Store
  Store
  Store
  Store
  Store
  Store

உள்நாட்டு திருமண பரிகாரம்
     குருஜி அவர்களுக்கு வணக்கம் நீங்கள் பாதிக்கப்பட்ட அனைவரையும் சமமான நோக்கத்தோடு மட்டுமே பார்ப்பீர்கள் என்ற எண்ணத்தில் நான் இருந்தேன் ஆனால் நான் நினைத்ததற்கு நேர் மாறாக உங்களது செயல் இருக்கிறது திருமணம் தள்ளி போகிறவர்களுக்கு எளிய முறையில் பரிகாரம் சொன்ன நீங்கள் அதை எல்லோருக்குமானதாக சொல்லியிருக்கலாம். அதை விட்டு விட்டு அயல்நாட்டில் வாழ்பவர்களுக்காக மட்டும் பரிகாரம் சொல்லியிருக்கிறீர்கள் அயல் நாட்டில் வாழ்பவர்கள் மட்டும் தங்க தட்டில் சாப்பிடுபவர்கள் உள்நாட்டில் வாழ்பவர்கள் பித்தளை தட்டில் சாப்பிடுபவர்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லது வெளிநாட்டு வாசகர் மட்டுமே நமது இணையதளத்தை படிக்கிறார்கள் தாய்நாட்டு மக்கள் படிக்கவில்லை என்று முடிவு கட்டி விட்டீர்களா? உங்கள் எழுத்தை நேசிப்பவர்களில் பலர் இந்த நாட்டு வாசகர்களே என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். எனவே எனது இந்த கடிதத்தை புறக்கணிக்காமல் உடனடியாக உள்நாட்டில் வாழ்பவர்களுக்கான பரிகாரங்களை சொல்லுங்கள் உங்கள் மீது நாங்கள் கொண்டுள்ள அதிகபடியான உரிமையால் இப்படி கேட்கிறேன் அதற்காக தயவு செய்து மன்னித்து விடுங்கள்.
இப்படிக்கு 
மைதிலி
சென்னை         ங்களது கோபமான வரிகளில் உள்ள உள்நாட்டில் வாழ்பவர்கள் பித்தளை தட்டில் உணவு அருந்துபவர்களா? என்று நீங்கள் கேட்டிருக்கும் வாசகம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது காரணம் அந்த வார்த்தை என்னை பழைய நினைவுகளில் ஆழ்த்திவிட்டது. என் பாட்டி வீட்டில் வெண்கல கும்பாவில் சூடான சாதத்தை வைத்து ஆவிபறக்கும் பருப்பு சாம்பாரை ஊற்றி அவசரப்பட்டு சாதத்தில் விரலை வைத்து சுட்டு கொண்ட அந்த ஞாபகம் மீண்டும் வந்துவிட்டது. ஒரு காலத்தில் நம் தமிழ் நாட்டில் உணவு பரிமாறும் பாத்திரங்களும் உணவருந்தும் பாத்திரங்களும் வெண்கலம் மற்றும் பித்தளையிலேயே இருக்கும் ஓட்டல்களில் கூட பித்தளை வாளியும் கரண்டியும் கொண்டு பரிமாறும் அழகே தனியழகு என்று எவர்சில்வர் என்ற உலோகம் நடைமுறைக்கு வந்ததோ அன்றே உணவு பரிமாறுவதில் உள்ள அழகும் சுவையும் போய்விட்டது என்றே சொல்லலாம். 

இப்போது விஷயத்திற்கு வருவோம் இங்கு இருப்பவர்களுக்கு சொல்லாமல் விட்டு விட்டு வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமான பரிகாரத்தை ஏன் நான் சொன்னேன் என்றால் நாம் பரிகாரம் செய்கின்ற ஊர்களான திருநள்ளாரோ, திருமணஞ்சேரியோ அதிக தூரத்தில் இல்லை பேருந்தில் ஏறி உட்காந்தால் அதிகபட்சமாக பத்துமணி நேரத்தில் போய் சேர்ந்துவிடலாம் வெளிநாட்டில் வாழுபவர்களுக்கு அது முடியுமா? பாஸ்போட் விஸா என்று பிரச்சனைகள் துவங்கி பணம் விவகாரம் வகையிலும் ஆயிரம் சிக்கல்கள் உண்டு எனவே தான் அவர்களின் சிரமத்தை மனதில் வைத்து அத்தகைய பரிகாரத்தை சொன்னேன் அதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை.

ஒருவருடத்திற்கு முன்பு ஒரு அம்மையார் தன் மகளுக்கு முப்பது வயது ஆகபோகிறது இன்னும் திருமணம் கைகூடி வரவில்லை கல்யாணம் ஆகாத மகளை வீட்டில் வைத்து கொண்டு படாத பாடு படுகிறேன் மகளும் பரிகாரம் எதாவது செய்யலாம் என்றால் வீட்டை விட்டு வெளியே வர மறுக்கிறாள் எனக்கு உலகமே பிடிக்கவில்லை என்கிறாள் அவள் வீட்டுக்குள்ளையே இருந்தவண்ணம் செய்ய கூடிய பரிகாரம் எதாவது இருக்கிறதா அதை சொல்லுங்கள் ஐயா செய்கிறேன் என்றார்கள் அந்த அம்மையாரின் நிலமையில் இருக்கின்ற பலரை மனதில்வைத்து அவர்களுக்கு சொன்ன பரிகார முறையை இங்கு எழுதலாம் என்று நினைக்கிறேன் இருந்தாலும் சகஜமாக வெளியில் சென்று வரக்கூடியவர்கள் அந்தந்த பரிகாரஸ்தலங்களுக்கு நேரில் சென்று செய்வதே சிறப்பு என்பதை மனதில் வைத்து படிக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன். 

சந்தனக்கட்டை ஏழு, அகில்கட்டை ஏழு, தேவதாரு கட்டை ஏழு, வன்னிமரக்கட்டை ஏழு, வேகவைக்காத பச்சை மஞ்சள் ஏழு, சந்தன கட்டிகள் ஏழு, பச்சை கற்பூரம் ஏழு துண்டுகள் இவைகளை சேகரித்து மஞ்சள் துணியில் மூட்டையாக கட்டி பார்வதி பரமேஸ்வரன் படத்தின் முன்னால் வெள்ளி கிழமை காலையில் வரும் சுக்கிர ஓரையில் வைத்து நாற்பத்தி ஐந்து நாட்கள் காலை மாலை இருவேளையும் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வரவேண்டும். இந்த பூஜையை பாதிக்கப்பட்ட நபரோ அல்லது அவரின் பெற்றோரோ செய்ய வேண்டும். நாற்பத்தி ஐந்தாவது நாள் தேங்காய் பழத்தோடு பொங்கலும் செய்து சாமிக்கு படைத்து தீபாதாரனை செய்து வழிபட வேண்டும். பிறகு அந்த மஞ்சள் மூட்டையை எடுத்து சென்று சிவன் கோவில் குருக்களிடம் உங்களால் இயன்ற தொகையையும் காணிக்கையாக சேர்த்து கொடுத்து ஆசிர்வாதம் வாங்கி கொள்ள வேண்டும். கண்டிப்பாக திருமணம் கூடிவந்து நழ்வாழ்வு அமையும்.

Contact Form

Name

Email *

Message *