Store
  Store
  Store
  Store
  Store
  Store

பாவம் செய்தால் பரிசா கிடைக்கும்?



    கான் யோகி ஸ்ரீ இராமானந்த குருவுக்கு வணக்கம். எனக்கு நாற்பது வயது ஆகிறது இதுவரை என்வாழ்வில் குறிப்பிட்டு சொல்லும்படியான இன்பம் என்பதே நடந்தது இல்லை. மிகச்சிறிய வயதில் தந்தையை இழந்தேன் படிக்க ஆசை இருந்தும் குடும்பச்சூழல் காரணமாக பழைய இரும்பு கடைக்கு வேலைக்கு போனேன் திருமணம் முடிந்து சொந்த தொழில் துவங்கி ஓரளவாவது வெற்றிபெறலாம் என்ற விருப்பத்தில் செயல்பட்டேன் கட்டிய மனைவி நிரந்தர நோயாளி. துவங்கிய தொழில் என்னை கடன்காரனாக்கி மீண்டும் வேலைக்காரனாக மாற்றிவிட்டது ஒரு வயிற்றுக்கே ஓடமுடியாமல் ஓடிய நான் இப்போது இரண்டு வயிறுகளுக்காக ஓடுகிறேன் ஒன்றும் முடியவில்லை. இந்த நிலையில் ஒரு ஜோதிடரை சந்தித்தேன் அவர் என் ஜாதகத்தை பார்த்துவிட்டு உன் முன்ஜென்மத்தில் ஒருபெண்ணின் சாபம் இருக்கிறது அதனால் தான் நீ அல்லல் படுகிறாய் என்று சொல்லிவிட்டார் உண்மையாகவே அப்படி ஏதாவது இருக்கிறதா? இருந்தால் அது விலக நான் என்ன செய்ய வேண்டும்? தயவு செய்து நல்ல வழிகாட்டுமாறு பணிவோடு வேண்டுகிறேன்.

இப்படிக்கு 
ராதாகிருஷ்ணன் 
தாம்பரம் 
சென்னை 




     விதைத்ததை அறுக்க வேண்டும் அறுத்ததை சுமக்க வேண்டும் இந்த விதியிலிருந்து யாரும் தப்பிக்க இயலாது மற்றவர் காலில் குத்த வேண்டுமென்று கண்ணாடி ஓட்டை பாதையில் போட்டால் அது என்றாவது ஒருநாள் காத்திருந்து நம் கண்களையே குத்தும். இந்த எளிய விளக்கம் தான் வினைப்பயன் என்ற தத்துவத்தின் உண்மை பொருள் 

ஒவ்வொருவர் ஜாதகத்திலும் ஐந்தாமிடம் பூர்வ புண்ணியஸ்தானம் என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் உள்ள கிரக அமைப்புகளை வைத்து ஒருவரின் சென்ற ஜென்மா பலன்கள் என்னவென்று ஓரளவு தீர்மானித்து விடலாம். போன பிறவியில் நல்லது செய்தால் நல்லதும் அல்லது செய்தால் தீயதும் வருமென்று இந்த இடம் தெளிவாக காட்டி நம்மை எச்சரிக்கும்.

சென்ற பிறவியில் நாம் நல்லது செய்தோமா? தீயது செய்தோமா? என்று நமக்கு தெரியாது இந்த பிறவியில் நல்லதை செய்ய துவங்கினால் வரும் பிறவியில் துன்பம் இல்லாது வாழலாம் என்பதற்காகவே நமது முன்னோர்கள் அறம் செய்ய விரும்பு என்றார்கள் அதை நாம் எக்காலத்திலும் கருத்தில் கொள்ளவில்லை என்பதற்கு ஆதாரமே வாழ்க்கை முழுவதும் துன்பத்தை அனுபவிப்பது. 

வினைப்பயனாக கஷ்டங்கள் வருகிறது என்றால் அதை மெளனமாக அனுபவித்து விடுவதே என்னை பொறுத்தவரை சிறந்ததாகும். காரணம் இந்த சிறிய கஷ்டங்களிலிருந்து விடுவித்து கொள்ள பரிகாரங்களை தேடினால் நாளை இதே கஷ்டம் மிகப்பெரியதாக கண்டிப்பாக வரும் அதை அனுபவிக்காமல் தப்ப இயலாது. 

இருந்தாலும் இறைவன் என்பவன் கண்டிப்பு மிகுந்த நீதிபதியாக மட்டுமே இருப்பது இல்லை கருணை மிகுந்தவனாகவும் இருக்கிறான். கோடை வெப்பத்தில் தகித்தாலும் குளிர்தருகிற நிழலையும் தென்றலையும் தராமல் போகமாட்டான் துன்பங்களுக்கும் எல்லை வகுத்திருப்பான் அதுவரை பொறுமையோடு காத்திருந்தால் கஷ்டங்கள் விலகாமல் போகாது. உங்கள் வாழ்விலும் அப்படிப்பட்ட ஒரு நிலை வரும் அதுவரை அதாவது இன்னும் மூன்று வருடங்கள் காத்திருங்கள் கண்டிப்பாக கஷ்டங்கள் விலகி நன்மை நடக்கும். அதுவரை துன்பத்தை தாக்குப்பிடிக்க உறுதியான மனதை வேண்டி ஸ்ரீ ஆஞ்சநேயரை பிரார்த்தனை செய்யுங்கள் உங்களுக்கு அவர் நன்மையை தருவார்.


Contact Form

Name

Email *

Message *