( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

இறந்தவனை மீனுக்கு போடு !


       ஜோதிட சக்கரத்தில் பனிரெண்டாவதாக வருகின்ற ராசி மீனம் இந்த பனிரெண்டாவது இடம் விரையஸ்தானம் என்றும் அழைக்கபடுகிறது. மச்சம் என்று அழைக்கபடுகின்ற மீன் வடிவத்தை ராசியின் சின்னமாக கொடுத்து மீனம் என்ற பெயரில் இந்த ராசி சுட்டிக்காட்ட படுவதற்கு மற்ற ராசி சின்னங்களின் அர்த்தத்தை போலவே இதற்கும் ஆழமான பொருள் இருக்கிறது. 

உங்களுக்கு தெரியும் ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்ற பழமொழி இதன் பொருள் புண்ணியங்கள் பெறுவதற்கான தானாம் செய்தால் கூட நமக்கு தேவையில்லாமல் இருக்கின்ற பொருள்களை மற்றவர்களுக்கு இலவசமாக தூக்கி கொடுத்தாலும் அளந்து அளவோடு கொடுக்க வேண்டும் என்பதாகும். அளவறிந்து செலவு செய் என்பதை கூட ஆற்றை உதாரணமாக எடுத்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி நம்மில் சிலருக்கு வரலாம்? 

ஆற்றில் ஓடுவது தண்ணீர் இந்த தண்ணீர் இருக்கிறதே இதனுடைய இயல்பு பள்ளத்தை நோக்கி ஓடிகொண்டே இருப்பது. இப்படி ஓடி ஓடி கடேசியில் ஒரு சொட்டு கூட தேவைப்பட்டவர்களுக்கு கிடைக்காமல் மண்ணுக்குள் சென்று மறைந்து விடும். தண்ணீரை போன்றது தான் மனிதனுடைய செல்வம் அவனது ஆசை என்ற பள்ளத்தை நோக்கி பணம் என்ற தண்ணீர் ஓடிகொண்டே இருக்கும். அதை விழிப்புணர்வோடு கட்டுபடுத்தவில்லை என்றால் ஒருநாள் அவன் எவ்வளவு பெரிய சக்கரவர்த்தியாக இருந்தாலும் நடுத்தெருவில் நிறுத்தி விடும். எனவே செலவு விரையம் என்பதை காட்டுவதற்கே தண்ணீர் என்ற பதத்தை நமது முன்னோர்கள் பயன்படுத்தினார்கள்.

தண்ணீரை ஒரு உருவகத்தின் மூலம் எடுத்து காட்ட வேண்டுமென்றால் அதற்கென்று சரியான அனைவராலும் புரிந்து கொள்ள கூடிய ஒரு அடையாளம் வேண்டும். அந்த அடையாளம் தான் மீன் தண்ணீரில் மீன் மட்டுமா வாழ்கிறது? நண்டு, நத்தை, தவளை போன்று இன்னும் எவ்வளவோ உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றை அடையாளமாக காட்டாமல் மீனை மட்டும் தனியாக எடுத்து காட்ட வேண்டிய அவசியம் என்ன? என்று நமக்கு தோன்றும். 

பழங்கால இலக்கியங்களிலும் சரி தற்கால நவீன இலக்கியங்களிலும் சரி பெண்களின் கண்களை மீனோடு ஒப்பிடுவார்கள். காதல் வசபட்ட ஆண்களை மாதர்களின் விழிகள் கொல்லாமல் கொல்லும் என்பது இலக்கிய விதி. காதலியின் கண்கள் மயக்குவது போலவே அந்நிய மாதர்களின் விழிகளும் மயக்கினால் அந்த மயக்கத்தில் விழுந்து விட்டால் ஒரு மனிதனின் செல்வமும் செல்வாக்கும் தண்ணீரை போலவே கரைந்து மறைந்து விடும். மண்ணாலும் பெண்ணாலும் கெட்டவர்கள் மிக அதிகம் எனவே காம மயக்கத்தை தருகின்ற விழிகளை போலவே மீன்களும் இருப்பதனால் விரையஸ்தானத்திற்கு மீன் வடிவம் கொடுக்கப்பட்டது. 

இதுமட்டும் அல்ல பனிரெண்டாம் இடத்தை மரணஸ்தானம் என்றும் அழைப்பது வழக்கம். அந்த காலத்தில் இறந்து போனவர்களின் உடல்களை ஆற்றில் வீசி எறிவது பழக்கமாக இருந்திருக்கிறது. அந்த வழக்கத்தின் நவீன வடிவமே இறந்த மனிதர்களின் சாம்பலை ஆற்றிலோ கடலிலோ கரைப்பது இன்றுவரையிலும் தொடர்ந்து வருகிறது. எனவே மரணத்தை குறிப்பதற்காகவும் தண்ணீரின் உருவகமாக மீன்கள் அடையாளபடுத்த பட்டு இருக்கிறது. ஒருவகையில் மரணம் என்பதும் விரையம் என்பதும்  ஒன்றே என்று நமக்கு காட்டவே மீன ராசியின் மீன் வடிவம் திகழ்கிறது.

+ comments + 3 comments

நல்ல விளக்கம் . நன்றி அய்யா

Really it is good & believable.

Really it is believable.. Thank you so much for this explanation.


Next Post Next Post Home
 
Back to Top