Store
  Store
  Store
  Store
  Store
  Store

நடிகராகும் ஜாதக தகுதி     குருஜி அவர்களுக்கு வணக்கம் ஒருவன் சிறந்த நடிகராக வளர வேண்டுமானால் அவனது ஜாதகம் எப்படி இருக்க வேண்டும்?

இப்படிக்கு,
மனோகரன் துணைஇயக்குனர்,
கோடம்பாக்கம்.


    டிப்பது என்ன பெரிய விஷயம் இயக்குனர் சொல்லி கொடுப்பது போல கையை காலை ஆட்டி முகத்தை மாற்றி நடித்து விட்டால் போதும் சிறந்த நடிகராகிவிடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள் இப்போதைய காலத்தில் நடிப்பதற்கு நடிப்பு திறமை என்பது அவசியம் அல்ல கையில் பணமிருந்தால் போதும் பெரிய நட்சத்திரமாக பவனி வரலாம் என்று பலர் கனவு காண்கிறார்கள் பட்டபடிப்பு படித்து பதவி வாங்குவது போல நடிப்பு கல்லூரியில் படித்தாலே நடிப்பு வந்துவிடும் என்று சிலர் கருதுகிறார்கள்.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல தண்ணீரை போல் காட்சி அளிப்பதெல்லாம் தாகத்தை தீர்த்துவிடாது என்பதை போல நடிப்பவன் அனைவரும் நடிகராகி விட முடியாது. அதற்கென்று சில லட்சணங்கள் இருக்கிறது நடிகராக விரும்புபவனுக்கு நல்ல கற்பனைத்திறன் இருக்க வேண்டும் நான் பிச்சைகாரனாக நடுரோட்டில் நின்று நாலுபேரிடம் கையேந்தினால் எப்படி இருப்பேன் என்று தனியறையில் நடித்து பழகி பார்ப்பவனே திரையில் ஜொலிக்க முடியும். அப்படி பழகி பார்ப்பதற்கு கலை ஆர்வமும் விடா முயற்சியும் புதியனவற்றை கற்றுகொள்ளும் ஆர்வமும் எப்போதும் இருக்க வேண்டும்.

இதுமட்டும் அல்ல ஒரு நல்ல நடிகனுக்கு கூச்ச சுபாவம் என்பது இருக்கவே கூடாது நாலுபேர் முன்னால் காதல் அபிநயம் பிடிக்கும் போது அவர்கள் அப்படி நினைப்பார்களோ இவர்கள் இப்படி நினைப்பார்களோ என்று எண்ணி தயங்குபவனும் எனக்கு எல்லாம் தெரியும் நான் செய்வது தான் சரி என்று நினைப்பவனும் நடிக்க முடியாது. நடிப்பிற்கு அத்தியாசியமான தேவைகளில் ஒன்று தெளிவான உச்சரிப்புடன் கூடிய வசனம் பேசும் திறமை வசனங்களை உடனுக்குடன் பொருள் உணர்ந்து மனப்பாடம் செய்துகொள்ளும் திறமையும் வேண்டும் இன்று நடிக்க வருபவர்களுக்கு இவைகள் எல்லாம் போதாது என்பதனால் தான் மின்னலை போல வருகிற வேகத்தில் மறைந்து போகிறார்கள்

ஒருவர் நடிப்பு துறையில் மின்னலை போல மறையாமல் இருக்க வேண்டுமானால் அவர் ஜாதகத்தில் குரு நின்ற இடத்திற்கு ஒன்று ஐந்து ஒன்பது அல்லது மூன்று எழு பதினொன்று ஆகிய இடங்களில் சுக்கிரன் இருக்க வேண்டுமென்று ஜோதிட நூல்கள் சொல்கின்றன புகழ்பெற்ற நடிகர்கள் சிலரின் ஜாதகத்தை பார்க்கும் போது இது சரியென்றே நமக்கும் தோன்றுகிறது. எனவே நடிகராக வெற்றி பெறுபவர்களுக்கு ஜாதக ரீதியில் கிரக பலனும் அவசியமென்று சொல்லலாம்.

Contact Form

Name

Email *

Message *