( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

எட்டாமிடம் தீமை செய்யுமா?   ரு ஜாதகத்தில் எட்டாம் இடத்திற்குறிய கிரகத்தின் திசை காலம் வரும் போது சோதனைகள் அதிகமாக இருக்கும் என்று சொல்கிறார்களே அது நிஜமா? அப்படி வரும் காலத்தில் கஷ்டங்களை குறைத்து கொள்வதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? 

மரகதமீனா 
வந்தவாசி 

    ட்டாம் இடத்தை ஆயுள் பாவம் என்று அழைப்பதால் அது மரணத்தோடு சம்மந்தபட்டது என்று பலர் நினைக்கிறார்கள் அத்தோடு எட்டாமிடம் மறைவு ஸ்தானம் என்பதாலும் சிலர் அச்சமடைகிறார்கள் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் இத்தகைய பயம் தேவையில்லை என்பதே எனது கருத்து. உதாரணமாக எட்டாமிடத்துக்குறிய கிரகம் உச்சம் மற்றும் ஆட்சி பெற்றதாக இருந்தால் அதன் திசைகாலம் எப்படி தீமையை செய்யும்? கட்டாயம் செய்யாது. எந்த இடத்திற்குறிய திசை நடக்கிறது என்பது முக்கியம் அல்ல நமது ஜாதகத்தில் எந்த தன்மையில் உள்ள கிரகத்தில் திசை நடக்கிறது என்பதே முக்கியம்.  

எனவே எட்டாமிடத்து திசையை பற்றிய பயமோ அதற்கான பரிகாரங்களோ தேவையில்லை என்பது எனது கருத்து. இருந்தாலும் அதை எண்ணி அச்சப்படுபவர்கள் எட்டாவதாக பிறந்து எட்டு திக்கையும் தனது அருள்வெள்ளத்தால் இன்றும் ஈரமாக்கி கொண்டிருக்கின்ற ஸ்ரீ கிருஷ்ண பகவானை மனதார வழிபட்டு நெஞ்சார நினைத்து வந்தாலே சகல சம்பத்தும் கிடைத்து வாழ்வில் சுகங்கள் மட்டுமே பெற்று வாழ்வார்கள்.Next Post Next Post Home
 
Back to Top