில் ஏமாற்றத்தை அனுபவித்ததை தலைவர்களின் நேரடி பார்வையில் அகப்பட்ட சிலர் தலைவர்களை போலவே சுயநலத்தில் முற்றி வெடித்து போனதையும் நாம் நன்றாக அறிவோம்.

அதற்காக மகாத்மா காந்தி சுதந்திர போராட்டத்திற்காக மாணவர்களை அழைத்ததை தவறு என்று சொல்ல இயலாது. அடிமைப்பட்ட ஒரு நாட்டில் கல்வி கற்பது என்பது ஆளும் வர்க்கத்தினரை அடிவருட உதவுமே தவிர சுயமாக எழுந்து நிற்க எந்த வகையிலும் உதாவாது. ஆனாலும் மாணவர்களுக்கு அவர்கள் வயதிற்கு ஏற்றபடி  நல்லது கெட்டதை தீர்மானிப்பதில் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. எனவே அவர்களை கல்வியில் வழி நடத்துகிற ஆசிரியர்கள் அவசியம் மற்றும் ஆனாவசியத்தை உணர்ந்து மாணவர்களின் பொது சேவையை ஊக்குவிக்க வேண்டிய கடமையை செய்ய வேண்டும். அதாவது தலைவர்கள் மாணவர்களை கையகபடுத்துவதை தவிர்த்து நேர்மையான முறையில் ஆசிரியர்கள் வழிகாட்டினால் மாணவர் போராட்டங்கள் மிக சிறந்த தீர்வுகளாகவே அமையும்.


Contact Form

Name

Email *

Message *