Store
  Store
  Store
  Store
  Store
  Store

சரும நோய் நீங்க பரிகாரம்
   குருஜி ஐயா, எனக்கு அடிக்கடி சரும சம்மந்தப்பட்ட நோய் வருகிறது. பல வைத்தியங்கள் செய்து பார்த்து விட்டேன். பெரிய அளவில் பயனில்லை. என் ஜாதகத்தில் ராகு தோஷம் இருப்பதாகவும், இதனால் தான் இந்த நோய் வருகிறது என்றும் சமீபத்தில் அறிந்து கொண்டேன். அந்த தோஷத்தை நீக்க நான் என்ன செய்யவேண்டும்? சரியான வழியை காட்டி என்னை வாழ்விக்குமாறு தாழ்மையோடு வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
கதிரேசபாண்டியன்,
டென்மார்க்ராகுவும், செவ்வாயும் ஒரு ஜாதகத்தில் கெட்டுப்போயிருந்தால், தோல்நோய் வருமென்று கூறுவார்கள். அதாவது செவ்வாய் நமது இரத்தத்தை ஆதிக்கம் செலுத்துவதனாலும் ராகு, நமது தோலை ஆதிக்கம் செலுத்துவதாலும் அவர்கள் பலம் இழக்கும் போது இத்தகைய குறைபாடுகள் ஏற்படுகிறது. 

எனவே அதை போக்கி கொள்ள சனிக்கிழமையில் ராகுகால நேரத்தில் சிவன் கோவில்களில் உள்ள நவக்கிரக சன்னதியில் இருக்கும் ராகு பகவானை தரிசனம் செய்து நெய்விளக்கு ஏற்ற வேண்டும். இப்படி தொடர்ந்து பதினெட்டு வாரங்கள் செய்து வந்தால் நோயின் வீரியம் குறைந்து சுகம் கிடைக்குமென்று அனுபவசாலிகள் கூறுகிறார்கள். செய்து பாருங்கள் பலன் உண்டு.Contact Form

Name

Email *

Message *