இந்தியாவின் அரசியல் நிலையை, அரசியல் கலக்காமல் சொல்லமுடியுமா?
இப்படிக்கு,
ஸ்டிபன்,
உவரி.
இன்றைய நிலையில் உண்பது, உறங்குவது கூட அரசியலாகி விட்டது. இதில் அரசியல் கலவாமல் எழுதுவது எப்படி? சற்று சிரமம் தான் இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கிறேன் வருகிறதா என்பதை பார்ப்போம்.
மக்கள் அமைதியாக தங்கள் வேலையை கவனித்தால் அரசியல் நன்றாக இருப்பதாக அர்த்தம். அவ்வபோது அவர்கள் விவாதங்களில் ஈடுபட்டால் அரசியல் இழுபறியாக இருப்பதாக அர்த்தம். அதே மக்கள் கைகட்டி கொண்டு வேடிக்கை பார்த்தால் அரசியல் முற்றிலுமாக சிதறிவிட்டது என்று எடுத்து கொள்ளலாம்.
இன்று வேடிக்கை பார்ப்பவர்கள் நகரங்களில்; மட்டுமல்ல கிராமங்களில் சந்து பொந்துகளிலும் நிறைந்து விட்டார்கள் போதுமா? இப்போது நான் அரசியல் பேசாமல் பேசிவிட்டேன்.