Store
  Store
  Store
  Store
  Store
  Store

அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்பட்டால்...?





     குருஜி அவர்களுக்கு வணக்கம் எங்கள் ஊரில் முக்கியமான கடைதெருவில் எனக்கு சொந்தமான இரண்டு கடைகள் இருக்கின்றன அதில் ஒன்றில் நான் ஜவுளிக்கடை நடத்தி வருகிறேன் இன்னொன்றை வாடகைக்கு விட்டு வந்தேன் என் மகன் தனக்கொரு கடை வைத்து தரும்படி கேட்டதனால் வாடகைக்கு இருந்த நபரை காலி செய்து தரும்படி கேட்டேன் என்னிடம் சரி என்று சொன்ன அவர் தீடிரென்று தன்னால் கடையை காலிசெய்ய முடியாது என்று நீதி மன்றம் சென்றுவிட்டார் வேறு வழி இல்லாமல் நானும் வழக்குமன்றம் சென்று வாதாடினேன் தீர்ப்பு என் பக்கம் வந்து அவரை காலிசெய்து கொடுக்கும்படி கூறியது ஆனால் அவர் மேல்முறையீடு செய்து வழக்கை வேண்டுமென்றே இழுத்தடிக்கிறார் என்ன செய்வது என்று எனக்கு புரியவில்லை தயவு செய்து இந்த பிரச்சனை நல்ல முறையில் முடிவுக்கு வர எதாவது பரிகாரம் இருந்தால் சொல்லவும் 

இப்படிக்கு 
மாசிலாமணி 
தூத்துக்குடி 





   ர்மன் ராஜாவாக இருந்தபோது அவனிடம் ஒரு வழக்கு வந்தது ஒருவன் தனக்கு சொந்தமான நிலத்தை வேறொருவனுக்கு விற்றுவிட்டான் வாங்கியவன் பயிர் செய்ய நிலத்தை உழ துவங்கியபோது புதையல் ஒன்று கிடைத்தது அது சம்மந்தமாகத்தான் இருவரும் அரசனிடம் வழக்காட வந்திருந்தனர் தர்மனுக்கு ஒன்றும் புரியவில்லை இதில் வழக்காடுவதற்கு என்ன இருக்கிறது என்று யோசனை செய்து நிலத்தை வாங்கியவனிடம் என்ன உன் பிரச்சனை என்று கேட்டான் 

அதற்கு அவன் அரசே நான் இவரிடமிருந்து நிலத்தை வாங்கினேன் அதில் புதையல் கிடைத்தது நிலம் இன்று தான் எனக்கு சொந்தமாக ஆனதே தவிர ஆதி முதல் அவருடைய நிலமாகத்தான் இருந்தது எனவே இந்த புதையல் அவருடைய முன்னோர்களின் சொத்தாகவே இருக்க வேண்டும் இதை அவரிடம் ஒப்படைத்தால் வாங்க மறுக்கிறார் நீங்கள் தான் வாங்கி கொடுக்க வேண்டும் என்றான். 

நிலத்தை விற்றவனோ ஐயா அரசே நிலத்தை எப்போது விற்றேனோ அப்போதே அதிலுள்ள அனைத்தும் அவருக்கு சொந்தமானதாக ஆகி விடுகிறது அதில் எப்படி நான் உரிமை கொண்டாட முடியும் எனவே புதையல் எனக்கு வேண்டாம் அவரையே வைத்து கொள்ள சொல்லுங்கள் என்று கூறினான் 

தர்மனுக்கு தர்மசங்கடமாகி விட்டது இரண்டு பேருமே நல்லவர்களாக இருக்கிறார்கள் இதில் எப்படி தான் தீர்ப்பு சொல்லி பிரச்னையை தீர்க்க முடியும் நன்றாக யோசித்து பிறகு தீர்ப்பு கூறலாம் என்று நினைத்து இருவரும் அடுத்தமாதம் வாருங்கள் நல்ல தீர்ப்பு சொல்கிறேன் என்று இருவரையும் அனுப்பி வைத்தான் 

அடுத்த மாதமும் வந்தது வழக்கு தொடுத்த இருவரும் வந்தார்கள் சரி இப்போது உங்கள் வழக்கை மீண்டும் சொல்லுங்கள் என்று தர்மன் கேட்டான் உடனே நிலத்தை வாங்கியவன் ஐயா இவரிடமிருந்து நான் நிலத்தை வாங்கினேன் அதில் புதையல் கிடைத்தது அதனால் அது தர்மபடி எனக்கே சொந்தமென்று அவர் சொன்னார் ஆனால் நான்தான் புத்தி இல்லாமல் அதை மறுத்துவிட்டேன் என்னை மன்னியுங்கள் என்றான் 

சரி பிரச்சனை தீர்ந்தது புதையலை அவனே வைத்து கொள்ளட்டுமே என்று அரசன் நிலத்தை விற்றவனிடம் கூறினான் அதற்கு விற்றவன் அது எப்படி முடியும் அந்த நிலம் வெகு நாட்களாக என்னுடையதாக இருந்தது எனவே அதிலுள்ள புதையலும் எனக்கே சொந்தம் என்னால் அதை விட்டு கொடுக்க முடியாது என்று பிடிவாதமாக கேட்க ஆரம்பித்து விட்டான் 

இப்போது தர்மனுக்கு தலை சுற்றியது எப்படி தீர்ப்பு சொல்வது என்று குழம்பி போனான் ஒரே மாதத்தில் இருவருடைய மனதும் எப்படி இப்படி மாறியது என்று குழம்பி அமைச்சர்களிடம் காரணம் கேட்டான் அதற்கு அவர்கள் மன்னா போன மாதத்தில் கலியுகம் பிறக்கவில்லை இந்தமாதம் கலியுகம் பிறந்து சில நாட்களாகிறது கலியின் கொடுமையால் தான் இவர்கள் மனது கெட்டு போனது என்று காரணத்தை கூறினார்கள் கலிபிறந்த கதை தர்மனுக்கு அப்போது தான் தெரிந்தது எனவே அவனும் கலியுக தர்மபடி யார் வீட்டு சொத்து என்று தெரியாத புதையலை மண்ணுக்கடியில் உள்ளவைகள் அனைத்தும் அரசுக்கு சொந்தம் அதில் நீங்கள் உரிமை கொண்டாடினால் தண்டனை கிடைக்கும் என்று தீர்ப்பு சொன்னான் 

கலியுகத்தின் கொடுமையை இதைவிட எளிமையாக எந்த கதையாலும் விளக்க முடியாது என்று நினைக்கிறேன் அடுத்தவன் சொத்துக்கு ஆசை படுவது அடுத்தவன் உழைப்பை சுரண்டுவது பாவம் என்ற எண்ணமே பலரிடம் இருப்பதில்லை யார் எக்கேடு கெட்டாலும் கவலை இல்லை நான் நன்றாக இருக்கிறேனா அது போது என்ற எண்ணமே பலரிடம் இருக்கிறது மனிதன் எப்படி கூத்தாடினாலும் இறைவன் என்பவன் எப்போதும் தர்மத்தின் பக்கமே இருக்கிறான் எனவே தர்மம் வெல்லும் கவலை படாதீர்கள் இருபத்தி ஐந்து சனி கிழமைகள் யோக நரசிம்மரை தாமரை பூ கொண்டு வழிபடுங்கள் தீயது மறைந்து நல்லது வெற்றிபெறும் 


Contact Form

Name

Email *

Message *