( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

எது நல்ல பவளம் ?
      குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம். எனது ஜாதகப்படி பவளம் அணிந்தால் நல்லது என்று சொல்கிறார்கள் குறிப்பாக போலியான பவளங்களை அணியக்கூடாது என்றும் கூறுகிறார்கள். நல்ல பவளத்தை தேர்ந்தெடுப்பது எப்படி என்று கூற இயலுமா? நீங்கள் கூறினால் நிறைய பேருக்கு பயனுடையதாக இருக்கும்.


 இப்படிக்கு 
காசிலிங்கம் 
அமெரிக்கா 
       வரத்தினங்களை பணம் கொடுத்து வாங்குவதை விட நிஜமானவற்றை தேர்ந்தெடுத்து வாங்குவது மிகப்பெரிய கடினமான காரியம். ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து நுணுக்கமாக பரிசோதனை செய்து வாங்க வேண்டும். தவறுதலானதை வாங்கினால் பலன் கிடைக்காது என்பதை விட விபரீதமான பலன்கள் ஏற்படும் என்பதே நிஜம்.


இரத்தினங்களை பரிசோதிக்கும் முறைகளை தெளிவாக “ஜோதிடப்பரிகாரங்கள்” என்ற என் நூலில் எழுதியிருக்கிறேன் தேவைப்படுபவர்கள் அதை பார்த்து படித்து அறிந்து கொள்ளலாம். இருந்தாலும் இந்த நண்பர் பவளத்தை மட்டும் பரிசோதிப்பது எப்படி என்று கேட்பதனால் அவர் அயல்நாட்டில் இருப்பதனாலும் சரியான விளக்கத்தை கொடுக்க வேண்டியது கடமை என்று நினைக்கிறேன்.

நிஜமான பவளத்தை பசும்பாலில் போட்டால் பால் சிவப்பாக மாறிவிடும். இன்றைய நிலையில் பவளம் கூட  நல்லதாககிடைத்துவிடும் கலப்படம் இல்லாத பால் கிடைப்பது தான் அரிதாக இருக்கிறது. எனவே இந்த பரிசோதனை முறை எல்லா நேரத்திலும் சரிவராது. கையில் தூக்கி பார்த்தால் நிஜ பவளம் எடை குறைவாக தெரியும் போலி பவளம் அதிகமான எடையோடு தெரியும். மேலும் ஊசி வைத்து துளை போட்டால் நடுப்பாகத்தில் மட்டுமே ஓட்டை விழும். இவைகளை கொண்டு பரிசோதனை செய்தாலே போதுமானது என்று நினைக்கிறேன்.
+ comments + 2 comments

Prabu
06:52

ஆகா! அருமை! இன்றைக்குதான் எப்படி பவளம் வாங்குவது என்று கற்றுக்கொண்டேன்!! பவளம் வாங்கும் பொழுதுக்கூட, அதை நுணுக்கமாக பார்த்து அதை சோதனை செய்து வாங்க வேண்டும் என்பதை நான் அறிந்தேன்.அதுமட்டுமள்ளாமல், உன்மையான பவளத்தை பாலில் இட்டால் பால் சிவப்பாகிவிடும் என்றையும் நான் ஆறிநத்துக்கொண்டேன். நன்றி

Prabu
06:53

ஆகா! அருமை! இன்றைக்குதான் எப்படி பவளம் வாங்குவது என்று கற்றுக்கொண்டேன்!! பவளம் வாங்கும் பொழுதுக்கூட, அதை நுணுக்கமாக பார்த்து அதை சோதனை செய்து வாங்க வேண்டும் என்பதை நான் அறிந்தேன்.அதுமட்டுமள்ளாமல், உன்மையான பவளத்தை பாலில் இட்டால் பால் சிவப்பாகிவிடும் என்றையும் நான் ஆறிநத்துக்கொண்டேன். நன்றி


Next Post Next Post Home
 
Back to Top