Store
  Store
  Store
  Store
  Store
  Store

புனித சின்னங்கள் அணிவது ஏன்?

இந்துமத வரலாறு கேள்வி பதில் 3


    தத்தின் புனித சின்னங்கள் என்று கூறப்படுகின்றவற்றை ஆலயங்களில் மட்டுமல்ல மனிதனின் உடம்பிலும் இட்டுக்கொள்ள வேண்டுமென்று இந்துமதம் கூறுவது ஏன்? அதாவது விபூதி, குங்குமம், திருமண் போன்றவைகளை ஒரு மனிதன் ஏன் அணிய வேண்டும்? 

                                                           துரைசாமி,
                                                            கனடா




   லையை மொட்டை அடித்து கொள் மீசையை மழித்துக்கொள் என்று இஸ்லாம் சமயம் கூறினால் அதை எந்த இஸ்லாமியரும் ஏன்? எதற்கு? என்று கேள்விகள் கேட்பதில்லை பெரியவர்கள் சொல்கிறார்கள் நல்லதற்காக தான் சொல்வார்கள் என்று மறுயோசனை இல்லாமல் செய்கிறார்கள் தலைமுடியும் மீசையும் இல்லாமல் தாடியை மட்டும் வைத்து கொண்டால் முகம் அவலட்சனமாக இருக்குமே என்று அவர்கள் கவலைப்படுவது கிடையாது. தன் அழகை விட மத கடமைகள் தான் முக்கியம் என்பது அவர்களது நோக்கம்.

தென் பகுதியில் வாழ்கிற கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தலையில் ஒரு ரிப்பன் கட்டியது போல முடியை மட்டும் வைத்து விட்டு தலையை சுற்றியும் நடுவிலேயும் ரோமங்களை அகற்றிவிடும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள் இதைகூட அவர்கள் அவலட்சனமாக அவமரியாதையாக கருதுவது இல்லை தங்களது மதத்திற்காக செய்கின்ற புனித காரியமாகவே நினைக்கிறார்கள். மத அடையாளங்களை மனிதர்கள் பயன்படுத்த வேண்டும் என்று கூறாத மதங்களே இல்லை. 

ஜைன சமயத்தில் துறவிகள் தவிர்த்த சாதாரண மனிதர்கள் கூட விரத நாட்களில் வாய்வழியகவும் மூக்கு வழியாகவும் வெளியேறுகிற காற்று கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்களை கொன்றுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் வாயிலும் மூக்கிலும் மெல்லிய துணியை கட்டி கொள்கிறார்கள் புத்த மதத்தில் தலையை மொட்டை அடித்துக்கொள்கிறார்கள் இந்த மத அடையாளங்களை அந்தந்த மதத்தை சார்ந்தவர்கள் பாரமாக கருதுவது இல்லை. இந்துக்கள் மட்டுமே மத சின்னங்களை அணிந்து கொள்வதற்கு ஆயிரம் காரணங்களை கேட்கிறார்கள் அல்லது மத அடையாளங்களை பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள். 

ஜெபம் செய்யும் நேரத்தில் பொருள் தெரியாமல் சொல்லுகிற மந்திரம் மகான்களின் முன்பு வணங்காத தலை, இரக்கமில்ல்லாத இதயம், கிணறு இல்லாத வீடு, கோவில் இல்லாத ஊர், நதியில்லாத நாடு, தலைவன் இல்லாத சங்கம், தானம் இல்லாத செல்வம், சீடன் இல்லாத குரு, நீதி நிலவாத நாடு, மந்திரி இல்லாத மன்னன், வாசம் இல்லாத மலர், புனிதம் இல்லாத ஆத்மா, தெளிவில்லாத அறிஞன், நலமில்லாத உடல்,தூய்மை இல்லாத பழக்கவழக்கம், பற்றற்ற உள்ளம் இல்லாத துறவு, உண்மை இல்லாத பேச்சு, ஊதியம் இல்லாத உழைப்பு, பகுத்தறிவு இல்லாத தீர்மானம், கூர்மையில்லாத கத்தி, பால் இல்லாத பசு, பணிந்து வணங்காத கைகள், மத சின்னங்களை அணியாத நெற்றி ஆகியவைகள் இருந்தும் பயனில்லை என்பது இந்துமத சாஸ்திரங்களின் முடிவும் சான்றோர்களின் அனுபவமாகவும் இருக்கிறது. 

இதிலிருந்தே மத சின்னங்கள் எவ்வளவு முக்கியமானவைகள் என்பதை நீங்கள் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். தினசரி நெற்றியில் திருநீறோ, திருமண்ணோ அணிகிற போது இந்த உடலும் ஒருநாள் சாம்பலாகவோ மண்ணோடு மண்ணாகவோ போகப்போகிறது என்ற வைராக்கியத்தை வாழ்க்கையின் நிலை யாமையை உணர்த்துவதாக மட்டும் அமையவில்லை மத சின்னங்களின் தத்துவம் இவை  மட்டுமல்ல இவற்றிற்கு மேலும் அதற்கு பொருளுண்டு பயனும் உண்டு. அதில் நம்மில் பலர் அறியாமலே இருக்கிறோம். 

இரண்டு புருவங்களுக்கு இடையே  உள்ள பகுதி "ஆக்ஞா சக்கரம்" என்று யோக நூல்கள் சொல்கின்றன. இந்த சக்கரத்தில் மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்கிற போது திருமண்ணோ, சந்தனமோ, விபூதியோ வைக்கிற போது தியானம் செய்வதனால் உடம்பில் எழும்புகிற உஷ்ணம் அதிகப்படாமல் சரியான அளவில் வைப்பதற்கு உதவுகிறது. திலகம் என்பது ஞானக்கண்ணை குறிப்பதாகும் சிவபெருமானுக்கு மூன்று கண்கள் இருப்பது போல நமக்கும் மூன்று கண்கள் உண்டு. ஆனால் அவருக்கு வெளியில் தெரிவது போல நமக்கு தெரிவது இல்லை. மண்டைக்குள் ஒரு சுரப்பாக அது மறைந்திருப்பதாக மருத்துவம் சொல்கிறது. 

மறைந்திருக்கும் அந்த மூன்றாவது கண்ணே பிரபஞ்ச ஆற்றலை நமக்குள்ளேயும் நமது ஆற்றலை பிரபஞ்ச வெளியிலும் கலப்பதற்கு துணை செய்கிறது. மேலும் இந்த பகுதியே மற்றவர்களின் எண்ண பதிவுகளை நமக்குள் கடத்தி செல்லவும் செய்கிறது. இதனால் நல்ல பலனும் உண்டு கெடுதியும் உண்டு. வெளியிலிருந்து வருகிற சக்தி தீயதாக இருந்தால் அதை உள்ளே வராமலும் உள்ளே இருந்து நல்ல சக்திகள் வெளியே செல்லாமலும் விபூதி குங்குமமும் பாதுகாப்பு அளிக்கிறது இதற்காக தான் நெற்றியில் மத சின்னங்கள் அணியவேண்டும் என்று இந்துமதம் சொல்கிறது.

இதுமட்டும் அல்ல சிவபெருமானின் மூன்றாவது கண் திறக்கப்படும் போது அத்யாமிக், அதிதேவிக், அதிபெளதிக் என்று சொல்லபடுகிற மூன்றுவகை தாபங்களும் வெந்து சாம்பலாகிறது மனிதர்களாகிய நாமும் திலகமிடுவதற்காக மூன்றாவது கண்ணை தொடுகிற போது சஞ்சிதம் பிராரப்பம் ஆகாமி ஆகிய மூன்று கர்மாக்கள் எரிந்து சாம்பலாக வேண்டும் என்ற பிராத்தனையோடு செய்ய வேண்டும் என சொல்லபடுகிறது. 

வைஷ்ணவர்கள் திரிபுண்ட்ரம் என்ற திருநாமத்தை சாத்துகிற போது இறைவா சத்வம், தமஸ், ரஜஸ் போன்ற இறுக பிணைக்கும் கயிறுகளால் ஆன திரிகுணாத்மிகி என்னும் மாயையை என்னிடமிருந்து விலக்கிக்கொள் என்று பிரார்த்தனை செய்வார்கள். சைவர்களும் இதே போன்ற பிரார்த்தனைகளை செய்கிறார்கள் எனவே மத சின்னம் என்பது கடமைக்காக மற்றவர்கள் கூறுகிறார்களே என்ற கட்டாயத்திற்காக அணிய கூடியது அல்ல ஆண்டவனை உணர்ந்து அவனோடு மனமொன்றி பிரார்த்தனை செய்து ஆத்ம பூர்வமாக அணிய வேண்டியது ஆகும். இதை உணராமல் இருப்பது நமக்கு நாமே செய்து கொள்கிற தீங்கே தவிர வேறொன்றும் இல்லை






Contact Form

Name

Email *

Message *