Store
  Store
  Store
  Store
  Store
  Store

மரணத்தை கணிக்க முடியுமா ?    குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம் சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் இருக்கும் ஒரு ஜோதிடரை பார்த்தேன் அவர் என் ஜாதகத்தை பார்த்து விட்டு உனக்கு வாகனத்தில் கண்டம் இருக்கிறது விபத்தில் சிக்கிக்கொள்கிற வாய்ப்பு இருக்கிறது எனவே அதிகப்படியான பயணத்தை குறைத்துக்கொள் என்று சொன்னார். நான் செய்கின்ற வேலை உட்கார்ந்த இடத்தில் செய்ய முடியாது பல ஊர்களுக்கும் அலைந்து திரிந்தால் தான் நாலு காசு சம்பாதிக்க முடியும். ஆனாலும் அவர் சொன்னதிலிருந்து அச்சத்தோடு இருக்கிறேன் தயவு செய்து நீங்கள் என் ஜாதகத்தை பார்த்து அப்படி ஒரு சூழல் எனக்கு இருக்கிறதா? என்று சொல்லவும். 


இப்படிக்கு 
சங்கரநாராயணன் 
தேனீ 
      ரு ஜாதகத்தில் குருவிற்கு பனிரெண்டாவது இடத்தில் செவ்வாயும் இரண்டாம் இடத்தில் ராகு இருந்தாலும் சனியும் செவ்வாயும் ஒரே ராசியிலிருந்து அதற்கு இரண்டாவது இராசியில் ராகு இருந்தாலும் விபத்து ஏற்படும் என்று ஜோதிட நூல்கள் சொல்கின்றன இதுதவிர இன்னும் சில கிரக நிலைகள் மாறி அமைந்திருந்தாலும் விபத்தை தவிர்க்க இயலாது என்பார்கள்.

உங்கள் ஜாதகத்தில் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு நிறையவே இருக்கிறது இன்னும் தெளிவாக சொல்ல போனால் அந்த விபத்தில் உடலில் ஒரு பாகமோ அல்லது உயிருக்கு அபாயமோ கூட ஏற்படலாம். ஆனால் அத்தகைய விபத்து உங்களது அறுபதாவது வயதில் ஏற்படுமே தவிர இப்போது ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை. உங்களுக்கு இப்போது இருபத்தியாறு வயது தான் ஆகிறது எனவே என்றோ நடப்பதை நினைத்து இன்றே வருத்தப்படுவது புத்திசாலித்தனமல்ல.

ஒரு ராஜா பாம்பு தீண்டி சாகவேண்டும் என்ற சாபத்தை பெற்றானாம் மண்ணில் வாழ்ந்தால் தான் பாம்புகள் கடிக்க வரும் எனவே தண்ணீரில் வாழ்ந்தால் பாம்புகளிடமிருந்து தப்பிக்கலாம் என்று ஆடம்பரமான கப்பல் ஒன்றை கட்டிக்கொண்டு கடலிலேயே வாழ்ந்தானாம் அப்போது கடலில் மிதந்து வந்த எலுமிச்சை பழம் ஒன்றில் சேர்ந்து வந்த பூநாகம் ஒன்று அந்த அரசனை கொன்று விட்டதாம் ஆக இதனால் தான் மரணம் ஏற்படும் என்ற விதி இருக்கும் போது அதை மாற்றுவதற்கு யாராலும் முடியாது.

இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் ஒரு மனிதனின் மரணத்தேதி என்பது இறைவன் மட்டுமே அறிந்த ரகசியம் அதை துல்லியமாக அறிந்து கொள்ளும் அளவிற்கு மனிதனின் அறிவு இன்னும் வளரவில்லை இனிமேலும் வளராது உங்கள் ஜாதகப்படி இந்த வகையான விபத்து ஏற்படும் என்ற நியதி இருந்தாலும் நாளைக்கே உங்களுக்கு பிறக்க போகும் குழந்தையினுடைய ஜாதகத்தில் தகப்பனாரின் ஆயுளை நீட்டித்து தரும் அளவிற்கு கிரகங்கள் வலுப்பெற்று விட்டால் இதை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை எனவே பயம் இல்லாமல் நாலாபுறமும் சென்று சம்பாதிக்க துவங்குங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.Contact Form

Name

Email *

Message *