Store
  Store
  Store
  Store
  Store
  Store

காலசர்பதோஷத்திற்கு பரிகாரம்   குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம். என் ஜாதகத்தில் காலசர்ப தோஷம் இருப்பதாக சொல்கிறார்கள். அந்த தோஷம் நீங்க எதாவது பரிகாரம் உண்டா? உண்டு என்றால் எனக்கு கூறி உதவி செய்யுங்கள் அது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் காரணம் காலசர்பதோஷ பாதிப்போடு இருக்கும் பலர் நிவாரணம் பெற வழி தெரியாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள். 

இப்படிக்கு, 
கமலக்கண்ணன், 
வந்தவாசி.    னைத்து கிரகங்களும் ராகு, கேதுகளுக்கு இடையில் மாட்டிகொண்ட விதத்தை காலசர்ப தோஷம் என்று சொல்கிறார்கள். இவர்களுடைய வாழ்வு பாம்புகளுக்கு மத்தியில் அகப்பட்டு கொண்ட தவளை போல இருக்கும் என்றும் பலர் கருதுகிறார்கள். அந்த தோஷத்தின் பலாபலன்களை அனுபவித்தவர்களும் தான் படுகின்ற பாடுகளை நினைத்து புலம்புகிறார்கள். 

என்னை கேட்டால் ஒரு மனிதனுக்கு துன்பம் வருவதற்கு காலசர்ப தோஷம் மட்டும் காரணம் இல்லை அவைகளையும் தாண்டி வேறு சில விஷயங்கள் இருக்கிறது என்பேன். காரணம் சிலர் வாழ்க்கையில் நல்ல விதமாகவே வாழ்கிறார்கள். அவர்களுக்கு காலசர்ப தோஷம் இருப்பதை நாம் சொன்ன பிறகு தான் அப்படி ஒன்று தனது ஜாதகத்தில் இருக்கிறதா என்று கேட்கிறார்கள். அதாவது விஷயம் தெரியும் வரையில் அவர்களுக்கு சங்கடங்கள் இல்லை என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

காலசர்பதோஷம் அனைவருக்கும் பொத்தாம் பொதுவாக தீமை செய்வது கிடையாது. யாருடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய அமைப்பு பாதிப்படைந்து இருக்கிறதோ அவருக்கு இந்த தோஷமிருந்தால் அதிகப்படியான பாதிப்பு இருக்கிறது மற்றவர்களுக்கு அதன் சாயலே கூட தெரிவதில்லை.

எது எப்படி இருந்தாலும் என்ன பரிகாரம் செய்தாலும் முப்பத்து மூன்று வயது வரை காலசர்பதோஷத்தின் தாக்கம் இருக்கும். அதன் பிறகு அது தானாகவே மாறிவிடும் பரிகாரங்கள் அதற்கு அவசியமில்லை. இருந்தாலும் முருகப்பெருமானின் சடாட்சர மந்திரத்தை தினசரி “முப்பத்தி ஏழு” முறை பாராயணம் செய்து வந்தால் மேற்கண்ட தோஷத்தின் பாதிப்பு குறையுமென்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.  Contact Form

Name

Email *

Message *