( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

இராணுவத்தில் பணிபுரிபவர் ஜாதகம்   ராசிகளின் உருவங்களுக்கான விளக்கங்களை ஓரளவு தெளிவாக நான் எழுதியதை படித்து விட்டு இதை போலவே எளிமையான முறையில் ஒவ்வொரு ராசிக்கான தொழில்கள் என்னவென்று எழுதினால் நன்றாக இருக்கும் என சில வாசகர்கள் கருத்து கூறினார்கள் அவர்கள் கேட்பது ஒருவிதத்தில் சரியென்று சொன்னாலும் நேற்றுவரையில் அதைபற்றி எழுதுவதற்கு எனக்கு அக்கறை வரவில்லை காரணம் நிறையப்பேர் அதற்கான விளக்கங்களை சொல்லி இருக்கிறார்கள் ஜோதிட நூல்களில் பட்டியல் போட்டே காட்டி இருக்கிறார்கள் இந்த நிலையில் நாமும் அதை விளக்கினால் மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தை பேசுவது போல இருக்குமென்று நினைத்திருந்தேன் 

ஆனால் இன்று மதியம் எனக்கு வந்த தொலைபேசி அழைப்பு ஒன்று எனது அந்த மன நிலையை மாற்றி விட்டது.  ஆப்ரிக்க நாடு ஒன்றிலிருந்து ஒரு அன்பர் பேசினார் சுரங்க தொழில் செய்வதில் எனக்கு ஆர்வம் இருந்தது அதனால் இந்த நாட்டில் சுரங்கம் ஒன்றை ஏலம் எடுத்து பலகோடி ரூபாய் முதலீடு செய்து நடத்தினேன் ஆரம்பத்தில் நன்றாக நடந்த அந்த தொழில் படிப்படியாக குறைந்து கடைசியாக கடன்காரனாக்கி நடுத்தெருவில் என்னை கொண்டுவந்து விட்டு விட்டது தொழில் துவங்குவதற்கு முன்பு ஜோதிடர் ஒருவரிடம் கேட்டேன் அவர் உனக்கு இந்த தொழில் ஆகாது என்று எச்சரித்தார் அதையும் மீறிதான் தொழிலை துவங்கினேன் முடிவில் படுதோல்வி அடைந்துவிட்டேன் என்று வருத்தப்பட்டு கூறினார். அவரை போல எத்தனையோ நபர்கள் தனக்கு ஏற்ற தொழில் எதுவென்று தெரியாமல் தவறான இடத்தில் முதலீடு செய்து தடுமாறுவார்கள் என்பதை உணர்ந்து நம்மால் முடிந்த வரையில் விளக்கம் சொல்லி வழிகாட்டலாம் என்று எண்ணம் தோன்றியதனால் ராசிகளுக்கான தொழில்களை பற்றி எழுத துவங்குகிறேன். 

பொதுவாக ஒருவர் ஜாதகத்தில் பத்தாம் இடத்தை தொழில் அமைப்பு என்று கூறுகிறோம் அந்த பத்தாவது ராசியின் அதிபதியின் நிலையை கருத்தில் கொண்டும் பத்தாமிடத்தில் எந்த கிரகரம் இருக்கிறதோ அதை கருத்தில் கொண்டும் இன்னாருக்கு இன்ன தொழிலென்று வரையறை செய்வது ஜோதிடப்படி வழக்கம் அந்த மரபை கருத்தில் கொண்டுதான் ஒருவரின் தொழிலை தீர்மானிக்க வேண்டும் என்றாலும் பத்தாமிடத்தின் ராசி எது என பார்த்து அதற்குறிய தொழில்களை அறிந்து கொள்வது பொதுவான விஷயமாகும். எனவே இங்கு நான் எழுத போவது பொதுபடையான கருத்துக்களே தவிர ஒரு தனிமனிதனை கருத்தில் கொண்டு எழுதவில்லை தனிமனிதன் தனது தொழிலை தீர்மானம் செய்வதற்கு இந்த தகவல்கள் ஓரளவு உதவுமே தவிர முற்றாக முடிவாக கொள்ளக் கூடாது என்பதையும் மனதில் வைக்க வேண்டும். 

ஒருவர் கடக ராசியை லக்கினமாக கொண்டு பிறந்தால் அவருக்கு பத்தாமிடம் மேஷராசி தொழில் அமைப்பை காட்டுகிற ராசியாக இருக்கும் மேஷ ராசி என்பது ராசி சக்கரத்தில் வருகிற முதலாவது ராசி ஆகும். எனவே ஒருவரின் ஜாதகப்படி மேஷ ராசி தொழில் ஸ்தானமாக அமைந்தால் அவனுக்கு அரசு உத்தியோகம் காவல் மற்றும் இராணுவ துறையில் வேலை, பொறியல்துறை, இரும்பு மற்றும் நெருப்பு சம்மந்தப்பட்ட வேலை, சுரங்க தொழில், அறுவை சிகிச்சை மருத்துவராக பணி புரிதல், மண்பாண்டங்கள் பாத்திரங்கள் உற்பத்தி செய்தல் விற்பனை செய்தல் செங்கல் சூளை நடத்துதல் போன்ற தொழில் சிறப்பாக அமையும். இரண்டாம் பட்சமாக சமையல் வேலை, விவசாயம் போன்றவைகளும் செய்யலாம் இந்த இராசியை பத்தாமிடமாக கொண்ட சிலர் நிலத்தரகு தொழிலையும் சிறப்பொடு செய்கிறார்கள்.

அடுத்த பதிவில் ரிஷப ராசியை ஆராய்வோம்

Next Post Next Post Home
 
Back to Top