Store
  Store
  Store
  Store
  Store
  Store

கனவில் வரும் குலதெய்வம்




    ன் வழிபாட்டிற்குறிய குருஜி அவர்களுக்கு கோடானகோடி வணக்கங்கள். நான் உங்களது மிக தீவிரமான வாசகிகளில் ஒருத்தி. கடந்த ஒரு வருடமாக உங்கள் பதிவுகளை படித்து பயன்பெற்று வருகிறேன். என் குடும்பத்தில் பல பிரச்சினைகள் இருக்கிறது. அவை எல்லாவற்றிற்கும் மூலகாரணம் நீங்கள் குலதேவதையை மறந்து விட்டீர்கள். அதற்கு பூஜை செய்யுங்கள் அனைத்தும் சரியாகும் என்று சொல்கிறார்கள். நாங்களும் வழிபாடு நடத்த தயாராக இருக்கிறோம். பிரச்சினை என்னவென்றால் எங்கள் குடும்பத்தில் எது குலதெய்வம்? என்று யாருக்கும் தெரியவில்லை. காரணம் இரண்டு தலைமுறையாக யாருமே குலதேவதையை பூஜை போட்டு வணங்குவது இல்லையாம். தெய்வம் இன்னதென்று தெரியாத போது பூஜை எப்படி செய்வது? எனவே கனம் ஐயா அவர்கள் இந்த பிரச்சினைக்கு சரியான தீர்வு தரும்படி பணிவோடு வேண்டுகிறேன்.

இப்படிக்கு, 
உங்கள் வாசகி, 
சரளா புனிதகுமார், 
தூத்துக்குடி. 


    பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளை சேரும் என்பார்கள். கடன் மட்டுமல்ல அவர்கள் செய்த தவறுகளும் பிள்ளைகளை சேருவதை அனுபவரீதியாக உணருகிறோம். அந்த காலத்தில் குலதேவதையை வணங்குகிற நேரத்தில் எதாவது அசம்பாவிதங்கள் நடந்திருக்கலாம். எனவே அதற்கு காரணம் குலதேவதையை வழிபட்டதே ஆகும் என்று பயந்தோ அல்லது கோபப்பட்டோ பூஜை முறையையே நிறுத்தி வைத்திருக்க வேண்டும். அது தொன்றுதொட்டு வந்து இன்று தேவைப்படும் போது எது நமது குலதெய்வம் என்பதை அறிய முடியாமலே போய்விடும். 

 இந்த பழக்கம் மிகவும் தவறுதலானது. நாம் பல காரணங்களால் சில விஷயங்களை தவிர்த்திருப்போம். பத்துபேர் செய்கின்ற காரியத்தை நாம் ஏன் செய்யவில்லை என்பதற்கான விளக்கங்களை இளைய தலைமுறையினருக்கு எடுத்து சொல்லும் வழக்கத்தை வைத்திருந்தால் அவைகள் காலம் தோறும் அழியாமல் நீடித்து வரும். ஆனால் நமக்கு அத்தகைய நல்ல பழக்கங்கள் எப்போதுமே கிடையாதே!

 ஒரு குடும்பத்தின் குலதெய்வம் இன்னது தான் என்று தெளிவாக அறிந்துகொள்ள பல தாந்த்ரீக முறைகள் இருக்கிறது. அவைகளை பற்றி நான் இங்கு ஒளிவு மறைவு இல்லாமல் எழுத முடியாது நேரில் தான் விளக்க முடியும். இருந்தாலும் குலதெய்வம் இன்னதென்று தெரியாமல் தவிப்பவர்கள் அதிலிருந்து விடுபட சில எளிய பரிகாரங்கள் இருக்கிறது அவற்றை அறிந்து கொள்வது மிகவும் நல்லது. 

உங்கள் குலதெய்வம் எது என்று தெரியாவிட்டாலும் செவ்வாய் கிழமை, செவ்வாய் ஓரையில், வெள்ளி அல்லது தங்கத்தில் தாலி ஒன்று செய்து அதற்கு மஞ்சள், குங்குமம் சாற்றி பூஜை அறையில் வைத்து முறைப்படி தூப தீபம் காட்டி ஒரு மண்டல காலம் வழிபாடு செய்யுங்கள். தாலி என்பது பெண்களின் மங்கள அடையாளம் மட்டும் அல்ல. அது ஒரு குடும்பத்தின் பாரம்பரிய பண்பாட்டு சின்னமாகவும் புனிதமிக்க குறியீடாகவும் கொள்ள வேண்டும். 

 இந்த பூஜையை முறைப்படி செய்து நாற்பத்தி ஐந்தாவது நாள் குறைந்தது ஒன்பது ஏழைகளுக்காவது அறுசுவையோடு உணவு படைத்து அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் அவர்களுக்கு நம்மால் முடிந்த காணிக்கைகள் கொடுக்கலாம் இப்படி செய்தால் எது என்றே தெரியாத குலதெய்வம் கனவில் வந்து தன்னை கண்டிப்பாக வெளிப்படுத்தி தனக்குரிய அங்கீகாரத்தை நிலைநிறுத்தும். இது சத்தியமான உண்மை.


Contact Form

Name

Email *

Message *