Store
  Store
  Store
  Store
  Store
  Store

குழந்தை பாக்கியம் தரும் சனி     னிபகவானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்குமென்று சொல்கிறார்களே அது உண்மையா?


இப்படிக்கு ,
மாலினி ,
மதுரை .
      சரத மன்னனுக்கு வெகுநாட்களாக குழந்தைகள் இல்லை இதனால் அவன் மிகவும் வருத்தப்பட்டான். புனித யாத்திரை மேற்கொள்வதும், புனித நீராடுவதும் வழக்கமாகவே கொண்டிருந்தான். அந்த வகையில் கும்பகோணம் அருகில் உள்ள திருநாரையூர் சிவாலயத்திற்கு சென்று சனீஸ்வரனை வழிபட்டான். அதன் பிறகே அவனுக்கு குழந்தைபாக்கியம் கிட்டியது என்று திருநாரையூர் ஸ்தல புராணம் சொல்கிறது.

திருநாரையூரில் சனீஸ்வரர் தனது மனைவி சாயாதேவி, மாந்தி, குளிகன் ஆகிய இருபுத்திரர்களோடு காட்சி தருகிறார். குடும்பத்தோடு இருக்கும் சனிபகவானை தரிசனம் செய்தால் குடும்பம் விருத்தியாகும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் இருக்கிறது. குழந்தை இல்லாதவர்கள் மட்டுமல்ல பெற்ற பிள்ளைகளால் துன்பம் அனுபவிப்பவர்களும் இந்த ஆலயத்திற்கு சென்று சனியை வழிபடலாம் நிச்சயம் பலன் பெறலாம்.


Contact Form

Name

Email *

Message *