Store
  Store
  Store
  Store
  Store
  Store

காந்தி ஹிந்துத்துவா வாதியா?


யார் ஞானி 4

    த்தியம் என்பதே கடவுளின் வடிவம். அதை அடைவதற்கு அன்பு, அஹிம்சை, ஒழுக்கம் மற்றும்  பரிசுத்தம் ஆகியவைகள் மட்டுமே சரியான பாதை என்று காந்தி கூறுவதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. சத்தியம் தான் கடவுள் என்றால், அனைத்து மதங்களுமே கடவுளை பற்றி அதாவது சத்தியத்தை பற்றி பேசுகிறது எந்த மதத்தின் வாயிலாக கடவுளை அடைந்தால் என்ன?  மனித பிறவியின் இறுதி நோக்கமே சத்திய தரிசனம் ஒன்று மட்டுமே எனும் போது அதற்கு மதங்கள் இடைஞ்சலாக எப்படி இருக்கும்? எனவே கடவுள் மதங்களுக்கு அப்பாற்பட்டவர் அவருக்கு தனிப்பட்ட அடையாளங்கள் சின்னங்கள் கிடையாது என்ற நிலையில் ஒருவன் ஹிந்துவாக இருந்தால் என்ன? கிறிஸ்தவனாக ஆனால் என்ன? 

காந்தியின் போதனைகளை மிக தெளிவாக அறிந்த நீங்கள் யாரையும் மதமாற்றம் செய்ய கூடாது என்கிறீர்கள். கடவுளுக்கு மதமே கிடையாது என்கிற போது ஒருவன் எந்த மதத்தில் இருந்தால் என்ன? எந்த மதத்திற்கு மாறினால் என்ன? அப்படி செய்ய கூடாது என்று நீங்கள் கருதும் போது தான் எங்களுக்கு சில சந்தேகங்கள் வருகிறது. காந்தியின் வழியில் பயணப்படுகிறேன் நீங்களும் அவ்வழியே வாருங்கள் என்று எங்களையும் அழைக்கிறீர்கள். அதே நேரம் மதம் மாறக்கூடாது என்பதில் தீவிரமும் காட்டுகிறீர்கள். இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் தெரிகிறது. உங்களது பேச்சுக்களையும் எழுத்துக்களையும் படிக்கும் போது அதிலுள்ள ஹிந்துத்துவா சாயலை உணர முடிகிறது. ஒரு கையில் காந்தியையும், இன்னொரு கையில் ஹிந்துத்துவாவையும் வைத்து கொண்டிருப்பது விபரீதம் அல்லவா? அதற்கான விளக்கத்தை நீங்கள் கண்டிப்பாக கூறியே தீர வேண்டும். என்று குருஜியிடம் ஒரு சீடர் கேட்டார்.


  
குருஜி:-

       து மிகவும் நல்ல கேள்வி. பல நாள் பலரும் இந்த கேள்வியை என்னிடம் எழுப்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு அப்போது நான் எந்த பதிலையும் சொன்னது இல்லை சொல்ல கூடாது என்ற எண்ணத்தினால் மெளனமாக இருந்ததில்லை. காலம், நேரம் சூழ்நிலை வேறு விதமாக இருந்ததனால் அதை தவிர்த்து வந்திருக்கிறேன். இப்போது நான் அதை மறைக்க வேண்டிய அவசியமில்லை என்று கருதி எனது நிலைபாட்டை வெளிப்படையாகவே கூறுகிறேன். என் அந்தராத்மாவின் படி பேசுவது என்றால் எனக்கு கடவுளை தவிர வேறு எந்த மதத்திலும் நம்பிக்கையும் கிடையாது, ஈடுபாடும் கிடையாது. அதே நேரம் நான் எந்த மதத்தையும் வெறுக்கவுமில்லை. சுக்கு, மிளகு, திப்பிலி நல்ல மருந்து அதற்காக அந்த மருந்தை மட்டுமே உணவாக ஏற்றுக்கொண்டால் உடல் இயந்திரம் பழுதடைந்து விடும் மருந்தாக இருக்கும். அந்த பொருளே அளவுக்கு அதிகமானால் விஷமாகி விடுவது போல் அளவு கடந்த மத பற்று மனிதனை மிருகமாக ஆக்கி விடுகிறது என்பது என் அனுபவம். 

இந்து மத ஞானிகளை எந்த அளவு நேசிக்கிறேனோ அதே அளவு மற்ற மத குருமார்களையும் நேசிக்கிறேன். இங்கே ஒரு விஷயத்தை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் நேசிக்கின்ற, மதிக்கின்ற, பக்தி செய்கின்ற குரு நல்லவர், வல்லவர் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது. அதற்காக அவரையே நான் குருநாதராக ஏற்றுகொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கவும் கூடாது என்னை வற்புறுத்தவும் கூடாது. உங்களுக்கு உங்கள் குருவை தேடி கொள்வதில் எவ்வளவு உரிமையும், சுதந்திரமும் இருக்கிறதோ அதே அளவு உரிமை எனக்கும் இருக்கிறது என்பதை நீங்கள் மறுக்க கூடாது இந்த மறுதலிப்பு உங்களிடமிருந்து வரும்போது மட்டுமே என்னை தற்காத்து கொள்ள நான் சில காரியங்களை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளபடுகிறேன் 

பகவத் கீதையில் கூறப்பட்டிருக்கின்ற விஷயங்களை தமிழில் படித்தால் அதை மொழிபெயர்ப்பு செய்தவர்கள் தங்களது கருத்தையும் கொள்கைகளையும் அதில் புகுத்திருக்க கூடும் என்ற எண்ணத்தில் சமஸ்கிருதம் கற்று அதன் வழியாக கீதையை படிக்க விரும்பியவன் அதற்காக உழைத்தவன் நான். கீதையின் மேல் எனக்கிருந்த ஈடுபாடும் ஆர்வமும் குரான், பைபிள் போன்றவற்றில் இருந்தது என்று கூறுவதில் எனக்கு தயக்கம் கிடையாது இன்னும் ஒருபடி மேலே சொல்வது என்றால் இரண்டாயிரத்திற்கு முன்பு வரை கீதையை விட மிக அதிகமான முறை பைபிளை படித்திருக்கிறேன் எந்த அதிகாரத்தில் என்ன வசனத்தில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு அப்போது எனக்கு பைபிளில் பரிட்சயம் இருந்தது. 

கீதை, பைபிள் போலவே திருக்குரானையும் படிப்பதற்கு நான் விரும்பினேன் அதற்காக எனது இஸ்லாமிய நண்பர்களிடம் தமிழ் குரானை தரும்படி கேட்ட போது அவர்கள் பலவாறு தயங்கினார்கள். காரணம் குரானை படிப்பதற்கென்று சில முறைகள் இருக்கிறது அந்த முறைகளிலிருந்து தவறி படித்தோம் என்றால் அது அந்த நூலை அவமரியாதை செய்வதாக அமைந்து விடும். எனவே எங்களால் உனக்கு குரானை தரமுடியாது என்று அன்போடு கூறினார்கள். உண்மையாகவே குரான் மீது அவர்கள் கொண்டிருந்த அன்பும், பக்தியும் என்னை சிலிர்ப்படைய வைத்தது. பிறகு நான் அதை எப்படியும் படித்தே தீருவது என்ற உறுதிபாட்டிற்கு வந்து பல முனைகளில் தேடினேன். எல்லோருமே ஒரே பதிலை திரும்ப திரும்ப சொன்னார்கள்.

புத்தக கடைக்கு சென்று, ஒரு குரான் பிரதியை வாங்கி படித்து விடலாம் அதில் எனக்கு பெரிய சிரமம் இல்லை. ஆனால் அது இயந்திரகதியாக இருக்குமே தவிர உள்ளார்த்தமான ஈடுபாடாக இருக்காது எனவே அது சம்மந்தப்பட்ட நபர்களின் முழுமையான் ஒப்புதலோடு மட்டுமே படிக்க வேண்டுமென்று உறுதி செய்து நான் தேடினேன். அந்த நேரம் காயல்பட்டினத்தில் இருந்து வந்த ஒரு இஸ்லாமிய அன்பர் குரான் படிக்கும் முறைகளை எனக்கு கூறி தமிழில் இருந்த ஒரு குரானையும் தந்தார் நான் அதை பக்தி பூர்வமாகவே படித்தேன் அன்றைய நிலையில் அதில் கூறப்பட்டிருந்த பல விஷயங்களுக்கு எனக்கு பொருள் புரியவில்லை காரணம் அதை மொழி பெயர்த்து இருந்தவர்களின் மொழி நடை அவ்வளவு தெளிவாக இல்லை. அதன் பிறகு குரானின் பல பிரதிகளை வாங்கி படித்து விட்டேன். அதிலுள்ள பல விஷயங்களையும் புரிந்து கொள்ளுகிற அளவிற்கும் வந்துவிட்டேன். 



இங்கே இதை ஏன் சொல்கிறேன் என்றால் குரானையும், பைபிளையும் என்னால் படிக்க முடியும், புரிந்து கொள்ள முடியும். அதன் வழியில் நடப்பதற்கு என்னால் முடியாது காரணாம் நான் பிறந்த நாள் முதல் எனது தாய், தந்தையர் எனக்கென்று ஒரு பாதையை வகுத்து கொடுத்திருக்கிறார்கள். அது எனக்கு சரியானதாகவும் சவுகரியமானதகவும் இருக்கிறது. என்னுடைய உயர்வுக்கு எனது மனசெம்மைக்கு அது ஒன்றே போதுமென்று நான் நினைக்கிறேன். இப்படி ஒவ்வொருவரும் அவரவர் மதத்தை பற்றி வழிபாட்டு பாதையை பற்றி நினைப்பதில் தவறு இல்லை என்பது எனது எண்ணம்.மீன்கள் நீரில் தான் வாழும் என்றாலும் ஆற்று மீனால் கடலில் வாழ முடியாது கடல் மீன் ஆற்றுக்கு வந்தால் மரித்து போகும் அதே போன்றது தான் மதமும், பண்பாடும் என்பது என் கருத்து.

சீடர்:-

     நீங்கள் கூறுவதை பார்த்தால் அனைத்து மதங்களும் சிறந்தவைகள் என்பதாக எடுத்து கொள்ளலாம் அதே நேரம் அவரவர் வட்டத்திற்குள் இருப்பதே மேல் என்றும் நீங்கள் கூறுவதாக கொள்ளலாம் என் வட்டம் எனக்கு சரியில்லாததாக தோன்றுகிறது. அப்படி இருக்கும் போது நான் வேறொரு வட்டத்தை தேர்ந்தடுப்பதில் என்ன தவறு? 


  
குருஜி:-

     னக்கு மஞ்சள் சொக்கா பிடிக்கவில்லை என்பதற்காக பச்சை சொக்கா போட்டு கொள்ள சகல உரிமையும் இருக்கிறது. அதாவது ஹிந்துவாக இருப்பதில் எனக்கு திருப்தி இல்லை என்றால் நான் ஒரு இஸ்லாமியனாகவோ, கிறிஸ்தவனாகவோ மாறுவதில் தவறு இல்லை அப்படி நெஞ்சார மாறினால் மட்டுமே நான் புதிதாக போகும் மதத்திற்கு விசுவாசம் ஆனவனாக இருக்க முடியும். அப்படி இல்லாமல் யாரோ ஒருவருடைய தூண்டுதலால், அல்லது வற்புறுத்துதலால் மூளை சலவையால் மதம் மாறி வந்தேன் என்று வைத்து கொள்ளுங்கள். ஒருநாள் இல்லை என்றால் இன்னொரு நாள் நான் செய்தது சரியா? என்ற எண்ணம் வரக்கூடும் அப்போது நான் என் சொந்த மதத்திற்கும் வந்த மதத்திற்கும் துரோகம் செய்தவனாகவே இருப்பேன். மதம் என்பது மனமாசுகளை அகற்றி இறைவனோடு சேர்ப்பதற்கான ஒரு கருவியே ஆகும். ஆனால் மதமாற்ற முயற்சியால் அந்த கருவியே மன ஊசலாட்டத்தை ஏற்படுத்தி விடும். 

சீடர்:-

      ரு தனிமனிதன் மதம் மாறுவதை வேண்டுமானால் உங்கள் கருத்தோடு சரிபடுத்தி கொள்ளலாம் ஆனால் நான் ஒரு புதிய பாதையை கண்டிருக்கிறேன். அந்த புதிய பாதையில் சென்றால் இறைவனை அடைய கூடிய தூரம் வெகு குறுகியதாக இருக்குமென்று கருதுகிறேன். இதனால் என்னை போல் பலரும் சுலபமாக அந்த பாதையில் பயணப்பட்டு வந்தால் நல்லது தானே என்ற எண்ணத்தில் மதமாற்றம் வேலையை செய்கிறேன் அதில் என்ன தவறு இருக்கும்? என் கருத்தை நம்புகிறவன் என்னோடு வரலாம் வராதவன் விட்டு விடலாம் நான் யாரையும் வற்புறுத்த வில்லை என்று மதம் மாற்றுகிறவர்கள் கூறுகிறார்களே அவர்கள் வாதமும் சரியாகத்தானே படுகிறது? 



குருஜி:-

     நான் பயணப்பட்ட பாதை வழியாக போனால் வெகு சுலபமாக இறைவனை தரிசனம் செய்ய முடிகிறது எனவே நீங்களும் அந்த வழிக்கு வாருங்கள் என்று ஒருவன் மற்றவனை அழைப்பது தவறு அல்ல. ஒருவிதத்தில் அது ஒரு உயர்ந்த மனப்பாங்கே ஆகும். காய்கறிகடைகாரன் கூட தன்னிடம் உள்ள கத்திரிக்காய் சிறந்தது அதை அனைவரும் வாங்குங்கள் என்று விளம்பரம் செய்யலாம் அதற்கு அவனுக்கு பரிபூரணமான உரிமை உண்டு. அந்த விளம்பரத்தை நம்புகிறவன் வாங்குகிறான் நம்பாதவன் வேறு கடையை பார்க்கிறான் இது வரையிலும் பிரச்சனை இல்லை.

பிரச்சனை எந்த இடத்தில் உதயமாகிறது என்றால் என் கடை கத்திரிக்காய் மட்டுமே சிறந்தது, பக்கத்து கடைக்காரன் கத்திரிக்காய் அத்தனையும் சொத்தை என்று கூறுகிற போது ஆரம்பித்து விடுகிறது. அதை தான் தவறு என்று சொல்கிறேன் இதுவே மதமாற்று வேலை என்று மற்றவர்களும் கூறுகிறார்கள். இன்னொரு உண்மையை இங்கு நான் தெளிவாக கூற வேண்டும். மதம் மாற்ற கூடாது என்ற எண்ணம் எனக்கு காந்தியின் புத்தகங்களை படித்த பிறகே வந்தது. அதுவரையிலும் மதமாற்றத்தை பற்றிய எதிர்ப்புணர்வு எனக்குள் முழுமையாக உருவாகவில்லை என்றே சொல்லலாம். 

ஒரு இடத்தில் காந்தி சொல்கிறார் பூமத்திய ரேகை பிரதேசத்திற்கு அருகில் வாழும் ஒருவருக்கு இடுப்பு துண்டு போதுமானது. அதே நேரம் மிகவும் குளிர்ச்சியான பகுதியில் வாழ்பவனையும் இடுப்பு துண்டு மட்டுமே அணிந்து கொள் என்று கூறுவது தவறாகும். அவனுக்கு கம்பளி சட்டை கண்டிப்பாக வேண்டும் அதே போலவே எனது சமயம் எனக்கும், அவரது சமயம் அவருக்கும் நல்லதாக இருக்கும் என்று தெளிவாக சொல்கிறார். மேலும் அவர் எல்லோரும் ஒப்புக்கொண்ட அர்த்தத்தில் ஒரு சமயத்திலிருந்து வேறொரு சமயத்திற்கு மாறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை எனது சொந்த சமயத்தை கெளரவப்படுத்துவது போல் அண்டைய வீட்டுக்காரனின் சமயத்தையும் மதிக்க வேண்டும். என் மதம் எனக்கு எப்படி உண்மையானதோ அது போலவே அந்தந்த மக்களில், சமயங்களும் அவரவர்களுக்கு உண்மையானவையே. உலகத்தில் உள்ள எல்லா பெரிய சமயங்களையும் நான் அவ்விதமே கருதுகிறேன்.

எல்லா சமய நூல்களையும் நான் வாசித்திருக்கிறேன் எனவே அவை எல்லாவற்றிலும் உள்ள சிறப்புகளை புரிந்து கொள்வதில் எனக்கு கஷ்டமில்லை என்னுடைய மதத்தை மாற்றிக்கொள்ள எப்படி என் மனதினாலும் எண்ண முடியாதோ அவ்விதமே ஒரு கிறிஸ்தவரையோ, முஸ்லீமையோ, யூதரையோ அவரது மதத்தை மாற்றிக்கொள்ளும் படி மனதாலும் எண்ண மாட்டேன். சொல்ல மாட்டேன். என் மதத்தை பின்பற்றுவோரின் மோசமான குற்றம், குறைகளை மறந்து நான் பேசவில்லை அதே போலவே மற்ற மதங்களை பின்பற்றுவோரின் குறைகளையும் நான் மறந்து விடவில்லை. எனது மதத்தின் உயர்ந்த அளவிற்கு எனது செயல்களை கொண்டு வரவும் என் மதத்தை சேர்ந்த மற்றவர்களுக்கு அவற்றை உபதேசிக்கவும் என் சக்தி முழுவதையும் நாம் உபயோகிக்க வேண்டியிருக்கிறது. எனவே நான் மற்ற மதத்தாருக்கு உபதேசிக்க வேண்டுமென கனவிலும் நினைக்கவில்லை. 

நம்மைப்பற்றி பிறர் நினைக்க விரும்பாததை நாமும் பிறரை பற்றி நினைக்க கூடாது என்பது சிறந்த கொள்கையாகும். இந்தியாவில் உள்ள பெரிய பண பலம் வாய்ந்த கிறிஸ்தவ சங்கங்களை சேர்ந்தவர்கள் இந்தியர்களை மதமாற்றம் செய்யும் அந்தரங்க நோக்கமின்றி ஜீவகாருண்ய தொண்டில் மட்டுமே ஈடுபடுபவர்களானால் அவர்கள் குறைந்த பட்சம் இந்தியாவில் உள்ள கள்ளம், கபடம் அற்ற கிராம வாசிகளையாவது மதமாற்ற முயற்சிக்காமலும், கிராமங்களின் சமுதாய பண்பாட்டு அமைப்புகளை சீரழிக்கமலும் இருக்கலாம். அப்படி இருந்தால் அதுவே அவர்கள் செய்யும் மிகபெரிய தொண்டாகும். கிராமங்களில் குற்றம் குறைகள் இருக்கலாம் உடைத்தெறிய படவேண்டிய பல கோளாறுகள் இருக்கலாம். ஆனாலும் அவர்கள் உள்ளே இருந்தும் வெளியிலிருந்தும் வருகின்ற பல சோதனைகளை தங்களது சமுதாய ஒற்றுமையாலும் பண்பாட்டு செழுமையாலுமே எதிர்கொண்டு வருகிறார்கள். 

இந்திய மக்களிடத்தில் மிக ஆழமாக வேரோடி போயிருக்கும் இந்து மத நம்பிக்கைகளை இந்து மத பண்பாட்டை படித்த மேதாவிகளாலும் கிருஸ்தவ பாதிரிகளாலும் ஒருபோதும் மாற்ற முடியாது. அது உண்மையாகவே என்றும் நிலைத்து நிற்கும் அதை மாற்ற கூடிய சக்தி யாரிடத்திலும் இல்லை என்பது எனது கருத்து என்று மிக தெளிவாக அழுத்தம் திருத்தமாக காந்தியடிகள் கூறி இருக்கிறார். இவரின் கருத்தை முழுமையாக உள்வாங்கி கொண்டபிறகே மதமாற்றம் என்பது ஒரு சமுதாய சீர்கேடு என்பதை நான் அறிந்து கொண்டேன். அதை தெளிவாகவும் உறுதியாகவும் மறுப்பதற்கும் எதிர்பதற்கும் இறைவன் எனக்கு பலத்தை கொடுத்திருக்கிறான் என்று நம்புகிறேன். 

இப்படி நான் சொல்வதானால் என்னை ஹிந்துத்துவாவாதி என்று சிலர் நினைக்கலாம். அதை பற்றி நான் கவலைப்படவில்லை. வேறு சிலர் என்னை ஆர்.எஸ்.எஸ் அனுதாபி என்று கருதலாம் அதை நான் ஒத்துகொள்ள முடியாது காரணம் என்னுடைய சொந்த கருத்துக்களுக்கும், சங்கத்தின் கருத்துக்களுக்கும் பல வேறுபாடுகள் இருக்கிறது அவர்களோடு நான் சில வகையில் ஒத்து போனாலும் பல வகையில் வேறுபடுகிறேன். மிக குறிப்பாக சொல்வது என்றால் இந்தியாவில் இருக்கும் அனைத்து மதத்தினரும், அவரவர் மதங்களை சுதந்திரமாக கடைபிடிக்க வேண்டும். அனைவருக்கும் ஜனநாயக மரபுப்படி சம உரிமைகள் எப்போதும் கிடைக்க வேண்டும். அனைத்து மதத்தினரும் ஒன்றுபட்டு ஒருங்கிணைந்து வாழ வேண்டும் என்பது எனது எண்ணம். ஆனால் சங்கம் செயலளவில் அந்த கருத்துக்களை இதுவரை நடைமுறை படுத்தவில்லை அதனாலேயே அவர்கள் சமூகத்திலிருந்து சற்று விலகி இருக்கிறார்.



தெளிவாக சொல்வது என்றால் இங்குள்ள இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் இந்தியர்களே அவர்கள் அந்நிய நாட்டிலிருந்து வந்த மனிதர்களால் மதமாற்ற பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் அந்நியர்கள் அல்ல. மதம் மாறியதற்கு அவர்கள் மட்டுமே முழு பொறுப்பாளியும் அல்ல. எந்த இஸ்லாமியனும், இந்துக்களை விட்டு விலகி தனியாக வாழ இந்தியாவில் நினைக்கவில்லை. சில தலைவர்கள் அதாவது ஜின்னா போன்ற தலைவர்களின் தவறான கணக்குகளால் தான் பல இஸ்லாமியர்கள் நம்மிடமிருந்து பிரிந்தார்கள் இன்று இருப்பவர்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரை தவிர மற்ற அனைவருமே பாரத நாட்டின் உண்மையான மைந்தர்களாகவே இருக்கிறார்கள். நமது வீட்டில் அழுது அடம்பிடிக்கிற ஒரு குழந்தைக்காக சில சுகங்களை நாம் விட்டு கொடுத்து வாழ்வது இல்லையா? அதே போல சிறுபான்மை மக்களுக்காக அவர்களது அச்சத்தை போக்குவதற்காக சிலவற்றை விட்டு கொடுப்பதில் தவறுகள் இல்லை. 

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சில நேரம் எப்படி மதவாதம் பேசுகிறதோ, அதே போலவே பல இஸ்லாமிய அமைப்புகளும் மதவாதம் பேசுவதை மறுக்க முடியாது இரண்டுபேருமே ஒரு மேஜையில் உட்கார்ந்து பேசி தங்களுக்குள் இருக்கின்ற அச்சங்களை விலக்கி கொள்ள வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே விவேகானந்தர் சொன்னபடி இஸ்லாமியனின் உடல்பலமும் ஹிந்துவின் மூளை பலமும் சேர்ந்து சிறந்த இந்தியாவை உருவாக்கும் என்பது எனக்குள் இருக்கும் உறுதியாகும். நமக்குள் இருக்கும் வேற்றுமைகளை புறம் தள்ளினால் மட்டுமே காந்தி கூறிய அஹிம்சை வழியை இந்தியாவின் ஜீவாதாரமாக கொண்டு வந்து ஒட்டுமொத்த உலகத்தையே நம்மை நோக்கை வரும்படி செய்ய முடியும். 
  
சீடர்;-

       ப்போது தெளிவாக புரிகிறது காந்தியின் கொள்கையும், உங்களது கருத்தும் எந்த வகையில் ஒத்து போகிறது என்பது காந்தியம் என்று பலராலும் சொல்லபடுகிறதே அப்படி என்றால் என்ன? அதை நாங்கள் புரிந்து கொள்ளும் படி தயவு செய்து கூறுங்கள். 

குருஜி கூற துவங்கினார்...



Contact Form

Name

Email *

Message *