Store
  Store
  Store
  Store
  Store
  Store

ருது ஜாதகம் பார்ப்பது சரியா?



       குருஜி அவர்களுக்கு வணக்கம் என் மகளுக்கு இருபது வயதாகிறது அவளுக்கு வரன் பார்க்கும் இடங்களில் எல்லாம் ஜாதகம் கேட்கிறார்கள் சில சூழ்நிலைகளால் அவளின் பிறந்த தேதி சரியாக தெரியாததனால் ஜாதகம் எழுத முடியவில்லை. ஆனால் அவள் ருதுவான ஜாதக குறிப்பு எங்களிடம் இருக்கிறது. ஜாதகம் கேட்கும் பையன் வீட்டாருக்கு ருது ஜாதகத்தை கொடுக்கலாமா? ருது ஜாதகத்தை வைத்து திருமண பொருத்தம் பார்க்கலாமா?
இப்படிக்கு 
பழனியப்பன் 
கும்பகோணம் 



    ணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஜனன மரணம் என்பது இருவருக்கும் பொதுவானது ஒருவருடைய வாழ்க்கையின் நிலையை அறிந்து கொள்ள அவரின் பிறப்பு ஜாதகத்தையே பயன்படுத்த வேண்டுமென்று நமது ஜோதிட ஆசான்கள் சொல்லியிருக்கிறார்கள். காரணம் பிறக்கின்ற போது இருக்கின்ற கிரகநிளைகளை அடிப்படையாக கொண்டே லாப நஷ்டங்களை துல்லியமாக கணிக்க முடியும். 

ஒருசிலர் என்னிடம் சொல்கிறார்கள் ஒரு பெண் வயதுக்கு வருவது என்பதே பெண்மையின் பிறப்பு எனவே அதை அடிப்படையாகவும் வைத்து பலன்களை அறிய முடியும் என்கிறார்கள். அந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. சிறுவனாக இருந்தாலும் சிறுமியாக இருந்தாலும் வயதுக்கு வருவது என்பது இருவருக்குமே பொதுவான உடல் வளர்ச்சியாகும். இதில் பெண்களின் நிலை உதிர போக்கால் வெளிப்படையாக தெரிகிறது ஆண்களுக்கு அப்படி தெரிவதில்லை. அவ்வளவு தான் வித்தியாசம். 

இருந்தாலும் பெண்கள் வயதுக்கு வரும் நேரம் நட்சத்திரம் இவைகளை வைத்து சில ஜோதிட பலன்கள் சொல்லபட்டிருக்கின்றது. உதாரணமாக அஷ்வினி, ரோகினி, அஸ்தம் இந்த நட்ச்சத்திர நேரங்களை வயதுக்கு வரும் பெண்கள் வீட்டுக்கு வெளியே ருது ஆவார்கள் என்ற பலன் இருக்கிறது. இந்த காலத்தில் இந்த பலனை துல்லியமானது என்று கூற முடியாது. காரணம் தற்கால சிறுமிகள் வீட்டில் கழிக்கின்ற நேரத்தை விட வெளியில் செலவிடுகிற நேரமே அதிகம். பள்ளி படிப்பு தனிபயிற்சி என்று நிறைய வேலைகள் அவர்களுக்கு வெளியில் இருக்கிறது. எனவே ருது ஜாதகத்தை மையமாக கொள்வது எந்த வகையிலும் சரிவராது. 

மேலும் ருது நேரத்தை வைத்து ஒரு பெண்ணின் பெண்மை தன்மை பேசபடுகிறது. என் அனுபவத்தை பொருத்தவரையிலும் அதுவும் சரியாக இல்லை என்றே தோன்றுகிறது. ஒரு பெண்ணின் குண நலன்களை கணிப்பதில் பிறப்பு ஜாதகமே பல நேரங்களில் சரியாக இருய்க்கிறது. இதை விட கொடுமை சிலர் ருது ஜாதகத்தை வைத்து கொண்டு அவளுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறது நாக தோஷம் இருக்கிறது என்றும் சொல்லி விடுகிறார்கள். பிறப்பு ஜாதகத்தை வைத்தே இந்த தோஷங்களை வரையறை செய்வதில் பல வகைகள் இருக்கும் போது ருது ஜாதகத்தை வைத்து சொல்வது என்பது எந்த வகையிலும் சரியாக இருக்காது.

எனவே பிறந்த ஜாதகம் இல்லை என்றால் அது இல்லை என்று வெளிப்படையாக சொல்லி விடுவதே சாலசிறந்தது ஆகும். அதை விட்டு விட்டு மற்ற ஜாதகங்களை கொடுப்பது முற்றிலும் மாறுபட்ட பலன்களை தரும்.

Contact Form

Name

Email *

Message *