Store
  Store
  Store
  Store
  Store
  Store

பணம் சேமிக்க எளிய வழி   சுவாமிஜி வணக்கம். நான்குநேரியிலிருந்து வரதராஜ ரெட்டியார் எழுதுகிறேன் எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் காலணாவை கூட சேமிக்க முடியவில்லை. எனக்கு நாற்பது வயதாகிறது. இந்த வயது வரையிலும் முழுமையாக ஆயிரம் ரூபாய் கூட சேமிப்பில் நான் வைத்ததில்லை. எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது பணம் சேமிக்க நான் என்ன செய்ய வேண்டும்? எதாவது எளிய பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் நன்றியோடு இருப்பேன். 

இப்படிக்கு,
வரதராஜ ரெட்டியார்,
நான்குநேரி.
    ஜாதகப்படி பணத்தை காட்டுகிற கிரகம் புதன். வங்கி மற்றும் பணம் புழங்குகிற இடங்களை குறிக்கும் கிரகமும் புதன் தான். ஒருவர் ஜாதகத்தில் புதன் கிரகம் பகை மற்றும் நீசம் பெற்று இருந்தாலோ மறைவு  ஸ்தானங்களில் இருந்தாலோ அவருக்கு பணம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்துகொண்டே இருக்கும்.

இந்தமாதிரி கிரகநிலைகள் அமைந்தவர்கள் இனி நம்மால் வாழ்நாள் முழுவதும் பணத்திற்காக போராடவேண்டிய நிலையே இருக்குமென்று கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. காரணம் புதன் கிரகம் வலுவிழந்து போனால் அதை வலுப்படுத்துவதற்கு நமது முன்னோர்கள் மிக எளிமையான சில வழிகளை கண்டறிந்து சொல்லி சென்றிருக்கிறார்கள் அவற்றை கடைபிடித்தாலே போதும் பிரச்சனைகளை தீர்த்து கொள்ளலாம்.

மனிதனது உடம்பு எப்படி கிரகங்களின் ஆற்றலை உள்வாங்க கூடியதாக இருக்கிறதோ அதே போல பத்துமடங்கு அதிகமாக உள்வாங்குகிற ஆற்றல் தாவரங்களுக்கு உண்டு. அந்த வகையில் புதனின் ஆற்றலை நல்ல வகையில் ஈர்த்து தரும் சக்தி வெந்தயத்திற்கு உண்டு. சாதாரணமாக சமையலில் பயன்படுத்த கூடிய வெந்தயம் மருத்துவகுணம் வாய்ந்தது மட்டுமல்ல ஜோதிட குணமும் வாய்ந்தது ஆகும்.

பெண்களும், குழந்தைகளும் உண்டியலில் பணம் சேர்ப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பார்கள். அவர்கள் பரிசோதனைக்காக அந்த உண்டியல்களில் புதன்கிழமை அன்று புதன் ஓரை நேரத்தில் நான்கைந்து வெந்தயங்களை முதலில் உண்டியலில் போட்டு அதன்பிறகு அதில் பணத்தை சேர்த்து பாருங்கள் வியப்படையும் வண்ணம் மிக வேகமாக சேமிப்பு வளர்வதை பார்க்கலாம்.

ஒரு வெள்ளை துணியில் வெந்தயத்தை சிறிய மூட்டையாக கட்டி சுவாமி படத்திற்கு அருகில் வைத்து வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக பணம் சேமிக்க வழி ஏற்படும் வெந்தயம் செய்யகிற இதை வேலையை வெள்ளெருக்கன் விநாயகரும் செய்வார் வெள்ளெருக்கு வேரில் செய்த விநாயகரை முறைப்படி வழிபட்டாலும் சேமிப்புக்கான சூழல் உருவாகும்.Contact Form

Name

Email *

Message *